ஒரு இன்ஸ்டாகிராம் போட்டோவிற்கு 9000 டாலர்கள் சம்பாதிக்கும் காதல் ஜோடி.!

|

கடந்த ஆண்டு, தென் பசுபிக் கடல் பகுதியில் உள்ள ஒரு நாடான பிஜி தேசத்தில் சந்தித்துக் கொண்டதில் இருந்து ஜாக் மோரிஸ் மற்றும் லாரன் புல்லென் ஆகிய இருவரும் பெரும்பாலான மக்கள் கனவில் வாழும் ஒரு வாழ்க்கையை நிஜத்தில் வாழ்ந்துக் கொண்டிருக்கும் - ஒரு காதல் ஜோடி ஆவர்.!

இவர்கள் அனுதினமும் தங்கள் வாழ்க்கையை, தங்களின் பயணங்களை புகைப்படங்கள் மூலம் ஆவணப்படுத்துவது மட்டுமின்றி அவர்கள் பதிவிடும் ஒவ்வொரு இன்ஸ்டாகிராம் போட்டோவிற்கும் சுமார் 9000 அமெரிக்க டாலர்கள் வரை சம்பாதிக்கிறார்கள். அதை அவர்கள் எப்படி நிகழ்த்துகிறார்கள்.?

பாலோவர்கள்

பாலோவர்கள்

ஜாக் இப்போது 2 மில்லியன் இன்ஸ்டாகிராம் பாலோவர்கள் கொண்டுள்ளார் மற்றும் லாரன் கிட்டத்தட்ட 1.2 மில்லியன் பாலோவர்கள் கொண்டுள்ளார்.

ஸ்பான்சர்

ஸ்பான்சர்

இந்த ஜோடி பிரபல பிராண்ட் நிறுவனங்கள் மற்றும் உலகம் முழுவதும் உள்ள சுற்றுலா நிறுவனங்களிடம் இருந்து போதுமான ஸ்பான்சர் பெற்று அதில் இருந்தே பணம் சம்பாதிக்கின்றன.

புகழின் உச்சி

புகழின் உச்சி

இதை இவர்கள் சாத்தியபடுத்தியது எப்படி என்ற கேள்விபதில் நிகழ்ச்சி ஒன்றில் இன்ஸ்டா-பிரபலமான ஜாக், அவர் புகழின் உச்சிக்கு அழைத்து செல்ல உதவிய சில குறிப்புகளை நம்மோடு பகிர்ந்து கொள்கிறார்.

எடிட்

எடிட்

"நாங்கள் எடுக்கும் பூஜிப்படங்களை நான் என் சொந்த லைட்ரூம் (Lightroom) ப்ரீசெட்கள் கொண்டு ஒரே மாதிரியான பாணியில் தான் அனைத்து போட்டோக்களையும் எடிட் செய்வேன். குறிப்பாக புகைப்படத்தோடு பொருந்தும் ஒரு ட்ரீமியான (கனவு மிகுந்த) விளைவை புகைப்படத்தில் கொண்டு வருவேன்"

1 மணி நேரம்

1 மணி நேரம்

மேலும் இந்த ஜோடி, சூரிய உதயத்திற்குப் பிறகு சுமார் 1 மணி நேரம் கழித்த என்ற பெரும்பாலும் மிக அமைதியான ஒரு நேரத்தையே புகைப்படங்கள் எடுக்க பயன்படுத்தும் நேரம் இனத்தையும் வெளிப்படுத்தியுள்ளது.

ஒரு போட்டோவிற்கு

ஒரு போட்டோவிற்கு

எல்லாவற்றிற்கும் மேலாக, அதிகாரப்பூர்வமாக இந்த ஜோடி ஒரு போட்டோவிற்கு 3000 அமெரிக்க டாலர்களுக்கு குறைவாக ஏற்றுக்கொள்ளாது என்பதும் இங்கே குறிப்பிடத்தக்கது.

அனுதினமும்

அனுதினமும்

இந்த ஜோடியின் குறைபாடற்ற இன்ஸ்டாகிராம் புகைப்படங்கள் தங்கள் பக்கங்களை பின்பற்றும் மில்லியன் கணக்கான மக்களை அனுதினமும் ஈர்க்க தவறுவதில்லை.

சில நேரங்களில்

சில நேரங்களில்

பிரபல பிராண்ட் நிறுவனங்கள் மற்றும் சுற்றுலா நிறுவனங்கள் ஆகியவைகள் சில நேரங்களில் 9000 டாலர்களுக்கும் மேலான பணத்தை இவர்களின் ஒவ்வொரு புகைப்படத்திற்கு செலுத்துகின்றது

5 ஆண்டுக்ளுக்கு முன்னர்

5 ஆண்டுக்ளுக்கு முன்னர்

26 வயது நிரம்பிய ஜாக், 2012-இல் அதாவது 5 ஆண்டுக்ளுக்கு முன்னர் மான்செஸ்டரில் கார்பெட் க்ளீனராக பணியாற்றியவர் என்பது குறிப்பிடத்தக்கது. 23 வயது நிரம்பியா லாரன் ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த ஒரு சுய கற்று புகைப்படக்கலைஞர் ஆவார். இந்த ஜோடி, அவர்களின் புகைப்படங்களை ட்ரைபாட் மற்றும் டைமர் ரிமோட்கள் பயன்படுத்தி தாங்களே எடுத்துக் கொள்கின்றன.

டூ யூ ட்ராவல்

டூ யூ ட்ராவல்

என்பது மேலும் சிறப்பான ஒரு விடயமாகும்.
ஜாக், டூ யூ ட்ராவல் (DoYouTravel) என்ற ஒரு வலைப்பதிவையும் பராமரிக்கிறார்.

வடிகட்டி

வடிகட்டி

"நான் என் மேக்புக் புரோவில் உள்ள போட்டோஷாப் லைட் ரூம் பயன்படுத்துவேன் வேறு எந்த மொபைல் பயன்பாடுகள் அல்லது வடிகட்டிகளை பயன்படுத்த மாட்டேன்" என்று நமக்கு டிப்ஸ்களை அல்ல வழங்குகிறார் ஜாக்.

உத்வேகம்

உத்வேகம்

பின்டெரஸ்ட் (Pinterest) மற்றும் மற்ற இன்ஸ்டாகிராம்வாசிகளுக்கு தங்களின் மூச்சடைக்க வைக்கும் படங்கள் மூலம் இந்த ஜோடி உத்வேகம் அளிக்கிறது என்பதில் சந்தகமே இல்லை.!

மேலும் படிக்க

மேலும் படிக்க

ஆன்லைனில் பணம் சம்பாதிக்க 10 ஸ்மார்ட் ஐடியாக்கள்..!

Best Mobiles in India

English summary
This Couple Makes Up To $9000 Per Instagram Photo While Traveling. Read more about this in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X