தேனீக்களாக சூழ்ந்து அபிநந்தனுடன் செல்பி எடுத்த ராணுவ வீரர்கள்: வைரல் வீடியோ.!

|

அபிநந்தன் என்றாலே இந்தியா-பாகிஸ்தானுக்கும் மட்டும் பழக்கப்பட்ட பெயர் கிடையாது இன்று. பல்வேறு நாடுகளிலும் இன்று டிரெண்டிங் ஆகி இருக்கின்றது.

அதுவும் இந்திய ராணுவ வீரர் என்றால் தனித்து சிறப்பு தான். எந்த ஒரு நாடும் இதுவரை அமெரிக்காவின் எப்-16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்தாத போது, இந்திய ராணுவ வீரர் அபிந்தன் சாதாரமாணமாக அதை விட தொழில்நுட்பத்தில் குறைவாக இருக்கும் மிக்-21 ரக போர் விமானத்தை வைத்து சுட்டு வீழ்த்தியுள்ளார்.

தேனீக்களாக சூழ்ந்து அபிநந்தனுடன் செல்பி எடுத்த ராணுவ வீரர்கள்.!

பாகிஸ்தானிடம் பிடிபட்ட போதும், அதையும் கூலாகவும் துணிச்சலாகவும் எதிர் கொண்டு நாட்டு ரகசியத்தை வெளிப்படுத்தாமல் இருந்த வீரர் அபிநந்தன் தான்.

தற்போது, ராணுவ முகாமிற்கு திரும்பியுள்ள போது, அவருடன் பணியாற்றும் வீரர்கள் ஒன்றாக சேர்ந்து தேனீ கூட்டத்தை போல மொய்த்து செல்பி எடுத்த துவங்கியுள்ளனர்.

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்:

இந்தியா-பாகிஸ்தான் போர் பதற்றம்:

புல்வாமா தாக்குதலுக்கு பலி தீர்க்கும் விதமாக இந்திய விமானப்படை பாகிஸ்தான் எல்லைகள் சென்று தாக்குதல் நடத்தி தீவிரவாதிகளின் முகாம்களை அழித்தது. இதனால் இருநாட்டுக்கும் போர் பதற்றம் ஏற்பட்டது.

இந்திய எல்லைக்கு அத்துமீறி நுழைந்து பாகிஸ்தான் ராணுவம் சம்பவத்திற்கு பலி தீர்க்கும் விதமாக தாக்குதல் நடத்தியது. அப்போது, இந்திய விமானப்படை விமானங்கள் விரட்டி சென்றன.

சுட்டு வீழ்த்தப்பட்டது எப்-16:

சுட்டு வீழ்த்தப்பட்டது எப்-16:

பாகிஸ்தான் நாட்டுக் சொந்தமானது எப்-16 ரக போர் விமானம். இது அமெரிக்காவின் தயாரிப்பு ஆகும். எப்-16 விமானம் 4ம் தலைமுறையை சார்ந்தது.

இந்தியா விமானம் 21 விமானம் விரட்டி சென்று எப்.16 ரக விமானத்தை சுட்டு வீழ்த்தியது. மிக் 21 விமானம் ரஷ்யாவின் தயாரிப்பாகும். 3ம் தலைமுறையை சார்ந்தது.

இருந்த போதும், இந்தியாவிடம் உள்ள விமானத்தை விட தொழில்நுட்பத்தில் சிறந்த இருக்கும் எப்-16 சுட்டு வீழ்த்தியது வீரர் அபிந்தன் தான். பிறகு மேலும், ஒரு எப்.16 விமானத்தால் அபிந்தன் விமானமும் சுட்டு வீழ்த்தப்பட்து என்று தெரிவிக்கப்பட்டது.

பாகிஸ்தானிடம் சிக்கினார் அபிந்தன்:

பாகிஸ்தானிடம் சிக்கினார் அபிந்தன்:

பிறகு, பாராசூட் மூலம் தப்பிய அபிந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் விழுந்தார். அவரை பொது மக்கள் சிக்கினார். பின் பாகிஸ்தான் ராணுவம் அவரை சிறைப்பிடித்தது. இதுகுறித்து வீடியோவும் சமூக வலைதளத்தில் வெளியானது. அப்போதும் பொது மக்களிடமோ இல்லை ராணுவத்திடமோ நாட்டின் ரகசியத்தை கசியவிடல்லை. ராணுவ அதிகாரிகளின் கேள்விக்கும் கூலாக பதிலளித்தார். பின் காப்பியும் சுவையாக இருப்பதாக தெரிவித்தார்.

மிரண்ட அமெரிக்கா:

மிரண்ட அமெரிக்கா:

அமெரிக்காவின் எப்16 ரக போர் விமானத்தை அதுவும் தன்னை விட தொழில்நுட்பத்தில் பின் தங்கியுள்ள ரஷ்யாவின் மிக் 21 ரக விமானத்தை வைத்து சுட்டு வீழ்த்தியிருப்பது எவ்வாறு என்று அமெரிக்கா மிரண்டது. மேலும், வீரர் அபிநந்தனின் துணிச்சான வீரத்தையும் கண்டு அமெரிக்கா மிரண்டது. இதுவரை எந்த நாடும் அமெரிக்காவின் எப்16 ரக போர் விமானத்தை சுட்டு வீழ்த்த வில்லை என்பது குறிப்பிட தக்கது.

நாடு திரும்பினார் அபிந்தன்:

நாடு திரும்பினார் அபிந்தன்:

இந்தியா, அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கொடுத்த அழுத்தத்தால், இந்தியா திரும்பினார் அபிந்தன். இந்தியா ராணுவம் சார்பில் அவருக்கு உற்சாக வரவேற்று அளிக்கப்பட்டது. விடுமுறையில் இருந்தாலும், விடுமுறைக்கு முன்பே பணிக்கு திரும்பிவிட்டார்.

செல்பி எடுத்த வீரர்கள்:

இதனைத் தொடர்ந்து மருத்துவ சிகிச்சை மற்றும் மனநல சிகிச்சைக்குப் பின் ஜம்முவில் பணியமர்த்தப்பட்டுள்ளார். இதையடுத்து அவருடன் சேர்ந்து புகைப்படம் எடுத்துக் கொள்ள சக வீரர்களும், மற்ற துறை ஊழியர்களும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

புகைப்படம் எடுத்த பின்னர் பாரத் மாதா கி ஜே என்று கோஷமிட்டு அபிநந்தனுக்கு வாழ்த்துத் தெரிவித்தனர். இதுகுறித்த வீடியோவும் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Wing Commander Abhinandan’s selfie video goes viral on social media : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X