இனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது : மார்க் சக்கர்பெர்க்!

"தவறான செய்திகளுக்கு நாங்கள் கடைபிடிக்கும் வழிமுறை அதை சொல்லாமல் இருப்பது , இணையத்தில் தவறான ஒன்றை கூறிவிட முடியாது' என்கிறார் அவர்.

|

சதி கோட்பாடுகள் மற்றும் அடிப்படையற்ற தகவல்களை பரப்பும் முக்கிய வலதுசாரி அமைப்பான இன்போவார்ஸ்-ஐ (Infowars) தனது தளத்தில் தொடர்ந்து வைத்திருக்க பேஸ்புக் எடுத்துள்ள முடிவை அதன் சி.ஈ.ஓ மார்க் சக்கர்பெர்க்-ம் ஆமோதித்துள்ளார்.

இனப்படுகொலை மறுப்பு மற்றும் தகவல்போர் புரிவோரை பேஸ்புக் தடைசெய்யாது .!

கடந்த புதன்கிழமை ரீகோடில் வெளியிடப்பட்ட அவரின் பேட்டியில், வைரலாக பரவும் கட்டுக்கதைகள் மற்றும் அப்பட்டமான பொய்தகவல்களை கட்டுப்படுத்துவது பேஸ்புக்கின் பொறுப்பாக இருந்தாலும், அதற்காக அதை பதிவிட்டவர்களை தடை செய்வது என்பது மிக அதிகமான ஒன்றாக இருக்கும் என கூறினார்.

 நாங்கள் கடைபிடிக்கும் வழிமுறை

நாங்கள் கடைபிடிக்கும் வழிமுறை

"தவறான செய்திகளுக்கு நாங்கள் கடைபிடிக்கும் வழிமுறை அதை சொல்லாமல் இருப்பது , இணையத்தில் தவறான ஒன்றை கூறிவிட முடியாது' என்கிறார் அவர். " அனைவரும் தவறு செய்கிறார்கள். அதற்காக தவறு செய்யும் போது அவர்களின் கணக்கை முடக்கினால், பின்னர் மக்கள் குரல் கொடுப்பது என்பது கடினமாகிவிடும்.

பேஸ்புக் நியூஸ்பீட் தலைவர்

பேஸ்புக் நியூஸ்பீட் தலைவர்

சமீப நாட்களில் தகவல்போர் புரிவோர் உடனான பேஸ்புக்கின் உறவு அதீத ஆய்விற்கு உட்படுத்தப்படுகிறது. மேலும் பேஸ்புக் நிறுவனம் தவறான தகவலுக்கு எதிரான போரில் தனது முயற்சிகளை அதிகரித்து வருவதாக செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தது. ஆனால் பேஸ்புக்கில் பிரபலமான பக்கத்தை வைத்துக்கொண்டு தவறான தகவல்களை பரப்புபவர்களை அனுமதிக்கும் முடக்கிய தனது வழிமுறையை எப்படி பேஸ்புக் நிறுவனம் சரிசெய்யும் என நிருபர் ஒருவர் கேள்வி எழுப்பினார். பேஸ்புக் நியூஸ்பீட் தலைவர் ஜான் ஹெட்ச்மேன் அதற்கு பதிலளிக்கையில், பேஸ்புக் தவறான தகவல்களை எடுத்துக்கொள்வதில்லை என பதிலளித்தார்.

தவறான தகவல்

தவறான தகவல்

மேலும் சக்கர்பெர்க் கூறுகையில், பயனர்கள் ஒரு பதிவை தவறான கட்டுக்கதை என எச்சரிக்கை செய்தால், அதன் உண்மைத்தன்மையை ஆராய பரிசோதிப்பாளருக்கு பேஸ்புக் அதை அனுப்பும். அந்த பதிவு தவறாக இருந்தால், அதை நியூஸ் பீடில் பகிர்வதை பெருமளவில் குறைந்துக்கொள்வோம் என்றார்.

இந்த தவறான பதிவுகளை நீக்குவதைக்காட்டிலும், பகிர்வதை குறைக்கும் போது கருத்துகளை சுதந்திரமாக வெளிப்படுத்துவதற்கும் மற்றும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான சமூகத்திற்கும் ஒரு சமநிலை இருக்கும் என்கிறது பேஸ்புக் நிறுவனம். உடல்ரீதியான தாக்குதலுக்கு வழிவகுக்கும் தவறான தகவல்களை நீக்குவதற்கு வரும் மாதங்களில் கொள்கை மாற்றம் செய்யப்படும் என இந்த சமூகவலைதள நிறுவனம் கூறியுள்ளது.

இனப்படுகொலை

இனப்படுகொலை

இனப்படுகொலை நடந்தது என்பதை மறுப்பவர்களும் சமூக வலைதளங்களில் இருப்பதை அனுமதிக்க வேண்டும் என்கிறார் மார்க். "அது ஆழமான தாக்குதலாக இருக்கும் என நினைக்கிறேன். பல்வேறு நபர்கள் பல தவறானவற்றை பரப்பும் போது அதையெல்லாம் பேஸ்புக் கருத்தில் கொள்ளவேண்டும் என்பதை நான் நம்பவில்லை. ஒருவரின் நோக்கத்தை புரிந்துகொள்வது மிகவும் கடினம். அப்படியே அவர்கள் பல இடங்களில் தவறான தகவலை பரப்பினாலும், பேஸ்புக் அவர்களுக்கு தடைவிதிக்க கூடாது" என்கிறார் மார்க் சக்கர்பெர்க்.

சமூக வழிகாட்டுதலுக்கு எதிரானது

சமூக வழிகாட்டுதலுக்கு எதிரானது

இனப்படுகொலை மறுப்பு பற்றிய பேஸ்புக்கின் கொள்கைக்கு சவால் விடுகிறார் அவதூறு எதிர்ப்பு இயக்கத்தின் தேசிய இயக்குனர் ஜோனாதன் கிரீன்ப்ளாட். நாங்கள் பேஸ்புக்கின் நிலையை தொடர்ந்து எதிர்த்து, இனப்படுகொலை மறுப்பு அவர்களின் சமூக வழிகாட்டுதலுக்கு எதிரானது என கூற அவர்களையே கூற வைப்போம் என்கிறார்.

 விதிகளை மீறும் பதிவுகள்

விதிகளை மீறும் பதிவுகள்

எந்த பதிவு தங்களின் தளத்தில் இருக்க வேண்டும் என பேஸ்புக் முடிவு செய்யும் விதத்தில் வாஷிங்டனில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் அதிருப்தியில் உள்ளனர். காங்கிரஸ் விசாரணையில் ஆஜரான பேஸ்புக், கூகுள் மற்றும் டிவிட்டர் நிர்வாகிகள் எப்படி தங்கள் தளங்களில் தவறான செய்திகளை கண்டறிகின்றனர் என விளக்கினர்.

தகவல்போர் பற்றி எழுப்பிய கேள்விக்கு பேஸ்புக் நிறுவனம், தங்கள் விதிகளை மீறும் பதிவுகள் மற்றும் அந்த பக்கத்தையே நீக்க முடியும் என கூறியது. ஆனால் அதற்கான வரம்புகள் பற்றி கூறவில்லை.

Best Mobiles in India

English summary
Why Mark Zuckerberg Says Facebook Wont Ban Holocaust Deniers and Infowars : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X