பாராக்ளைடிங் சாகசப் பயணம்: இணையதளத்தில் வைரலான பெண்ணின் வீடியோ.!

|

பாராக்ளைடிங் பயணம் ஒரு புதிய அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். அதாவது பாராசூட்டில் குதித்து மிதந்து கொண்டே வருவதை பார்த்திருப்பீர்கள். இதற்கு நீங்கள் விமானத்தில் மேலே போய் அங்கிருந்து குதிக்க வேண்டும். ஆனால் பாராக்ளைடிங்கிற்கு அந்தத் தேவை இல்லை. ஒரு உயரமான இடத்திலிருந்து கிளைடருடன் குதித்து சறுக்கியபடியே மிதந்து இறங்குவது. மிகவும் வீர தீரமான இந்த விளையாட்டைப் பலரும் விரும்புகிறார்கள்.

பாராக்ளைடிங் சாகசப் பயணம்: இணையதளத்தில் வைரலான பெண்ணின் வீடியோ.!

குறிப்பாக இது பணச் செலுவு வைக்கக் கூடிய விளையாட்டு என்பதை புரிந்து கொண்டு இருப்பீர்கள். அதிலும் பணக்காரர்கள்தான் இதில் அதிகம் ஆர்வம் காட்டுவார்கள். பாராக்ளைடிங் போன்ற ஒரு வீரதீர விளையாட்டு இந்தியாவிற்கு 1990-களின் துவகத்தில்தான் வந்தது என்று கூறப்படுகிறது.

இந்நிலையில் பெண் ஒருவர் பாராக்ளைடிங் பயணம் செய்யும் வீடியோ ஒன்று இணையதளத்தில் அதிக வைரலாகிவிட்டது என்றே கூறலாம். அந்த பெண் உயரமான இடத்திலிருந்து பாராக்ளைடிங் பயணம் செய்ய தயாராகும் போது பதட்டத்துடன் இருக்கிறார். பின்பு உயரத்தில் பறக்கும் போது பயத்தில் அழுது விடுகிறார். தற்சமயம் சமூக வலைத்தளங்களில் இந்த வீடியோ அதிகமாக வைரலாகியுள்ளது.

பாராக்ளைடிங் சாகசப் பயணம்: இணையதளத்தில் வைரலான பெண்ணின் வீடியோ.!

இந்த வீடியோ GoPro கேமராவில் எடுக்கப்பட்டதாக தெரிகிறது. பின்பு இமாச்சல பிரதேசத்தின் கஜ்ஜியாரில் இருக்கு ஒரு உயரமான மலைப் பகுதியில் அந்த பெண் பாராக்ளைடிங் செய்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதேபோல் பாராசூட்டை திறக்க முடியாமல் இளைஞர் தவித்த வீடியோ ஒன்று இப்போது இணையதளத்தில் அதிகமாக வைரலாகியுள்ளது. மேலும் இது சார்ந்த தகவலைப் பற்றி சற்று விரிவாகப் பார்ப்போம்.

பாராக்ளைடிங் சாகசப் பயணம்: இணையதளத்தில் வைரலான பெண்ணின் வீடியோ.!

வெளிநாடுகளில் உள்ள அதிக மக்கள் மிகவும் விரும்புவது ஸ்கை டைவிங். இது ஒரு சிறந்த அனுபவத்தை கொடுக்கும் என்றே கூறலாம். இந்த ஸ்கை டைவிங்-ல் ஆர்வம் உள்ளவர்கள் ஒரு குறிப்பிட்ட உயர்த்தில் விமானத்திலிருந்து குதித்து சில அசைவுகளை செய்வார்கள்.
விமானத்திலிருந்து குதித்து ஸ்கை டைவிங் செய்து பின்பு தாங்களாகவே பாராசூட்டை திறந்து பாதுகாப்பாகத் தரைக்குதிரும்புவார்கள். ஆனாலும் இந்த ஸ்கை டைவிங் செய்ய முறையான பயிற்சியினை மேற்கொள்ள வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

பாராக்ளைடிங் சாகசப் பயணம்: இணையதளத்தில் வைரலான பெண்ணின் வீடியோ.!

முதலில் இதற்கு ஸ்கை டைவிங் பயிற்சியாளர் உடன் மட்டுமே குதித்து அந்த அனுபவத்தை பெறமுடியும். பின்பு நாம் மட்டும் தனியாகச் செய்ய வேண்டும் என்றால், அதற்கு தகுந்த பயிற்சியை எடுத்துக் கொண்டால் மட்டுமே தனியாக செல்ல அனுமதிக்கப்படுவார்கள்.
அண்மையில் ஈரான் நாட்டை சேர்ந்த இளைஞர் ஒருவர் ஸ்கை டைவிவ் செய்ய விமானத்தில் இருந்து தனியாகக் கீழே குதித்தார். பின்பு கீழே குதித்த அந்த இளைஞர் தனது பாராசூட்டை திறக்க முயற்சி செய்துள்ளார். ஆனால் எதிர்பாராத விதமாக இளைஞரால் பாராசூட்டை திறக்க முடியவில்லை.

தொடர்ந்து அவர் பாராசூட்டை திறக்க முயற்சி செய்து கொண்டிருந்தபோது, கடவுளைப் போன்று வந்த ஸ்கை டைவிங் பயிற்சியாளர் அந்த இளைஞரின் பாராசூட்டை திறக்க உதவி செய்தார். பின்னர் அந்த இளைஞர் மிகவும் பாதுகாப்பாக தரைக்கு வந்து சேர்ந்தார். மேலும் சரியான நேரத்தில் பாராசூட்டை திறந்தது உதவி செய்த ஸ்கை டைவிங் பயிற்சியாளர் தனக்கு கடவுளைப் போலத் தோன்றினார் என அந்த இளைஞர் கூறியுள்ளார். தற்சமயம் இந்த வீடியோ அனைத்து தளங்களிலும் வைரலாகி வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Woman's Paragliding video goes viral on social media: Do you know why?: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X