சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் ரஜினிக்குக் கூறிய வாழ்த்து என்ன தெரியுமா?

|

சூப்பர் ஸ்டாரு யாருனு கேட்ட சின்ன குழந்தையும் சொல்லும்.. ஸ்டைல் ஸ்டைலு தான்... போன்ற பாடல்கள் இன்று அனைத்து தொலைக்காட்சிகளிலும், தெரு முக்குகளில் உள்ள ஸ்பீக்கர்களிலும் ஒலித்துக்கொண்டிருக்கும் இந்த வேளையில், அனைவரும் தங்களின் வாழ்த்துக்களை ரஜினி காந்த்திற்குத் தெரிவித்து வருகின்றனர்.

உலக ரசிகர்கள் கொண்டாட்டம்

உலக ரசிகர்கள் கொண்டாட்டம்

தலைவரின் பிறந்த நாளை உலக ரசிகர்கள் அனைவரும் கொண்டாடி வரும் வேளையில், பலரும் தங்களின் வாழ்த்துக்களை வாட்ஸ்அப் ஸ்டேட்டஸ்களிலும், சமூக வலைத்தளங்களிலும் பதிவிட்டு வருகின்றனர். முன்னணி நட்சத்திரங்கள் முதல் குழந்தைகள் வரை அனைவரும் வாழ்த்துக்களை பதிவிட்டு வருகின்றனர்.

சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் வாழ்த்து

சியோமியின் உலகளாவிய துணைத் தலைவர் வாழ்த்து

இந்த ஆண்டு யாரும் எதிர்பார்த்திடாத ஒருவரிடமிருந்து தமிழில் வாழ்த்து வந்துள்ளது அனைவரையும் கூடுதல் மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. சியோமி கார்ப்பரேஷன் நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநரும், உலகளாவிய துணைத் தலைவருமான மன்குமார் ஜெயின் தனது டிவிட்டர் பக்கத்தில் தலைவரின் பிறந்தநாளிற்கு அவரை தமிழில் வாழ்த்தி புதிய பதிவு ஒன்றைப் பதிவிட்டுள்ளார்.

நீயா., நானா: ஜியோ ரூ.75-க்கு 28 நாட்கள் சலுகை, ஏர்டெல், வோடபோன் ரூ.149-ல் அதிரடிநீயா., நானா: ஜியோ ரூ.75-க்கு 28 நாட்கள் சலுகை, ஏர்டெல், வோடபோன் ரூ.149-ல் அதிரடி

எப்படி சியோமியின் தலைவர் ஆனார் தெரியுமா?

எப்படி சியோமியின் தலைவர் ஆனார் தெரியுமா?

சியோமி நிறுவனத்தின் முன்னாள் உலகளாவிய துணைத் தலைவரான ஹ்யூகோ பார்ரா தனது பதவியில் இருந்து விலகிய பின் அந்த இடத்திற்கு மன்குமார் ஜெயின் மாற்றம் செய்யப்பட்டார். அதிக பங்குகளை வைத்திருக்கும் 10 மூத்த ஊழியர்களில், மன்குமார் ஜெயின் 2.3 மில்லியன் பங்குகளை வைத்துள்ளார். உலகளவில் மூன்றாவது மிக உயர்ந்த ESOP வைத்துள்ள நபர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரஜினி மற்றும் சியோமி உலக ரசிகர்கள் பாராட்டு

ரஜினி மற்றும் சியோமி உலக ரசிகர்கள் பாராட்டு

மன்குமார் ஜெயின் தனது டிவிட்டர் பக்கத்தில் சுமார் 254.1K ஃபாலோவர்களை வைத்துள்ளார். சியோமி ரசிகர்கள் புதிய சியோமி தகவல்களுக்காக இவரைப் பின்தொடர்ந்து வருகின்றனர். இவரை இன்னும் பல உலக முன்னணி நிறுவனங்களின் தலைவர்களும் பின்தொடர்கின்றனர். இவர் பதிவிட்டுள்ள பதிவை உலக ரசிகர்கள் பலரும் ரீடுவீட் செய்துள்ளார்.

அனைவரும் பயன்படுத்தும் இந்த சேவை நிறுத்தப்படுகிறது: டிராய் அறிவிப்பு.! எந்த சேவை?அனைவரும் பயன்படுத்தும் இந்த சேவை நிறுத்தப்படுகிறது: டிராய் அறிவிப்பு.! எந்த சேவை?

மன்குமார் ஜெயின் பதிவிட்ட வாழ்த்து இதுதான்

மன்குமார் ஜெயின் பதிவிட்ட வாழ்த்து இதுதான்

தற்பொழுது அவர் ரஜினி காந்த் பிறந்த நாளை முன்னிட்டு அவரை வாழ்த்தி தமிழில், 'இந்தியாவின் மிகப்பெரிய நட்சத்திரத்திற்கு இனிய 70வது பிறந்த நாள் வாழ்த்துக்கள். நீங்கள் வளமான மற்றும் நீண்ட ஆரோக்கியமான வாழ்க்கையை வாழ வாழ்த்துகிறேன்' என்று தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமூக வலைத்தளத்தில் வைரல்

தற்பொழுது இந்த பதிவு சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது. சியோமி நிறுவனத்தின் இந்திய நிர்வாக இயக்குநரும், உலகளாவிய துணைத் தலைவருமான மன்குமார் ஜெயின் இன் பதிவிற்கு வெளிநாட்டவரும் கமெண்ட் செய்து ரஜினியின் பிறந்த நாளிற்கு வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Xiaomi Global Vice President Manu Kumar Jain Posted A Tamil Tweet For Rajinikanth's Birthday : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X