பறக்காதபோது விமானங்கள் எங்கு செல்கின்றன? வைரல் ஆனா வீடியோ!

|

அமெரிக்காவின் விமான நிலையத்தில் ஓடுபாதையில் நிறுத்தப்பட்டுள்ள '400' நூற்றுக்கும் மேற்பட்ட வெற்று விமானங்களின் வீடியோ இணையத்தில் தற்பொழுது வைரலாகியுள்ளது. லிபோர்னியாவின் விக்டர்வில்லில் உள்ள விமான நிலையத்தின் ஓடுபாதையில் நூற்றுக்கணக்கான விமானங்கள் வெறுமனையாக அருகில், அருகில் நிறுத்தப்பட்டுள்ளது. இந்த வைரல் பிரமிக்கத்தக்க வீடியோ இணையத்தில் வெளிவந்து விரைவாக வைரலாகி வருகிறது.

யாராவது யோசித்தீர்களா?

யாராவது யோசித்தீர்களா?

கொரோனா வைரஸ் பாதிப்பு உலகம் முழுவதும் பரவி இருக்கும் இந்த வேளையில் பயணத்துறை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. உலகம் முழுவதும் பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால், வானில் பறந்து திரிந்த விமானங்கள் அனைத்தும் தரையிறக்கப்பட்டுள்ளன. தரையிறக்கப்பட்ட விமானங்களை விமானத்துறை என்ன செய்திருக்கும் என்று யாராவது யோசித்தீர்களா? அப்படி யோசித்திருந்தால் அதற்கான பதில் இந்த பதிவில் உள்ளது.

பிரைவேட் பைலட் வானில் பறந்து பதிவு செய்த வீடியோ

பிரைவேட் பைலட் வானில் பறந்து பதிவு செய்த வீடியோ

உலகத்தில் பல நாடுகளில் ஊரடங்கு சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளதால் பெரும்பாலான விமானங்கள் பயன்படுத்தப்படாமல் விமான நிலையங்களில் நிறுத்தப்பட்டுள்ளது. விமான நிலையத்தில் இந்த விமானங்கள் அனைத்தும் எப்படி நிறுத்தப்பட்டிருக்கும் என்று ஒரு பிரைவேட் பைலட் வானில் பறந்து வீடியோ பதிவு செய்து அதைத் தனது யூடியூப் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

மே மாதக்குள் 4 கோடி பேரிடம் மொபைல் இருக்காது: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ICEA கோரிக்கை!மே மாதக்குள் 4 கோடி பேரிடம் மொபைல் இருக்காது: அரசு விரைந்து நடவடிக்கை எடுக்க ICEA கோரிக்கை!

விமானங்கள் எந்த விதத்தில் நிறுத்தபட்டுள்ளது என்று பாருங்கள்

விமானங்கள் எந்த விதத்தில் நிறுத்தபட்டுள்ளது என்று பாருங்கள்

வீடியோ கிளிப்பின் வியத்தகு காட்சிகள் உங்களைத் திடுக்கிட வைக்கும் என்பதில் சந்தேகமில்லை. பிரையன் கீத் (Bryan Keith) தனது க்ரூமன் டைகர் விமானத்தில் தெற்கு கலிபோர்னியா லாஜிஸ்டிக்ஸ் விமான நிலையத்தின் மீது பறந்து, விமான நிறுவனங்கள் தங்கள் விமானங்களை எந்த விதத்தில் நிறுத்தியுள்ளது என்பதை விலகும் படி ஒரு வீடியோ காட்சி பதிவைப் பதிவு செய்துள்ளார்.

400க்கும் மேற்பட்ட வெற்று விமானங்கள்

விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாடு (ஏடிசி) துறையின் ஒருங்கிணைப்பில் படமாக்கப்பட்ட இந்த வீடியோவில் 400க்கும் மேற்பட்ட வெற்று விமானங்கள் ஒன்றோடொன்று நெருக்கமாக நிறுத்தப்பட்டுள்ளதை வீடியோ காட்சி தெளிவாகக் காட்டுகிறது. இதில் விமான நிலையத்தின் ஓடுபாதையில் விமானங்கள் திரண்டுள்ளது நன்றாகத் தெரிகிறது.

பூமியின் வரலாற்றில் மிகவும் ஆபத்தான கொடூரமான இடம் இது தான் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!பூமியின் வரலாற்றில் மிகவும் ஆபத்தான கொடூரமான இடம் இது தான் - விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு!

வைரல் ஆகிவரும் வீடியோ

வைரல் ஆகிவரும் வீடியோ

உலகின் மிகப்பெரிய விமான நிறுத்துமிடங்களில் ஒன்றான விக்டர்வில் கலிபோர்னியா தற்போது கோவிட் -19 தொற்றுநோயால் அமைதியாகக் காணப்படுகிறது. அனைத்து விமானங்களும் ஓடுபாதையில் திரண்டு நிற்கும் இந்த காட்சி வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

Best Mobiles in India

English summary
Where Do Airplanes Go When Not Flying? Video Went Viral On Internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X