Home
Social media

வைரல் வீடியோ:குழந்தையைத் தூக்கி எறிந்த தாய்! உயிருடன் காப்பாற்றிய நாய்!

பிறந்த குழந்தையைத் தாய் சாக்கடையில் தூக்கி எறிந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது, சாக்கடையில் எறியப்பட்ட குழந்தையைத் தெரு நாய்கள் காப்பாற்றியுள்ளது. இந்த சம்பவம் முழுமையாக சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

ஹரியானாவில் நடந்த கொடூரம்

ஹரியானாவில் நடந்த கொடூரம்

ஹரியானா மாவட்டத்தில் உள்ள கைத்தல் என்ற இடத்தில் தான் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. நள்ளிரவில் யாரும் இல்லாத நேரத்தில் பெண் ஒருவர் பாலிதீன் பையில் குப்பையைக் கொட்டுவது போல, குழந்தையைத் துணியுடன் சுருட்டி கொண்டுவருகிறார்.

சிசிடிவி கேமராவில் பதிவு

சிசிடிவி கேமராவில் பதிவு

யாரும் இல்லாத நேரத்தில், ரோட்டோரத்தில் இருக்கும் சிறிய சாக்கடை கால்வாயில் பச்சிளம் குழந்தையைத் தூக்கி எறிந்துவிட்டு உடனே அந்த இடத்தைவிட்டுக் கிளம்பிவிடுகிறார். இந்த காட்சிகள் அங்கு உள்ள இரண்டு சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

குழந்தையை காப்பாற்றிய நாய்

குழந்தையை காப்பாற்றிய நாய்

தூக்கி எறியப்பட்ட குழந்தையின் அழுகுரல் கேட்டு, தெரு நாய்கள் சாக்கடை கால்வாய் அருகில் வந்து குழந்தையைப் பார்த்துக் குறைக்கத் துவங்குகின்றன. அதில் ஒரு தெரு நாய் சாக்கடை கால்வாயில் குதித்து குழந்தை இருந்த பாலிதீன் கவரை மேலே தூக்கி வந்து குழந்தையை காப்பாற்றுகிறது.

நாய்கள் செய்த செயல்

நாய்கள் செய்த செயல்

குழந்தையை அனைத்து தெரு நாய்களும் சுற்றி வந்து மோப்பம் பிடித்து குழந்தை உயிருடன் இருப்பதை உறுதிப் படுத்துகின்றன. பிறகு அந்த வழியில் செல்லும் அனைவரையும் பார்த்துக் குறைக்கத் துவங்கி குழந்தை உள்ளதை மக்களுக்குத் தெரிவித்திருக்கின்றன.

குழந்தை மருத்துவமணியில் அனுமதி

குழந்தை மருத்துவமணியில் அனுமதி

நாய்கள் தொடர்ச்சியாக ஒன்று சேர்ந்து குறைத்ததைத் தொடர்ந்து அக்கம்பக்கத்தினர் குழந்தையை மீது மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். குழந்தையின் மேல் நாய்களின் பல் மற்றும் நிகம் எதுவும் படவில்லை என்று மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர்.

ஐந்தறிவு ஜீவன்

ஐந்தறிவு ஜீவன்

குழந்தை வெறும் 2.45 கிலோ எடை மட்டுமே உள்ளதினால் தீவிர கண்காணிப்புக்குக் கீழ் பாதுகாக்கப்பட்டு வருகிறது. சிசிடிவியல் பதிவாகி உள்ள பெண்ணை போலீசார் வலை வீசி தேடி வருகின்றனர். ஐந்தறிவு ஜீவனிற்குத் தெரிந்த விஷயம் கூட சில ஆறறிவு ஜீவன்களுக்குத் தெரிவதில்லை.

Best Mobiles in India

English summary
Woman Throws Newborn Baby Girl in Drain Dogs Rescue Her : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X