முகப்புத்தகத்தை இனி முகம் பார்த்தும் ஓப்பன் செய்யலாம்

By Siva
|

தமிழில் முகப்புத்தகம் என்று கூறப்படும் ஃபேஸ்புக்கில் லாகின் செய்யும்போது பாஸ்வேர்டு மறந்துவிட்டால் என்ன செய்வது? பாஸ்வேர்டை ரிகவர் செய்ய பல வழிகள் இருந்தாலும் தற்போது ஒரு புதிய வசதியை ஃபேஸ்புக் தரவுள்ளது. அதாவது இனிமேல் ஃபேஸ்புக்கை ஓப்பன் செய்ய பாஸ்வேர்டு தேவையில்லை. ஃபேஸியல் மூலமே இனிமேல் ஒப்பன் செய்யலாம்

முகப்புத்தகத்தை இனி முகம் பார்த்தும் ஓப்பன் செய்யலாம்

டெக் கிரன்ஸ் மற்றும் மட் நவாரா ஆகியோர்களின் தகவலின்படி இனிமேல் ஃபேஸ்புக்கை ஃபேஸியல் மூலமே ஓப்பன் செய்யலாம் என்ற தகவலை ஸ்க்ரீன்ஷாட் மூலம் உறுதி செய்துள்ளனர்.

ஒருவருடைய முகத்தை மொபைல்போன் கேமிரா மூலம் படம் பிடித்து அதன் மூலம் அவருடைய ஃபேஸ்புக் அக்கவுண்டை ஓப்பன் செய்யும் திட்டம்தான் இது. ஆனால் இந்த வசதி ஏற்கனவே அந்த மொபைல் போனில் நீங்கள் ஃபேஸ்புக் அக்கவுண்டை பயன்படுத்தியிருந்தால் மட்டுமே செயல்படும்

ஏர்டெல் & ஜியோவின் உண்மையான வேகம், நெட்வெர்க் தரம் என்ன.? அம்பலப்படுத்திய ஓப்பன்சிக்னல்.!ஏர்டெல் & ஜியோவின் உண்மையான வேகம், நெட்வெர்க் தரம் என்ன.? அம்பலப்படுத்திய ஓப்பன்சிக்னல்.!

தற்போது ஃபேஸியல் மூலம் ஃபேஸ்புக் அக்கவுண்டை ஒப்பன் செய்யும் வசதி ஒருசிலருக்கு மட்டுமே சோதனை அடிப்படையில் கொடுக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் இந்த வசதியின் நிறை, குறைகளை கண்டறிந்து மிக விரைவில் அனைவருக்கும் இந்த வசதி அளிக்கப்படும், மேலும் இந்த வசதியின் மூலம் நீங்கள் நிஜமாகவே உங்கள் முகத்தை ஸ்கேன் செய்தால் மட்டுமே அக்கவுண்டை ஓப்பன் செய்ய முடியும்.

உங்களுடைய புகைப்படத்தை ஸ்கேன் செய்து ஓப்பன் செய்ய முடியாது. பாதுகாப்பு காரணத்திற்காகவே இந்த டெக்னாலஜி பயன்படுத்தப்படுகிறது.

நீங்கள் உங்கள் கேமிரா மூலம் உங்கள் முகத்திற்கு நேராக வைத்து ஸ்கேன் செய்தால், ஃபேஸ்புக் டெக்னாலஜி உங்கள் முகத்தை ஸ்கேன் செய்து ஏற்கனவே நீங்கள் உங்கள் அக்கவுண்டில் பதிவு செய்யப்பட்டிருக்கும் உங்கள் புகைப்படம் அல்லது வீடியோவுடன் ஒப்பிட்டு சரியாக இருந்தால் உங்கள் அக்கவுண்ட் ஓப்பன் ஆகும்.

ஆனால் ஃபேஸ்புக்கை பொருத்தவரையில் இந்த ஃபேஸியல் ஸ்கேன் என்பது புதிதல்ல. கடந்த சில வருடங்களாக புகைப்படங்களை டெக் செய்வதற்கு இந்த வசதி பயன்படுத்தப்பட்டு வருகிறது.

ஒருவர் புகைப்படங்களை ஃபேஸ்புக்கில் அப்லோடு செய்யப்படும் போது ஃபேஸ்புக் தானாகவே அப்லோடு செய்பவரின் நண்பர்கள் லிஸ்ட்டில் அந்த புகைப்படம் இருக்கின்றதா? என்பதை சோதனை செய்யும்

எனவே இந்த ஃபேஸியல் முறையில் லாகின் செய்யும் திட்டம் நிச்சயம் வெற்றி பெறும் என்றே எதிர்பார்க்கப்படுகிறது. இந்த புதிய வசதி குறித்து உங்கள் கருத்து என்ன? கமெண்ட் பாக்ஸில் தெரிவிக்கவும்

Best Mobiles in India

Read more about:
English summary
Facebook has to make sure that the facial scanning feature to unlock an account is reliable.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X