தெரிந்தோ தெரியாமலோ நாம் தொடர்ந்து செய்யும் ஒரு தவறும், பின்விளைவுகளும்.!

பேஸ்புக் அக்கவுண்ட் இல்லாதவர் கிடையாது என்பது போல இதை நிகழ்த்தாதவரும் கிடையாது.!

|

எந்நேரமும்... எவ்வளவு லைக்ஸ் வந்துள்ளது, இன்னும் எவ்வளவு லைக்ஸ் வரும், யாரெல்லாம் லைக்ஸ் போட்டு இருக்கிறார்கள் என்பதை கண்காணித்துக் கொண்டே இருப்பவர்ளை 'மரியாதையாக' லைக்காஃபோபியா ( Likeaphobia)நோய் கொண்டவர்கள் என்றும் கூறலாம், கொஞ்சம் 'கேவலமாக' - பேஸ்புக் பைத்தியம் என்றும் கூறலாம்.

அந்த அளவிற்கு பேஸ்புக்கில் மூழ்கி திளைக்கும் நாம் அனைவரும், தெரிந்தோ தெரியாமலோ ஒரு தவறை செய்து கொண்டே இருக்கிறோம். அது என்ன தவறு, அதனால் வரும் விளைவுகள் என்ன என்பதை பற்றிய தொகுப்பே இது..!

லைக் :

லைக் :

பேஸ்புக் போஸ்ட்கள் மற்றும் பக்கங்கள் ஆகியவைகளை லைக் செய்வதென்பது நிர்பந்தமான ஒரு காரியமாகி விட்டது என்றே கூறலாம். லைக் என்பது மிகவும் எளிமையான, வேகமான காரியம் என்று பலர் நினைகிறார்கள் அவ்வளவு ஏன் லைக்குகளை பதிவு செய்வதை ஒரு கடமையாக செய்பவர்கள் கூட இருகிறார்கள்.

ஸ்கேம்மர் :

ஸ்கேம்மர் :

பேஸ்புக்கில் நாம் பதிவு செய்யும் லைக்குகள், நம்மையும் நம் விருப்பங்களையும் காட்டிக் கொடுத்து, நாம் ஸ்கேம்மர்களிடம் (Scammers) மாட்டிக்கொள்ளும்படியாக செய்யும் வாய்ப்புகள் மிகவும் அதிகம் என்பதை பலரும் அறிந்திருக்கவில்லை.

வைரஸ் :

வைரஸ் :

ஸ்கேம்மர் - என்பதற்கு மோசமான வணிக திட்டங்களை வகுப்பவர்கள் என்று பொருள், அதாவது இவர்கள் மக்களின் தகவல்களை திருடுவது, வைரஸ்களை பரப்புவது மற்றும் தவறான அல்லது போலியான தகவல்களை பரப்பி விடுவது போன்ற வேலைகளை செய்பவர்கள் ஆவார்கள்.

வெற்றி :

வெற்றி :

பேஸ்புக்கில் இருக்கும் ஸக்கேமர்கள் முதலில் சற்றும் தீங்கிழைக்காத போஸ்ட்களை பதிவு செய்வர், அது மிகவும் கவனத்தை ஈர்க்கக் கூடிய மற்றும் அதிகம் ஷேர் ஆகக்கூடியதாக இருக்கும் வகையில் பார்த்துக் கொள்வர். அந்த போஸ்ட் பெரிய அளவிலான வெற்றியை பெரும் வரை காத்திருப்பார்.

தீங்கிழைக்கும் உள்ளடக்கம் :

தீங்கிழைக்கும் உள்ளடக்கம் :

மிகவும் எளிமையானதாக மற்றும் வசீகரமானதாக தோன்றும் களின் போஸ்ட்கள் மிகவும் பிரபலம் அடைந்த பின்பு அதனுள் தீங்கிழைக்கும் உள்ளடக்கம் (malicious content)திணிக்கப்படும்.

பேவால் :

பேவால் :

அவ்வகையான உள்ளடக்கங்கள் மூலம் உங்களைப் பற்றிய சுய விவரங்களை திருடிக்கொள்ள முடியும். உதரணமாக, குறிப்பிட்ட பொருள்களை வாங்க சொல்லி விளம்பரம் செய்வார்கள் அல்லது பணம் செலுத்தும் வகையிலான 'பேவால்' (Paywall) போன்றவைகளை உருவாக்கி உங்கள் கிரெடிட் கார்ட் தகவல்களை திருடிக்கொள்ளவார்கள்.

பேஸ்புக் லைக் பேஜ் :

பேஸ்புக் லைக் பேஜ் :

இதுபோன்ற திருட்டு வேலைகள் போஸ்ட்களை பதிவு செய்து மட்டும் நடத்தப்படுவதில்லை, பேஸ்புக் லைக் பேஜ்கள் மூலமும் நடத்தப்படுகிறது என்பதும் குறிபிடத்தக்கது .

நியூஸ் பீட் :

நியூஸ் பீட் :

பூனைக்குட்டி, நாய்க்குட்டிகள், அழகான கருத்துக்கள் என நிரம்பி வழியும் லைக் பேஜ்களை நீங்கள் லைக் செய்தவுடன் ஸ்கேம்மர்கள் தீங்கு விளைவிக்கும் போஸ்ட்களை பதிவு செய்து, அது உங்கள் நியூஸ் பீட்டில் வருபடியாக செய்து விடுவார்கள். கண்மூடித்தனமாக லைக்குளை செய்ய வேண்டாம். உஷராக இருங்கள்.!

Best Mobiles in India

English summary
Here is why you should not like that Facebook post. Read more about this is in Tamil GizBot.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X