CCTV கேமராவில் பதிவான 'குட்டி டைனோசர்' போன்ற உயிரினம்.! இணையத்தில் வைரலாகும் வீடியோ..

|

CCTV கேமரா வீடியோக்கள் பெரும்பாலும் குறைவான தரத்திலேயே பதிவு செய்யப்படுகின்றன, குறிப்பாகப் பாதுகாப்பு மற்றும் கதவு கேமராக்களின் வீடியோக்கள் பெரும்பாலும் புரிந்துகொள்ளவும், விளக்கவும் முடியாத வகையில் இருக்கும் கடினமான காட்சிகளைக் காண்பிக்கும் வகையிலேயே உருவாக்கப்பட்டுள்ளது. சில நேரங்களில், வீட்டு உரிமையாளர்களே இரவில் அவர்களின் உருவத்தை மானிட்டர்களில் பார்த்து அதிர்ச்சியடைந்த சம்பவங்கள் எல்லாம் நடந்தேறியுள்ளது.

'டைனோசர்' போன்ற உயிரினத்தைப் பார்த்ததாகக் கூறிய பெண்

'டைனோசர்' போன்ற உயிரினத்தைப் பார்த்ததாகக் கூறிய பெண்

கிறிஸ்டினா ரியான் என்ற ஒரு வீட்டு உரிமையாளர் தனது பாதுகாப்பு கேமெராவின் காட்சிகளில் பதிவான ஒரு அசாதாரணமான காட்சியை கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார். அவர் வைத்துள்ள பாதுகாப்பு கேமராவில் நமது வரலாற்றுக்கு முந்தைய உயிரினமான 'டைனோசர்' போன்ற உயிரினத்தைப் பார்த்ததாகக் கூறி ஒரு வினோதமான கூற்றுக்குப் பிறகு செய்தி வெளியிட்டுள்ளார். அவரின் வீட்டு பாதுகாப்பு கேமரா இந்த காட்சியை அதிகாலையில் கைப்பற்றியதாக்க அவர் கூறியுள்ளார்.

தோட்டத்தின் குறுக்கே ஓடும் அடையாளம் தெரியாத உருவம்

தோட்டத்தின் குறுக்கே ஓடும் அடையாளம் தெரியாத உருவம்

அடையாளம் தெரியாத ஒரு சிறிய உயிரினம் தனது தோட்டத்தின் குறுக்கே ஓடுவதை வீடியோ காட்சி காட்டுகிறது. இங்கு அவரின் கேமரா எச்டி தரத்தில் வீடியோக்களை பதிவு செய்யவில்லை என்பதனால் தோட்டத்தின் குறுக்கே ஓடிய உயிரினத்தின் முழு உருவம் தெளிவாகப் பதிவாகவில்லை. ஆனால், இந்த உருவம் நிச்சயமாக ஒரு செல்லப்பிராணி விலங்கு போல் தெரியவில்லை என்பதால் சமூக ஊடக பயனர்கள் வீடியோவைப் பார்த்தபின் குழப்பமடைந்துள்ளனர்.

பூமியில் 2.5 பில்லியன் இராட்சஸ டி.ரெக்ஸ் டைனோசர்கள்.. விஞ்ஞானிகள் சொன்ன திடுக்கிடும் உண்மை..பூமியில் 2.5 பில்லியன் இராட்சஸ டி.ரெக்ஸ் டைனோசர்கள்.. விஞ்ஞானிகள் சொன்ன திடுக்கிடும் உண்மை..

'ஜுராசிக் பார்க்' படத்தில் வரும் ராப்டர் டினோசரா?

'ஜுராசிக் பார்க்' படத்தில் வரும் ராப்டர் டினோசரா?

ரியான் இது ஒரு 'பேபி டைனோசர்' போலத் தோற்றமளிப்பதாகவும், அது இரண்டு பின்னங்கால்களில் ஓடுவதாகவும், நீண்ட மற்றும் அடர்த்தியான வால் கொண்டதாகவும் தோன்றுகிறது என்று கூறியுள்ளார். அதேபோல், அதிகாலை 3:40 மணிக்கு எந்த மிருகமும் 'நடைபயிற்சி' செய்யவும் வாய்ப்பில்லை என்று அவர் கூறியுள்ளார். அப்படியே இருந்தாலும் அது இந்த வழியில் நடந்து செல்ல வாய்ப்பில்லை என்று கூறியுள்ளார். ஒருவேளை நான் பார்த்தது 'ஜுராசிக் பார்க்' படத்தில் வரும் ராப்டர் டினோசரா? என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

வீடியோவை பார்த்தால் உங்களுக்கு என்ன தோணுகிறது?

இதுபோன்ற ஓட்டத்தை நான் பலமுறை ஜுராசிக் பார்க் திரைப்படத்தில் பார்த்திருக்கிறேன், ஆனால் நான் ஒரு ராப்டாரை தான் கண்டேனா அல்லது பிற சிறிய வகை டினோசரை பார்த்தேனா என்று தெரியவில்லையே என்று ரியான் ஃபாக்ஸ் தெரிவித்துள்ளார். சுவாரஸ்யமாக, இந்த உயிரினம் ஒரு சிறிய டைனோசர் போலத் தோற்றமளிப்பது ரியான் மட்டுமல்ல, வீடியோவைப் பார்த்த அனைவரும் ஒரே மாதிரியாகச் சொன்னார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. சிலர் இது ஒரு பெரிய பறவை என்று கூறுகிறார்கள்.

ஆண்ட்ராய்டு போன் பயனரா நீங்கள்? உடனே 'இதை' உங்கள் போனிலிருந்து டெலீட் செய்யுங்கள்..ஆண்ட்ராய்டு போன் பயனரா நீங்கள்? உடனே 'இதை' உங்கள் போனிலிருந்து டெலீட் செய்யுங்கள்..

 வீடியோ பின்னணியில் உள்ள உண்மை என்னாச்சு?

வீடியோ பின்னணியில் உள்ள உண்மை என்னாச்சு?

கிளிப் வைரலான பிறகு, சமூக ஊடகங்கள் அந்த உயிரினத்தின் மர்மத்தைத் தீர்க்க நெட்டிசன்ஸ்கள் பெரிதும் முயன்று வருகின்றனர். பலர் இது ஒரு மயில் போல் இருப்பதாகக் கூறினர். இன்னும் சிலர் இது ஒரு மிருகத்தின் தலையில் ஒரு வாளி சிக்கியுள்ளது போலத் தெரிகிறது என்று சந்தேகித்துக் கூறியுள்ளனர். இன்னும் சிலர் இது என்னவென்று சரியாகத் தெரியவில்லை, ஆனால், ராப்டராக இருந்திட்டு போகட்டும் என்று கிண்டல் செய்துள்ளனர். இந்த வீடியோ பின்னணியில் உள்ள உண்மை எப்போது வேண்டுமானாலும் விரைவில் வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Woman reports seeing dinosaur like creature on her home security camera video : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X