நெட்டிசன்ஸ்களின் மனதை வென்ற இளம் பெண்! என்ன செய்தார் தெரியுமா?

|

அகமதாபாத்தில் போக்குவரத்து நெரிசலுக்கு இடையில், சிக்னலில் இருக்கும் குழந்தைகளுக்கு இளம் பெண் ஒருவர் பிஸ்கட் விநியோகிக்கும் புகைப்படம் நெட்டிசன்ஸ்களின் மனதை வென்றுள்ளது. இந்த இளம் பெண் பிஸ்கட் விநியோகிக்கும் புகைப்படம் சமூக வலைத்தளம் முழுதும் வைரல் ஆகிவருகிறது.

மனிதக்குலத்தின் சிறந்த வடிவம் இதுதான்

மனிதக்குலத்தின் சிறந்த வடிவம் இதுதான்

கருணை என்பது மனிதக்குலத்தின் சிறந்த வடிவம் என்று அமெரிக்க ஓவியர் டோரிஸ் லீ பல தசாப்தங்களுக்கு முன்னர் கூறியிருந்தார். அதற்கு எடுத்துக்காட்டாக அகமதாபாத்தில் போக்குவரத்து சிக்னலில் ஒரு இளம் பெண், குழந்தைகளுக்கு பிஸ்கட் விநியோகிக்கும் புகைப்படம் தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வேகமாகப் பகிரப்பட்டு வருகிறது.

யார் இந்த கருணை தேவதை?

யார் இந்த கருணை தேவதை?

யார் இந்த கருணை தேவதை? எங்கிருந்து வந்தால் என்று யாருக்கும் தெரியவில்லை. ஆனால் இவர் செய்துள்ள, இந்த அன்பான செயல் நெட்டிசன்ஸ்களின் மனதைக் கவர்ந்துள்ளது. இவரின் உண்மை அடையாளத்தைப் பலரும் வலைத்தளத்தில் தேடி வருகின்றனர்.

யுபிஐ எச்சரிக்கை: உடனே உஷார் ஆகிக்கொள்ளுங்கள் இல்லைனா பணம் அபேஸ்!யுபிஐ எச்சரிக்கை: உடனே உஷார் ஆகிக்கொள்ளுங்கள் இல்லைனா பணம் அபேஸ்!

இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்) அதிகாரி

இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்) அதிகாரி

இந்த புகைப்படத்தைத் தனது டிவிட்டர் பக்கத்தில் இந்திய நிர்வாக சேவை (ஐ.ஏ.எஸ்) அதிகாரி தேவ் சவுத்ரி என்பவர் பகிர்ந்துள்ளார். இவரின் பதிவில் மகாத்மா காந்தியை கூறிய வாசகத்தையும் பதிவிட்டு இந்த பெண்ணின் புகைப்படத்தைப் பதிவிட்டுள்ளார்.

நிலவை நெருங்கும் சந்திரயான் 2! அடுத்து நடக்கப்போவது என்ன தெரியுமா?நிலவை நெருங்கும் சந்திரயான் 2! அடுத்து நடக்கப்போவது என்ன தெரியுமா?

காந்தியின் வாசகத்திற்கு கீழ் இளம் பெண் பதிவு

"உங்களின் உண்மை உருவத்தைக் கண்டுபிடிப்பதற்கான சிறந்த வழி, மற்றவர்களின் சேவையில் உங்களை இழப்பதுதான்" என்ற காந்தியின் வாசகத்திற்கு கீழ் தேவ் சவுத்ரி பதிவிட்டுள்ள இந்த இளம் பெண்ணின் பதிவை ஏராளமானோர் லைக் செய்தும், ரீட்வீட் செய்தும் வருகின்றனர்.

பிளாக் ஷார்க் 10000எம்ஏஎச் பவர் பேங்க் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?பிளாக் ஷார்க் 10000எம்ஏஎச் பவர் பேங்க் அறிமுகம்: விலை எவ்வளவு தெரியுமா?

பாராட்ட வார்த்தைகள் இல்லை

பாராட்ட வார்த்தைகள் இல்லை

அதில் சில நெட்டிசன்ஸ்கள் அந்த இளம் பெண்ணை வேறு ஒரு சிக்னலிலும் குழந்தைகளுக்கு பிஸ்கட் வழங்கிய பொது பார்த்ததாக தெரிவித்துள்ளனர். அதேபோல் இன்னும் சிலர், இவர் சில தெருக்களில் வாழும் நாய்களுக்கும் பிஸ்கட் கொடுப்பதைப் பார்த்ததாக கமெண்ட்டில் தெரிவித்துள்ளனர். நெட்டிசன்ஸ்களின் நெஞ்சைக் கவர்ந்த இளம் பெண்ணை பாராட்ட வார்த்தைகள் இல்லை.

Best Mobiles in India

English summary
Young Girl Who Won The Hearts Of The Netizens Do You Know What She Did : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X