தேடி-தேடி காதலித்த பேஸ்புக் காதலி இளம்பெண்ணே இல்லை.. நேரில் சென்று பார்த்தவருக்கு காத்திருந்த ஷாக்!

|

முகப்புத்தகத்தில் முகம் தெரியாதா நபர்களை தான் இந்த சமூகம் தேடி-தேடி காதலிக்கிறது. எவ்வளவு தான் இப்படியான காதலில் மக்கள் ஏமாற்றம் அடைந்தாலும் கூட, இன்னும் இவர்களின் தேடல் மட்டும் நின்றதாகத் தெரியவில்லை. இப்படி பேஸ்புக் மூலம் காதலித்த பெண்ணை பார்க்கச் சென்ற நபருக்குக் கிடைத்த அதிர்ச்சி அனுபம், இப்பொழுது சமூக வலைத்தளம் முழுக்க வைரல் ஆகிவருகிறது.

 30 வயதான இளைஞர்

திருச்சியை சேர்ந்த 30 வயதான இளைஞர் ஒருவர், பொழுதுபோக்கிற்காக பேஸ்புக் பயன்பாட்டைப் பயன்படுத்தி வந்திருக்கிறார். அப்படி இவர் பேஸ்புக் பயன்படுத்திய போது, அனுசியா என்ற பெண்ணின் அழகான புகைப்படத்தைப் பார்த்ததும் பிரண்ட் ரெக்வெஸ்ட் அனுப்பியுள்ளார். அந்த அழகிய பெண்ணும் உடனே இவரின் ரெக்வெஸ்ட்டை அக்செப்ட் செய்திருக்கிறார். அப்புறம் பொழுதுபோக்கு பேஸ்புக் பழக்கம் முழு நேரப் பழக்கமானது.

பேஸ்புக் சாட்டிங்

நண்பர்களாக பேஸ்புக் சாட்டிங் செய்து வந்த இருவரின் நெருக்கமும் சில நாட்களிலேயே அதிகரித்துள்ளது. அடுத்த கட்டமாக அந்த பெண்ணின் செல்போன் எண்ணை தொடர்பு கொண்டு அந்த இளைஞர் பேசியுள்ளார். இளைஞருடன் நெருக்கமாகப் பேசத் துவங்கிய பெண், காதல் வசனங்களைப் பேசி இளைஞரை கவர்ந்துள்ளார். பெண்ணின் ஆசை வார்த்தைகளைக் கேட்டு மயங்கிப்போன இளைஞர் தான் திருமணம் ஆனவர் என்பதையும் மறைந்திருக்கிறார்..

2020 முதன்மை ரக ஸ்மார்ட்போன்கள் பட்டியலின் முதலிடத்தில் ஒன்பிளஸ் 8டி 5ஜி!

கொஞ்சி-கொஞ்சிப் பேசி

கொஞ்சி-கொஞ்சிப் பேசிய இளம்பெண் கொஞ்சம் கொஞ்சமாக பணம் கேட்கத் துவங்கியிருக்கிறார். செல்போனிலேயே காதல் வசனம் பேசி காதலித்து வந்த ஜோடி, சிறிது காலம் உல்லாசமாக இருந்துள்ளது. அந்த பெண் கேட்டபோதெல்லாம் இந்த இளைஞர் பணம் அனுப்பி வைத்துள்ளார். அந்த பெண் இந்த இளைஞரிடம் இருந்து சுமார் 3 லட்சம் ரூபாய் வரை இப்படிப் பணம் வாங்கியதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

முழு நேர காதலன்

முழு நேர காதலனாக மாறிப்போன இளைஞர், தனது பேஸ்புக் காதலிக்கு சர்ப்ரைஸ் கொடுக்க நினைத்து, அனுசியா வீட்டுக்கே பரிசு பொருட்களை வாங்கிக்கொண்டு சென்றிருக்கிறார். அங்கே நேரில் சென்று பார்த்தபோது தான் அவருக்கு முதல் அதிர்ச்சி தாக்கியுள்ளது. ஆம், இவருடன் ஆசை வார்த்தை பேசி கொஞ்சி காதலித்த இளம்பெண், சுமார் 40 வயது மதிக்கத்தக்க நடுத்தர வயது பெண் என்பதைக் கண்டு அதிர்ச்சி அடைந்துள்ளார்.

40 வயது மதிக்கத்தக்க இருந்த பெண்

40 வயது மதிக்கத்தக்க இருந்த பெண் இவர் பேஸ்புக்கில் பார்த்த அந்த அழகியே பெண்ணே இல்லை என்பது அவருக்கு அடுத்த அதிர்ச்சியாக தாக்கியுள்ளது. அனுசியா என்று பேஸ்புக்கில் அந்த பெண் பதிவிட்டிருந்தது அவர் வீட்டின் அருகில் வசிக்கும் இளம்பெண்ணின் புகைப்படம் என்பது அந்த இளைஞருக்குத் தெரியவந்துள்ளது. இதனை அடுத்து உடனடியாக பக்கத்து வீட்டில் சென்று நடந்த சம்பவத்தை அந்த இளைஞர் எடுத்துரைத்திருக்கிறார்.

கைது

இதைக்கேட்டு அதிர்ச்சியடைந்த பாதிக்கப்பட்ட இளம்பெண்ணின் குடும்பத்தினர், உடனே காவல்நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர். இதனை அடுத்து போலீசார் விசாரணை மேற்கொண்டதில் அனுசுயாவின் சொந்த தம்பியே அக்காவை பேஸ்புக்கில் காதலிக்க வைத்து பணம் பறித்து பலரையும் ஏமாற்றியுள்ளது தெரியவந்துள்ளது. இதற்கு அனுசியாவின் கணவரும் உடந்தையாக இருந்துள்ளார், இவர்கள் மூவரும் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Woman Cheats Over Young Guys On Facebook Got Arrested : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X