பெண்ணிடம் தவறாக நடந்துகொண்டதால் ரூ.200 இழப்பீடு வழங்கிய ஸ்விக்கி.! என்ன கொடுமை சார் இது.!
டோர் ஸ்டேப் டெலிவரி செய்யச் சென்ற ஸ்விக்கி ஊழியர் மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது.
டோர் ஸ்டேப் டெலிவரி செய்யச் சென்ற ஸ்விக்கி ஊழியர் மீது பாலியல் புகார் பதிவு செய்யப்பட்டுள்ளது. பாதிக்கப்பட்ட பெண் வாடிக்கையாளருக்கு ஸ்விக்கி நிறுவனம் கொடுத்த பதில் அப்பெண்ணை மட்டுமின்றி அனைவரையும் அதிர்ச்சியில் உறையவைத்துள்ளது.

தவறுதலாக நடக்க முயன்ற ஸ்விக்கி ஊழியர்
பெங்களூருவைச் சேர்ந்த பெண் ஒருவர், ஸ்விக்கி இல் உணவு ஆர்டர் செய்திருக்கிறார். உணவை டெலிவரி செய்ய வந்த ஸ்விக்கி ஊழியர் அப்பெண்ணிடம் தவறுதலாக நடக்க முயன்றுள்ளார். ஆத்திரம் அடைந்த அப்பெண் அவரை திட்டி வெளியே அனுப்பி இருக்கிறார்.

ஸ்விக்கி வாடிக்கையாளர் சேவை மையம்
பாலியல் ரீதியான தொல்லை கொடுத்த அந்த ஸ்விக்கி ஊழியர் மீது, அப்பெண் புகார் அளிக்க ஸ்விக்கி வாடிக்கையாளர் சேவை மையத்திற்குக் கால் செய்திருக்கிறார். அப்பெண்ணிடம் பேசிய வாடிக்கையாளர் மைய அதிகாரி, பெண்ணிடம் மன்னிப்பு கேட்டிருக்கிறார்.

ரூ.200 மதிப்பிலான கூப்பன் இழப்பீடு
பாதிக்கப்பட்ட பெண்ணிடம் ஸ்விக்கி நிறுவனத்தின் சார்பில் வாடிக்கையாளர் மைய அதிகாரி மன்னிப்பு கேட்டதுடன், ரூ.200 மதிப்பிலான கூப்பன் ஒன்றையும் இழப்பீடாக வழங்கியுள்ளனர். அதிகாரியின் அலட்சிய பதிலை கேட்டு கூடுதல் ஆத்திரம் அடைந்த பெண், தனது பேஸ்புக் பக்கத்தில் ஸ்விக்கி ஊழியர்களின் அலட்சியப் போக்கைக் கண்டித்து பதிவு ஒன்று பதிவிட்டுள்ளார்.

ஸ்விக்கி ஊழியர் மீது கடும் நடவடிக்கை
ஸ்விக்கி நிறுவனத்தை டேக் செய்து பதிவு செய்யப்பட்டதினால், ஸ்விக்கி நிறுவனம் நேரடியாகத் தலையிட்டுப் பாதிக்கப்பட்ட பெண்ணின் பதிவிற்குப் பதில் அளித்துள்ளது. தனது வாடிக்கையாளரிடம் தகாத முறையில் நடந்துகொண்ட ஸ்விக்கி ஊழியர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் இச்சம்பவத்திற்கு மனம் வருந்துவதாகவும் ஸ்விக்கி நிறுவனம் தெரிவித்துள்ளது.


Click it and Unblock the Notifications