கூகுள் மேப்ஸ் மூலம் தெரியவந்த அதிசயம்: 9 ஆண்டுகள் இடைவெளியில் எடுக்கப்பட்ட படங்கள்: வைரல்.!

|

கூகுள் மேப்ஸ் வசதி பல்வேறு வகையில் உதவியாக இருக்கிறது என்றுதான் கூறவேண்டும். இந்த கூகுள் மேப்ஸ் வசதியை ஓட்டுநர்கள் முதல் சாலை பாதசாரிகள் வரை அதிகம் பயன்படுத்துகின்றனர், காரணம் முன்பின் தெரியாத இடத்துக்கு முகவரியை மட்டும் வைத்துக் கொண்டு செல்வோருக்குப் பேருதவி செய்கிறது இந்த கூகுள் மேப்ஸ்.

கூகுள் மேப்ஸ்

கூகுள் மேப்ஸ்

இந்நிலையில் கூகுள் மேப்ஸ் மூலம் எடுக்கப்பட்ட புகைப்படங்கள் இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது. அதாவது 9 ஆண்டுகள் இடைவெளியில் பெண் ஒருவர் செய்த செயல் தொடர்பான புகைப்படங்கள் தான் தற்போது இணையதளத்தில் அதிக வைரலாகி உள்ளது. மேலும் இதுதொடர்பான விவரங்களைச் சற்று விரிவாகப் பார்ப்போம்.

ஏர்டெல் அறிமுகம் செய்த மூன்று ஏர்டெல் அறிமுகம் செய்த மூன்று "ஆல் இன் ஒன்" திட்டம்- இணையம், ஓடிடி அணுகல், டிவி சேனல் சேவை!

ஸ்ட்ரீட் வியூ

ஸ்ட்ரீட் வியூ

கூகுள் மேப்ஸ் வசதியை பயன்படுத்தும் அனைவரும் ஸ்ட்ரீட் வியூ என்ற அம்சத்தைப் பற்றி தெரியும். அதாவது இந்த அம்சத்தின் மூலம் நகரங்களின் நிஜ புகைப்படங்களை எளிமையாகப் பார்க்க முடியும். தற்போது சில நகரங்களில் மட்டுமே இந்த அம்சம் செயல்படுகிறது. கூகுள் ஸ்ட்ரீட் வீவ் கார் மூலம் அடிக்கடி ஒவ்வொரு நகரங்களின் தெருக்களையும் அப்டேட் செய்து கொண்டிருப்பார்கள்.

உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..உங்கள் போனை எப்படிப் பிடித்துப் பயன்படுத்துகிறீர்கள்? உங்களைப் பற்றிய உண்மை இது தான்.. தெரிஞ்சுக்கோங்க..

லீன் கார்ட்ரைட்

லீன் கார்ட்ரைட்

இந்நிலையில் கூகுள் மேப்ஸ் ஸ்ட்ரீட் வீவில் பெண் ஒருவர், 9 ஆண்டுகள் இடைவெளியில் அதே இடத்தில் நின்ற விஷயம் அதிசயமான நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது. அதாவது லீன் கார்ட்ரைட் என்ற பெண் கடந்த 2009-ம் ஆண்டு லண்டனில் விக்டோரியா பிளேஸ் என்ற பகுதியில் சாலையைக்
கடப்பதற்காக சிக்னல் கம்பம் முன்பு கையில் ஒரு பையுடன் நின்று கொண்டிருக்கிறார்.

13 வகை OTT சந்தா 3500GB டேட்டா கிடைக்கும் சூப்பர் ஹை-ஸ்பீட் Airtel, Jio திட்டங்கள்.. விலை என்ன தெரியுமா?13 வகை OTT சந்தா 3500GB டேட்டா கிடைக்கும் சூப்பர் ஹை-ஸ்பீட் Airtel, Jio திட்டங்கள்.. விலை என்ன தெரியுமா?

 9 ஆண்டுகள் கழித்து

இதை தொடர்ந்து சரியாக 9 ஆண்டுகள் கழித்து, அதாவது 2018-ம் ஆண்டு தன்னுடைய 41-வது வயதில், அதே விக்டோரியா பிளேஸ் பகுதியில் சிக்னல் கம்பத்திற்கு அருகே கையில் பையுடன் சாலையைக் கடப்பதற்காக லீன் அங்கே நின்று கொண்டிருக்கிறார்.

இந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்கஇந்தியாவில் ஏன் 5ஜி ஸ்மார்ட்போன் வாங்குவது சிறந்ததில்லை.. இவ்வளவு காரணம் இருக்கிறதா? கட்டாயம் தெரிஞ்சுக்கோங்க

டைம் ட்ராவல்

டைம் ட்ராவல்

குறிப்பாக 9 ஆண்டுகள் இடைவெளியில் தற்செயலான நேரத்தில் எடுக்கப்பட்ட இரண்டு புகைப்படங்களில் ஒரே பெண் இருப்பது அனைவரையும் வியப்படையச் செய்துள்ளது. மேலும் இதுகுறித்து கருத்து தெரிவித்த லீன், இதை பார்க்கும் போது வேடிக்கையாகவும், வினோதமாகவும் இருக்கிறது. மக்களுக்கு நான் ஏதோ டைம் ட்ராவல் செய்வது போல் தோன்றும் என்றும், எனது கணவர் தான் இதனை முதன் முதலில் கண்டறிந்தார் எனவும் கூறினார்.

இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!இது நடந்தால்., அது நடக்கும்: இந்தியாவில் டெஸ்லா உற்பத்தி ஆலை எப்போது வரும்?- மஸ்க் வைத்த நிபந்தனை!

பேஸ்புக்

பேஸ்புக்

தற்போது இது தொடர்பான புகைப்படங்களை லீன் தனது பேஸ்புக் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். மேலும் லீன் தனது அலுவலகத்தில் இதுகுறித்து பேசும்போது அவர்கள் என்னை வேடிக்கையாகப் பார்த்தார்கள் என்று கூறினார். முதலில் இதனைப் பகிர வேண்டாம் என நினைத்து தற்போது
நான் பேஸ்புக்கில் பகிர முடிவு செய்தேன் என்றார்.

டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..டீனி-டைனி ரோபோ நண்டு: விரைவில் மனித உடலுக்குள் சுற்றித் திரியுமா? இது புதிய சாதனை படைப்பு..

வேடிக்கையாகப் பார்த்தார்கள்

குறிப்பாக இது எல்லோருக்கும் நடந்திருக்குமா என்று தெரியவில்லை. இனி அந்த இடத்தை கடக்கும் போது கண்டிப்பாகச் சிரிப்பு தான் வரும் என்றுலீன் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் தொழில்நுட்பம், விண்வெளி மற்றும் அறிவியல் தொடர்பான இன்னும் கூடுதல் சுவாரசியமான செய்திகள் பற்றி அறிந்துகொள்ள எங்கள் கிஸ்பாட் சேனல் உடன் இணைந்திருங்கள். உங்களின் கருத்துக்களை எங்களுடன் பகிர்ந்துகொள்ளுங்கள்.

Best Mobiles in India

English summary
woman captured by Google Maps in exactly the same place nine years apart: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X