இணையத்தை கலக்கும் 'சப்வே செல்ஃபி குயின்' வைரல் வீடியோ! என்ன செய்தார் தெரியுமா?

|

உலகம் ஒரு நாடக மேடை அதில் நாம் அனைவரும் நடிகர்கள் என்று முன்னோர்கள் ஒன்றும் சும்மா சொல்லவில்லை, இந்த வாக்கியத்திற்கு எடுத்துக்காட்டாக சப்வே ட்ரெயினை தனது மேடையாக நினைத்து செல்ஃபி எடுத்த இளம் பெண்ணின் வீடியோ சமூக வளைத்தலில் வைரல் ஆகியுள்ளது. யார் இந்த இளம் பெண்? அப்படி இவர் என்ன செய்தார் என்று தெரிந்துகொள்ளுங்கள்.

அடடே என்ன அழகு! என்ன அழகாக போஸ் கொடுக்குறீங்க!

அடடே என்ன அழகு! என்ன அழகாக போஸ் கொடுக்குறீங்க!

சப்வே ரயிலில் பயணம் செய்த பென் யஹர் என்ற பெண்ணை பற்றி தான் இப்பொழுது ஊர்முழுக்க பேச்சு, அடடே என்ன அழகு என்று பார்ப்பவர்களின் கண்கள் ஒரு நிமிடம் நிற்காமல் பார்க்கும் படி இருக்கிறது இவரின் தோற்றம். ஓடும் ரயிலில் அனைவர்க்கும் மத்தியில் நின்று யாரையும் பொறுப்பெடுத்தாமல் இவர் கொடுத்த போஸை கண்டு இணையமே ஜொள்ளுவிட்டுக் கொண்டிருக்கிறது.

மொபைலில் வீடியோ பதிவு

மொபைலில் வீடியோ பதிவு

அவரின் கை-பையைச் சீட்டில் வைத்து, அதன் மேல் மொபைல் போனை வைத்து அழகாக போஸ் கொடுத்து செல்ஃபி கிளிக் செய்யத் துவங்கியிருக்கிறார். இந்த இளம் பெண் சும்மா ஒன்றும் போஸ் கொடுக்கவில்லை, எந்த ஆங்கிளில் அவர் அழகா இருக்கிறார் என்பதைக் கணித்து மகாராணி போல் தொடர்ந்து விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை கிளிக் செய்திருக்கிறார். இந்த முழு நிகழ்வையும் பென் யஹ்ர் தனது மொபைலில் பதிவு செய்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

மனித இனம் அழியும்; ஏன், எப்படி.? - ஸ்டீபன் ஹாக்கிங்கின் திகிலான விளக்கம்.!மனித இனம் அழியும்; ஏன், எப்படி.? - ஸ்டீபன் ஹாக்கிங்கின் திகிலான விளக்கம்.!

9.6 மில்லியன் நபர்கள் பார்த்த வீடியோ

பென் யஹ்ர் பதிவிட்ட இந்த வீடியோ உண்மையில் கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் பதிவிடப்பட்டுள்ளது. மீண்டும் இந்த பதிவு தற்பொழுது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. இதுவரை இந்த வீடியோ பதிவை சுமார் 9.6 மில்லியன் நபர்கள் பார்த்துள்ளனர், சுமார் 222.6K பயனர்கள் லைக் செய்துள்ளனர் மற்றும் இந்த பதிவு சுமார் 37.5K பயனர்கள் ரீ-ட்வீட் செய்யப்பட்டுள்ளனர். இந்த இளம் பெண்ணை தற்பொழுது அனைவரும் குயீன்(Queen) என்றும் சப்வே பே (Subway Bae) என்றும் செல்லமாக அழைக்கின்றனர்.

கமெண்டில் குவியும் பாராட்டுக்கள்

கமெண்டில் குவியும் பாராட்டுக்கள்

கூட்டத்தை பற்றி பொறுப்பெடுத்தாமல் இந்த இளம் ஓடும் ரயிலில் செல்ஃபி கிளிக் செய்த துணிச்சலையும், அவரின் தன்னம்பிக்கையையும் அனைவரும் பாராட்டி வருகின்றனர். சுற்றத்தில் உள்ள யாரையும் பற்றி கவலைப் படாமல் அவர் வாழ்க்கைக்கான அந்த நொடியை வாழ்ந்து காட்டியிருக்கிறார் என்று கமெண்டில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளது.

இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த இறப்பதற்கு 10 நாட்களுக்கு முன்னர், ஸ்டீபன் ஹாக்கிங் இறுதியாக சமர்ப்பித்த "மர்மம்" அவிழ்க்கப்பட்டது.!

சப்வே குயீனின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

சப்வே குயீனின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

டிவிட்டரில் இவருக்கென்று புதிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோவை பார்த்து ரசித்த ரசிகர் ஒருவர் இவரின் அசல் டிவிட்டர் அக்கௌன்ட் மற்றும் அவரின் உண்மையான பெயரைக் கண்டுபிடித்துள்ளார். சப்வே குயீனின் உண்மையான பெயர் 'ஜெசிகா ஜார்ஜ்' ஆம். அதுமட்டுமின்றி சப்வே ரயிலில் அவர் எடுத்த அசல் புகைப்படத்தையும் தேடிக் கண்டுபிடித்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார் இவரின் ரசிகர். சமூக வலைத்தளத்தில் மீண்டும் வைரல் ஆகிவருகிறார் இந்த சப்வே குயின்.

Best Mobiles in India

English summary
Woman Taking Selfie Photo Shoot On Subway Train Video Went Viral On Internet Again : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X