Home
Social media

அமேசான் ஓனருக்கு நேரடியாகத் தரமான சம்பவத்தைச் செய்து காட்டிய பெண்.!

அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெஃப் பெஸோஸ் இடம் மாநாட்டில் கலந்துகொண்ட பெண், அமேசான் இ-காமர்ஸ் தளத்திலிருந்து வாங்கிய ஒரு தயாரிப்பு பொருளை மேடையிலேயே திரும்பத் தர முயன்றிருக்கிறார்.

அமேசான் நிறுவனத்தின் வருடாந்த பங்குதாரர்களின் மாநாட்டில், அமேசான் நிறுவனத்தின் சிஇஓ ஜெஃப் பெஸோஸ் இடம் மாநாட்டில் கலந்துகொண்ட பெண், அமேசான் இ-காமர்ஸ் தளத்திலிருந்து வாங்கிய ஒரு தயாரிப்பு பொருளை மேடையிலேயே திரும்பத் தர முயன்றிருக்கிறார்.

கேள்வி பதில் சுற்றை சாதகமாக பயன்படுத்திய பெண்

கேள்வி பதில் சுற்றை சாதகமாக பயன்படுத்திய பெண்

அமேசான் நிறுவனத்தின் வருடாந்த பங்குதாரர்களின் மாநாட்டின் போது நடைபெற்ற கேள்வி பதில் சுற்றை, மிகச் சாதகமாக ஒரு பெண் பயன்படுத்தியுள்ளார். அமேசான் சிஇஓ ஜெஃப் பெஸோஸ் இடம் நேரடியா தனது கேள்வி கேட்டிருக்கிறார் அப்பெண். கேள்வி கேட்டதுமட்டுமின்றி நேரடியாகத் தரமான சம்பவத்தைச் செய்து காட்டி இருக்கிறார்.

நான்கு முறை நிராகரிக்கப்பட்ட பொருள்

நான்கு முறை நிராகரிக்கப்பட்ட பொருள்

சிறிது காலத்திற்கு முன்பு அமேசான் தளத்தில் தான் வாங்கிய பொருளைத் திருப்பித்தர முயன்றும் நான்கு முறை நிராகரிக்கப்பட்டுள்ளது என்று அவர் மேடையில் அமர்ந்துதிருந்த ஜெஃப் பெஸோஸ் இடம் நேரடியாக அப்பெண் தெரிவித்துள்ளார். இதனைக் கேட்டு ஆச்சிரியம் அடைந்த ஜெஃப் பெஸோஸ், நிலைமையை உடனே சரி செய்து எளிதாக்க மிக புத்திசாலித்தனமாகவும், நகைச்சுவையாகவும் பதில் அளித்துள்ளார்.

மேடையில் நகைச்சுவையாகப் பதில் அளித்த ஜெஃப் பெஸோஸ்

மேடையில் நகைச்சுவையாகப் பதில் அளித்த ஜெஃப் பெஸோஸ்

அந்த பெண்ணிடம் ஜெஃப் பெஸோஸ் கூறியது " முதலில் எனது மன்னிப்புக்கள், வழக்கத்திற்கு மாறான இந்த இடத்தில் உங்களின் பொருட்களை வாங்கிக்கொள்கிறேன், வேறு யாருக்கும் ஏதேனும் பொருட்களைத் திருப்பி தர வேண்டியது இருக்கா?" என்று மேடையில் நகைச்சுவையாகப் பதில் அளித்துள்ளார்.

வைரல்

அப்பெண்ணின் பொருட்கள் அமேசான் சிஇஓ கைகளில் நேரடியாக மாநாட்டில் வழங்கப்பட்டுள்ளது. பொருட்களைத் திருப்பி கொடுத்த பெண் அமேசான் நிறுவனத்தின் ஒரு முக்கிய ஷேர் ஹோல்டர் என்பதும் குறிப்பிடத்தக்கது. தற்பொழுது இந்த சம்பவம் குறித்து வெளியிடப்பட்ட டிவிட்டர் பதிவு வைரல் ஆகிவருகிறது.

Best Mobiles in India

English summary
woman asks amazon ceo return product meeting : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X