ரோமன் ரெயின்ஸ் ஓய்வு! டுவிட்டரில் கண்ணீர்! புட்பாலில் துவங்கினார்.!

|

டபிள்யூடபிள்யூஇ (WWE) எனப்படும் மல்யுத்தப் போட்டி உலகளவில் பிரபலமானது. இந்த போட்டியில் பல்வேறு பதங்களையும் வென்று சாதனை படைத்து இருப்பவர் ரோமன் ரெயின்ஸ். இவர் முதலில் புட்பால் வீராக வாழ்கையை துவங்கினார்.

பிறகு டபிள்யூடபிள்யூஇயில் ரா, ஸ்மேக்டவுன் ஆகிய இரண்டு போட்டிகளிலும் அண்டர்டேக்கர், பிக்க்ஷோ, கெயின், மார்க்என்டரி, ட்ரிபிள்எச், ப்ராக் லிசனர்ஸ் உள்ளிட்ட பல்வேறு பிரபலமான மல்யுத்த வீரர்களுடன் களம் கண்டுள்ளார்.

<strong>அக்டோபர் 30: மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!</strong>அக்டோபர் 30: மிகவும் எதிர்பார்த்த ஒன்பிளஸ் 6டி ஸ்மார்ட்போன் அறிமுகம்.!

இந்த ரோமன் ரெயின்ஸ் லுக்கேமியா எனப்படும் ரத்த புற்றுநோய் தாக்கியுள்ளதால், தற்போது ஓய்வை அறிவித்துள்ளார். இந்நிலையில் ஏராளமான ரசிகர்கள் டுவிட்டரில் கண்ணீர் மல்க விடையளித்து வருகின்றனர். கடந்த 2014ம் ஆண்டு இவர்கள் தனித்தனியாக பிரிந்து ரெஜின்கள் ஒற்றையர் போட்டியிலும் பங்கேற்றனர்.

ரோமன்ஸ் ரெயின்ஸ் பிறப்பு:

ரோமன்ஸ் ரெயின்ஸ் 1985ம் ஆண்டு மே 25ம் தேதி அமெரிக்காவில் உள்ள புளோரிடா மாகாணத்தில் பிறந்தார். மனைவி கலினா பெக்கர் மற்றும் மூன்று குழந்தைகள் உள்ளன. ஜோர்ஜியா இன்ஸ்டியூட்ப் ஆப் டெக்னாலஜியில் படித்துள்ளார். இயற்பெயர் லீட்டி ஜோசப் அனோவா.

கால்பந்தாட்ட வீரர்:

ரோமன் ரெயின்ஸ் முதலில் கல்லூரியில் படிக்கும் போது, கால்பந்தாட்ட வீரராக இருந்தார். பிறகு 2007ம் ஆண்டு மனசோட்டா வைக்கிங்ஸ் மற்றும் சேதயி கால்பந்து லீக், கடந்த 2008ம் எட்மோட்டன் எஸ்கி மோஸ் கால்பந்து போட்டி உள்ளிட்டவைகளில் இருந்து வெளியேறினார்.

டபிள்யூ டபிள்யூஇயில் இணைந்தார்:

கடந்த 2010ம் ஆண்டு தொழில் முறை மல்யுத்த போட்டிகளில் பங்கேற்க கையொப்பமிட்டார். இதன் பிறகு வளர்ச்சி மண்டலம் புளோரிடா சாம்பியன்ஷிப் மல்யுத்தம் (எப்சிஎல்) பங்கேற்றார். பிறகு பல்வேறு போட்டிகளிலும் பங்கேற்று பிரபலமானார்.

தி ஷீல்டு டீம் இணைந்தார்:

2012ம் நம்பவர் ஆண்டு டீன் ஆம்ப்ரோஸ், சேத் ரோலின்ஸ், ரோமன்ஸ் ரெயின்ஸ் ஆகியோர் இணைந்து தி ஷீல்டு டீமில் என்ற அணியை அறிமுகமாகியது.

இந்த அணி ஸ்மேக்டவுன், ரா ஆகிய போட்டிகளில் பட்டையயை கிளப்பியது. இதனால் அமெரிக்கா மட்டும் இல்லாமல் இந்தியா வரை அனைவரும் இந்த அணியின் மல்யுத்தப் போட்டியை கண்டு கழித்தனர். இதிலும் ரோமன் ரெயின் தனித்துவமான சாட்டுக்கு இளைஞர்கள் மத்தியில் பிரபலமானது.

இதனால் இந்த அணி மீது உலகத்தின் பார்வையும் திரும்பியது. ரோமன் ரெயின்ஸ் மீது அனைவரின் கவனம் திரும்பியது.

ரோமன் ரெயின்ஸ் வென்ற பதக்கங்கள்:

4 முறை டபிள்யூ டபிள்யூஇ வேர்ல்டு சாம்பியன், 3முறை டபிள்யூ டபிள்யூஇ வேர்ல்டு ஹெவிவெயிட் சாம்பியன்ஷிப், யுனிவார்சல் ஷாம்பியன்ஷிப், யூனிட்டேட் ஸ்டேட்ஸ் சோம்பியன்ஸ், இன்டர்நேசனல்சேம்பியன், டபிள்யூ டபிள்யூஇ டாக் டீம் சேம்பியன், 2015ம் ஆண்டு ராயல் ரம்பிள் வின்னர், 2014ல் சூப்பர் ஸ்டார் ஆப் இயர், ராயல் ரம்பிள் 2014, டுவென்டி எயிட் ட்ரிபிள் க்ரோன் சோம்பியன்ஸ், செவன்டீன்த் கிராண்டு ஸ்லாம் சாம்பியன்ஸ் உள்ளிட்ட பல்வேறு பதக்கங்களையும் வென்றுள்ளார்.

லுக்கேமியா புற்று நோய் தாக்கம்:

ரோமன் ரெயின்ஸ்க்கு லுக்கேமியா என்படும் ரத்த புற்றுநோய் தாக்கியுள்ளதால் கடந்த சில நாட்களுக்கு முன் ஓய்வை அறிவித்தார். ஏற்கனவே ஒரு முறை புற்றுநோய் தாக்கிய போது, சிகிச்சைக்கு பிறகு போட்டிங்களில் பங்கேற்றேன். இந்த முறையும் சரியாகி விடும் என்று நம்புகின்றோம். சிகிச்சைக்கு பிறகு போட்டிகளில் பங்கேற்பேன் என்று டபிள்யூடபிள்யூஇ அறிவித்தார்.

டுவிட்டரில் ரசிகர்கள் கண்ணீர்:

மேலும் ரோமன்ஸ் ரெயின்ஸ் சிகிச்சைக்கு பிறகு போட்டிகளில் பங்கேற்பேன் என்று அறிவித்துள்ளார். தற்போது அவருக்கு நோயின் தாக்கம் அதிகம் உள்ளதால், இளைஞர்கள் வரை அனைவரும் அதிர்ந்து போயியுள்ளனர். மேலும், ஏராளமான ரசிகர்கள் ரோமன் டுவிட்டருக்கு சென்று கண்ணீர் மல்க பிரியா விடை அளித்து வருகின்றனர்.

பதக்கத்தை திரும்பி ஒப்படைத்தார்:

லுக்கேமியா' நோயிலிருந்து மீண்டு, விரைவில் மல்யுத்த போட்டியில் களமிறங்குவேன். தவிர்க்க முடியாத காரணத்தால், `யுனிவர்சல் சாம்பியன்' பட்டத்தைத் திரும்பக் கொடுக்கிறேன்" என்று உருக்கமாகப் பேசினார். அதைத் தொடர்ந்து, தனது `ஷில்டு' குழு நண்பர்களான டீன் அம்ரோஸ், செத் ரோலியன்ஸைக் கட்டிப்பிடித்துக்கொண்டு பிரிவை வெளிப்படுத்தினார். அவரது இந்த அறிவிப்புக்கு `நாங்கள் உன்னோடு இருக்கிறோம்' `மீண்டு வா' என்று சக வீரர்கள் ஆறுதல் தெரிவித்துவருகின்றனர்.

ஹேஷ்டேக் டிரெண்டிங்:

ட்விட்டரில் 'தேங்க் யூ ரோமன்' என்ற ஹேஷ்டேக்கை ட்ரெண்டாக்கிவருகின்றனர். இதில் ஏராளமானோரும் ரோமன் ரெயின்ஸ் குறித்து கருத்துக்களையும் அவர் பங்கேற்று வெற்றி பெற்ற போட்டிகளையும் குறித்து பதிவிட்டு வருகின்றனர்.

ஸ்டெப்னி மேக்மான் :

ரோமன் ரெயின்ஸ் ஓய்வு குறித்து ஸ்டெப்னி மேக்மானும் அறிவித்துள்ளார். அவர் குடும்பத்துக்காகவும், உடல் நிலை சீராகும் வரை ஓய்வை அறித்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது தவிர்க்க முடியாத ஒன்றும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
WWE Announces Roman Reigns Retirement in twitter : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X