10 கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஃபேஸ்புக்!

By Super
|

10 கோடி மக்களால் பயன்படுத்தப்பட்டு வரும் ஃபேஸ்புக்!
எலக்ட்ரானிக் சாதனங்கள் பற்றியும், சோஷியல் மீடியா பற்றியும் தினம் தினம் புதுமையான தகவல்களை மக்கள் எதிர் பார்த்த வண்ணம் இருக்கின்றனர். இந்த எதிர் பார்ப்புக்கு சரியான தகவல்களை கொடுத்து மக்களின் இதய துடிப்பை அதிகரிக்க இங்கே ஒரு புதிய தகவல் பகிர்ந்து கொள்ளப்படுகிறது.

ஃபேஸ்புக் இப்பொழுது 1 பில்லியன் மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதாவது பத்து கோடி பேரால் வரவேற்கபட்டுள்ளது ஃபேஸ்புக்.

கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் வரை 800 மில்லியன் மக்கள் ஃபேஸ்புக்கில் அக்கவுன்டு ஆரம்பித்து பயன்படுத்தி வருகின்றனர். இந்தியாவில் ஃபேஸ்புக் பயன்படுத்துபவர்கள் 3% சதவிகிதம் பேர்.

பிரேசில் நாட்டில் ஃபேஸ்புக் 16% மக்களால் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இந்த சதவிகித கணக்கு இன்னும் சிறிது மாதங்களிலோ அல்லது சில ஆண்டுகள் கழித்தோ பல மடங்கு அதிகமாக வாய்ப்பு இருக்கிறது. மற்ற நாடுகளுக்கு ஒப்பிட்டு பார்க்கையில் இந்தியாவில் ஃபேஸ்புக்கின் பயன்பாடுகள் குறைவுதான். உதாரணத்திற்கு லண்டனில் 47% மற்றும் அமெரிக்காவில் 49% சதவிகிதம் மக்கள் பயன்படுதுகின்றனர்.

ஃபேஸ்புக் பற்றிய ஒரு புதிய புள்ளி விவரமே தற்சமயம் வெளி வந்துள்ளது. டிவிட்டர் இதுவரை 100 மில்லியன் மக்களாலும், கூகுள்+ 130 மில்லியன் மக்களாலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இது சம்மந்தமாக ஆராய்ந்ததில் தெரிய வந்தது, இந்த ஆண்டின் முடிவில் கூகுள்+, 400 மில்லியன் மக்களால் பயன்படுத்தப்படும் என்று தகவல்கள் வெளியாகி உள்ளன.

இது போன்ற புள்ளி விவரங்கள் வருவதற்கு காரணம் அதை பயன்படுத்தும் மக்களின் ஆர்வம் தான். இன்றளவில் மின்னனு சாதனங்களும், அதன் மூலம் பெறுகி வரும் சேவைகளும் எண்ணில் அடங்காதது. இப்பொழுது உள்ள புதிய தலைமுறை அதிகம் தொழில் நுட்ப சேவைகளில் ஆர்வம் கொண்டவர்களாக இருக்கின்றனர்.

இந்த ஆர்வம் தான் ஃபேஸ்புக் , டிவிட்டர் போன்ற வசதிகள் பெருகி வருவதற்கும், அதன் புள்ளிவிவர பட்டியல் முன்னேற்றத்தை காட்டுவதற்கும் காரணம். சோஷஇயல் மீடியோ போன்ற சேவைகளால் பல சிரப்பான தகவல் பரிமாறல்கள் நடக்கிறது என்றால் அது நிச்சயம் வரவேற்கதக்க விஷயமாக கருதப்படுகிறது.

Best Mobiles in India

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X