ஐயப்பனை தரிசிக்க இளம்-பெண்கள் ஆன்லைனில் 539 பேர் முன்பதிவு.!

தற்போது சூறாவளி போல் சபரிமலை ஐயப்பன் கோயில் பிரச்னை உருவெடுத்துள்ளது. இந்நிலையில் அனைத்து வயது பெண்களும் சுவாமி ஐயப்பனை தரிசிக்க ஆவலுடன் உள்ளனர். மேலும், கோயிலுக்கு கென்றும் ஆகம விதிகள் உள்ளதால், ஏர

|

தற்போது சூறாவளி போல் சபரிமலை ஐயப்பன் கோயில் பிரச்னை உருவெடுத்துள்ளது. இந்நிலையில் அனைத்து வயது பெண்களும் சுவாமி ஐயப்பனை தரிசிக்க ஆவலுடன் உள்ளனர்.

மேலும், கோயிலுக்கு கென்றும் ஆகம விதிகள் உள்ளதால், ஏராளமான இந்து பெண்களும் கோயிலுக்கு செல்ல விரும்பவில்லை. இந்நிலையில் வேற்று மதத்தை சார்ந்த பெண்களும், பெண்ணியல் வாதிகளும் ஐயப்பனை தரிசிக்க தற்போது முன்வந்துள்ளனர்.

ஐயப்பனை தரிசிக்க இளம்-பெண்கள் ஆன்லைனில் 539 பேர்  முன்பதிவு.!

மேலும், இந்து அமைப்புகளும், ஐயப்பசுவாமி பக்தர்களும் இதற்கு எதிராக போர்க்கொடி தூக்கி உள்ள நிலையில், தற்போது ஆன்லைனில் இளம் வயது பெண்கள் ஏராளமானோர் உச்ச நீதிமன்ற உத்தரவை முன் வைத்து, 539 பேர் முன்பதிவு செய்துள்ளனர்.

நடைமுறையை மாற்றிய நீதிமன்றம்:

நடைமுறையை மாற்றிய நீதிமன்றம்:

சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு, ஒரு வயது முதல் 8 வயது வரையும், 50 வயதுக்கு மேற்பட்ட பெண்களும் தான் சபரிமலை செல்ல வேண்டும் என்று ஆகம விதிகள் இருக்கின்றன. இதை எதிர்த்து அனைத்து வயது பெண்களும் சபரிமலைக்கு செல்ல அனுமதிக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இதற்கு உச்சநீதிமன்றமும் அனுமதி அளித்தது.

இந்து அமைப்புகள் எதிர்ப்பு:

இந்து அமைப்புகள் எதிர்ப்பு:

இருப்பினும் இந்து அமைப்புகள் மற்றும் பல்வேறு அரசியல் கட்சிகள் பெண்களை அனுமதிக்க எதிர்ப்பு வருகின்றனர். கடந்த முறை சபரிமலை நடை திறக்கப்பட்ட போது, ஐயப்பன் கோவிலுக்குச் சென்ற பெண்களை பக்தர்கள் தடுத்து நிறுத்தினர்.

ஆன்லைனில் முன்பதிவு:

ஆன்லைனில் முன்பதிவு:

இந்நிலையில் வருடாந்திர கொண்டாட்டத்தை ஒட்டி, சபரிமலைக்கு செல்வதற்கான ஆன்லைன் முன்பதிவு கடந்த வாரம் தொடங்கியது. அதில் 10 முதல் 50 வயது வரை உள்ள 539 பெண்கள் பதிவு செய்துள்ளனர்.

நடை திறப்பு:

நடை திறப்பு:

வரும் 16ஆம் தேதி ஐயப்பன் கோவில் திறக்கப்பட உள்ளது குறிப்பிடத்தக்கது. இந்த தரிசனத்திற்காக மொத்தம் 3.5 லட்சம் பேர் பதிவு செய்துள்ளனர். இந்நிலையில் சபரிமலைக்கு வருபவர்களுக்கு புதிய விதிமுறைகளை போலீசார் அறிவித்துள்ளனர்.

 சட்டம் ஒழுங்கு பிரச்னை:

சட்டம் ஒழுங்கு பிரச்னை:

அதன்படி, சபரிமலைக்கு வரும் ஒவ்வொரு வாகனங்களும் போலீஸ் பாஸ் வாங்க வேண்டும். கடந்த அக்டோபரில் 6 நாட்களும், நவம்பரில் 2 நாட்களும் கோவில் நடை திறக்கப்பட்ட போது, பல்வேறு சட்ட, ஒழுங்கு பிரச்சனைகளை போலீசார் சந்தித்தனர்.

தரிசனத்திற்கு  பெண்கள் ஆர்வம்:

தரிசனத்திற்கு பெண்கள் ஆர்வம்:

இந்த சூழலில் நவம்பர் 13ஆம் தேதி திறக்கப்படும் ஐயப்பன் கோவிலிற்கு ஏராளமான பெண்கள் விருப்பம் தெரிவித்துள்ளதால், போலீசார் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளனர்.

இந்த லிக்கில் சென்று ஆன்லைன் புக்கிங் என்று இருக்கும் அதில் முன்பதிவு செய்து கொள்ளலாம். https://www.sabarimalaq.com/content/virtual-q.html.

Best Mobiles in India

English summary
Young girls are booking online for darshan : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X