திடீரென உயர்நிலைப் பள்ளிக்கு விசிட் அடித்த அமேசான் நிறுவனர்.! வைரலாகும் வீடியோ:காரணம் என்ன தெரியுமா?

|

ஜெப் பீசோஸ் பூமியில் மிகப்பெரிய பணக்காரராக இருக்கலாம். ஆனால் அமெரிக்க தலைநகரில் உள்ள ஒரு உயர்நிலைப் பள்ளி மாணவருக்கு அந்த அமேசான் தலைமை நிர்வாக அதிகாரி ஒரு சாதாரண மனிதர் தான் மற்றும் அவர் ஆச்சரியமளிக்கும் பயணத்தில் இருந்தாலும் "பெரிய விஷயமில்லை".

தொடர்ந்து படியுங்கள்

தொடர்ந்து படியுங்கள்

இப்போது வேகமாக வைரலாகிவரும் ஒரு வீடியோவில், அமேசான் நிறுவனர் மற்றும் தலைவரான ஜெப், வாஷிங்டன் டி.சி.யில் உள்ள டன்பார் உயர்நிலைப்பள்ளியில் தனது நிறுவனம் நிதியுதவி செய்த கணினி அறிவியல் வகுப்பைப் பார்வையிட்டு மாணவர்களுடன் உரையாடுவதை காணலாம். இந்த வீடியோ எதற்கு வைரலாகியது என குழப்பமாக உள்ளதா? தொடர்ந்து படியுங்கள்.

யார் ஜெப் பெசோஸ்

அமெரிக்காவில் உள்ள பல படிப்புகளுக்கு நிதியளிக்கும் அமேசானின் "எதிர்கால பொறியாளர் திட்டம்" பற்றி பீசோஸ் மாணவர்களுடன் பேசத் தொடங்கியபோது, ​​ஒரு மாணவர் "யார் ஜெப் பெசோஸ்?" என்று அவருக்கு பின்னால் அமர்ந்திருக்கும் மற்றொரு மாணவரிடம் இரண்டு முறை கேட்கிறார்.

வீடியோ வைரலாக காரணம்

வீடியோ வைரலாக காரணம்

உலகின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றிற்கு பீசோஸ்உரிமையாளர் என அந்த இளைஞனுக்கு கூறப்பட்ட போது ​​"பெரிய விசயம்தான்! அதனால் என்ன?" என அசால்ட்டாக திரும்ப கேட்கிறார். இதுதான் அந்த வீடியோ வைரலாக காரணம்.

கரோலின் டக்கர்

கரோலின் டக்கர்

ஒரு சில நிமிடங்கள் கழித்து, தனது கணினி திட்டம் பற்றி விளக்கிய அதே மாணவருடன் பீசோஸ் பேசுவதைக் காண முடிந்தது. பீசோஸ் அவரிடம் "நீங்கள் ஒரு நல்ல கதைசொல்லி. அந்த திறமையையும் தொடருங்கள்" என தெரிவித்தார். இந்த வீடியோவை கடந்த திங்களன்று பள்ளியில் என்.பி.சி வாஷிங்டனின் கரோலின் டக்கர் பதிவுசெய்திருந்தார்.

Gmail - ஈமெயிலை எப்படி ஷெட்டியூல் செய்து அனுப்புவது?Gmail - ஈமெயிலை எப்படி ஷெட்டியூல் செய்து அனுப்புவது?

எதிர்கால பொறியாளர்

எதிர்கால பொறியாளர்

அமேசான் அதன் எதிர்கால பொறியாளர் திட்டத்தில் ஒரு மைல்கல்லை அறிவிக்க டி.சி.யில் உள்ள டன்பார் உயர்நிலைப்பள்ளிக்கு வந்திருந்தது. அவர்களுடன் ஒரு ஆச்சரியமான விருந்தினர் ... ஜெப் பெசோஸ்," என்று கரோல் ட்வீட் செய்துள்ளார்.

 கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்

"வகுப்பில் இருந்த ஒரு இளைஞன் தான் ஜெப் பெசோஸ்ஸுடன் குறியீட்டு முறை பற்றி எவ்வளவு கற்றுக்கொண்டார் என்பதைப் பற்றி பேசினார். பின்னர் அமேசான் தலைமை நிர்வாக அதிகாரியுடன் பேசும் வாய்ப்பை எப்படியாவது பயன்படுத்திக் கொள்ள விரும்பியதாக அவர் என்னிடம் கூறினார்," என கரோலின் மேலும் டிவீட் செய்துள்ளார்.

அவரது டிவீட்-ல் உள்ள காணொளியை பார்த்த பலரும் தங்களது கருத்துக்களை பகிர்ந்து வருகின்றனர்.

மூன்று ரியர் கேமராக்களுடன் பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி8 பிளஸ் அறிமுகம்.!மூன்று ரியர் கேமராக்களுடன் பட்ஜெட் விலையில் மோட்டோ ஜி8 பிளஸ் அறிமுகம்.!

உயர் தொழில்நுட்ப பிரபலங்கள்

உயர் தொழில்நுட்ப பிரபலங்கள்

"அவர் இன்ஸ்டாகிராமில் 'செல்வாக்குமிக்கவராக' இல்லையென்றால், குழந்தைகள் அவரைப் பற்றி எப்படி அறிந்து கொள்வார்கள்? குழந்தைகள் அவர் மீது ஆர்வம் காட்ட பிகினி உடையில் கடற்கரையில் ஜெஃப் பீசோஸ்க்கு ஒரு போட்டோ சூட் தேவைப்படலாம் "என்று ஒருவர் பதிவிட்டார்

மற்றொருவர் செய்துள்ள ட்வீட்-ல் "மக்கள் அந்த குழந்தையை பற்றி கருத்துதெரிவிக்கின்றனர். ஆனால் அவர் அந்த பள்ளியில் கற்றுக்கொள்ள இருக்கிறார். உயர் தொழில்நுட்ப பிரபலங்கள் அவரது விருப்பப்பட்டியலில் இல்லாமல் இருக்கலாம்" என ஆதரவு தெரிவித்துள்ளார்.

35.6 பில்லியன் டாலர்

35.6 பில்லியன் டாலர்

நியூயார்க் போஸ்ட் பத்திரிகையில், "ஜெப் பெசோஸ் வகுப்பறையில் நுழைந்த போது, 15ல் மூன்று மாணாக்கர்களுக்கு மட்டுமே அவரைப்பற்றி தெரிந்திருந்தது" என வகுப்பாசிரியர் தெரிவித்துள்ளார்.


வாஷிங்டன் போஸ்டின் உரிமையாளரான பெசோஸ், அமேசான் பங்குகளில் 35.6 பில்லியன் டாலர் மதிப்புள்ள பங்குகளை தனது முன்னாள் மனைவி மெக்கென்சி பீசோஸுக்கு விவாகரத்து ஜீவனாம்சமாக வழங்கி அவரை உலகின் முதல் ஐந்து பணக்கார பெண்களின் ஒருவராகவும், அமேசானின் மிகப்பெரிய பங்குதாரர்களில் ஒருவராகவும் மாற்றிய போதிலும், இன்னும் 110 பில்லியன் டாலர் நிகர சொத்து மதிப்புள்ள உலகின் பணக்காரராக திகழ்கிறார்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Who Is Bezos?’ US Student Asks as Amazon CEO Stands Next to Him: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X