வைரல் ஆகும் அபிநந்தன் மற்றும் அவர் மனைவி இடையிலான உரையாடல்.! என்ன பேசுனாங்க தெரியுமா?

|

புல்வாமா தாக்குதலைக் கண்டித்து, பாகிஸ்தானிற்குப் பதிலடி கொடுக்கும் விதத்தில் இந்திய விமானப்படை வீரர்கள் பாக்கிஸ்தான் எல்லைக்குள் நுழைந்து தாக்குதல் நடத்தினர்.

வைரல் ஆகும் அபிநந்தன் மற்றும் அவர் மனைவி இடையிலான உரையாடல்.!

இதனைத் தொடர்ந்து பாகிஸ்தான் விமானப்படை இந்திய எல்லைக்குள் நுழைய முயற்சித்தது, பாகிஸ்தான் விமானங்களை இந்திய விமானப்படை அடித்து விரட்டியது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

விங் கமாண்டர் வீரர் அபிநந்தன்

எதிர்பாராத விதமாக இந்திய விமானப்படை விங் கமாண்டர் வீரர் அபிநந்தன் பாகிஸ்தான் எல்லைக்குள் சிக்கிக்கொண்டார். பாகிஸ்தான் அரசு அவரை கைது செய்து இரண்டு தினங்கள் சிறையில் அடைத்தது. இச்சம்பவம் உலகம் முழுதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

தாயகம் திரும்பிய அபிநந்தன்

இந்தியாவுடனான பேச்சுவார்த்தைக்கு பின் பாக்கிஸ்தான் அபிநந்தனை விடுவிப்பதாக ஒப்புக்கொண்டது. இரண்டு தினங்களுக்குப் பின்னர் அபிநந்தன் விடுவிக்கப்பட்டு தாயகம் திரும்பினார். அபிநந்தனுக்கு எல்லையில் இராணுவ வரவேற்பு வழங்கப்பட்டது.

மனைவியிடம் தொலைப்பேசியில் அபிநந்தன்

அபிநந்தன் பாகிஸ்தானால் கைது செய்யப்பட்டபோது, அவரின் மனைவியிடம் தொலைப்பேசியில் தொடர்பு கொண்டு பேசி இருக்கிறார். அப்பொழுது அபிநந்தன் மற்றும் அவரின் மனைவி தன்வி இடையிலான உரையாடலைத் தனியார் பத்திரிகை ஒன்று தற்பொழுது வெளியிட்டுள்ளது.

பதட்டமான சூழ்நிலையில் கேலி செய்த மனைவி

கைது செய்யப்பட்ட பதட்டமான சூழ்நிலையிலும் அபிநந்தன் மனைவி எந்தவித பதற்றமும் இல்லாமல் அவரை கேலி செய்து, அவர்கள் கொடுத்த டீ எப்படி இருக்கிறதென்று கேட்டிருக்கிறார். அபிநந்தனுக்குத் தான் போடு கொடுக்கும் டீயை விட இவர்கள் போட்டு கொடுத்த டீ நன்றாக இருக்கிறது என்று அபிநந்தன் சொன்ன பதிலுக்கு, அப்போ அந்த டீ-யிற்கான செயல்முறை கேட்டு வாருங்கள் என்று பதில் அளித்துள்ளார்.

சமூக வலைத்தளங்களில் வைரல்

இந்த உரையாடல் தற்பொழுது சமூக வலைத்தளங்கள் வேகமாக வைரல் ஆகிவருகிறது. பதற்றமான சூழ்நிலையிலும் அபிநந்தன் மற்றும் அவரின் மனைவி இருவரும் எந்தவித அச்சமும் இல்லாமல் கிண்டலாக உரையாடி இருப்பது நெட்டிசன்ஸ் இடையே வேகமாகப் பகிரப்பட்டுவருகிறது.

மிரேஜ் 2000

மிரேஜ் 2000 என்பது பிரெஞ்சு பாதுகாப்பு நிறுவனமான டசால்ட் ஏவியேஷன் உருவாக்கிய ஒரு சூப்பர் உயர் தொழில்நுட்பம் போர் ஜெட் ஆகும். இந்த விமானம் ஒரு மல்டிரோல் (பல்வேறு பணிகளை செய்யும்), ஒற்றை-இயந்திரம் (சிங்கிள் என்ஜீன்) கொண்ட நான்காவது தலைமுறை ஜெட் ஆகும்.

இந்திய விமான படைகளால் பயன்படுத்தப்பட்ட ஜெட்

இந்த ஜெட் தான், இந்த மாதம் நடத்தப்பட்ட புல்வாமா பயங்கரவாத தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வண்ணம் இந்திய விமான படைகளால் பயன்படுத்தப்பட்ட ஜெட் ஆகும். "கவலை வேண்டாம் நிம்மதியாக உறங்குங்கள், ஏனெனில் பாகிஸ்தான் விமான படை விழிப்பில் இருக்கும் என்று பாகிஸ்தான் விமான படை ட்வீட் செய்த நள்ளிரவே இந்திய விமான படையின் மிராஜ் தனது கைவரிசையை காட்டி உள்ளது. இப்படியாக பாகிஸ்தான் விமான படையின் கண்களில் விரலை விட்டு ஆட்டிய இந்த புத்திஜீவித போர் ஜெட் பற்றிய சில உண்மைகளை தான் இங்கே தொகுத்து உள்ளோம்.

01. வடிவமைப்பு

இந்த அதிநவீன பாதுகாப்பு விமானம் ஆனது மெஸ்ஸெர்-டவுட்டி மூலம் உருவாக்கப்பட்ட முறிவுடைய முக்கோண வகை தரையிறக்க கியர் (retractable tricycle type landing gear) பயன்படுத்துகிறது. இந்த வகை கியரில் டவுன் நோஸ்வீல்ஸ் (twin nosewheels) மற்றும் பிரதான கியரின் கீழ் ஒற்றை சக்கரமும் இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் விமானம் ப்ளை-பை-வயர் கட்டுப்பாட்டு அமைப்பின் கீழும் வேலை செய்யும். அதாவது அரை தானியங்கி ஆக மற்றும் கணினியால் கட்டுப்படுத்தப்பட்டு இயங்கும் அமைப்பின் கீழும் வேலை செய்யும்.

2. திறன்கள்

இந்த போர் ஜெட் சில மேம்பட்ட பாதுகாப்பு அம்சங்களைக் கொண்டுள்ளது. இந்த ஒற்றை / இரட்டை சீட்டர் விமானம் ஆனது எல்லா வானிலை அணுகுமுறைக்கு கீழும், குறைந்த உயரத்தில் அதே சமயம் அதிக வேகத்தில் பறக்கும் படி வடிவமைக்கப்பட்டுள்ளது. இது வழக்கமான மற்றும் லேசர் வழிகாட்டுதல் ஆயுதங்களை பயன்படுத்தி தானியங்கி குண்டுவெடிப்புகளை நிகழ்த்தும் திறனையும் கொண்டு உள்ளது. மற்ற ஜெட்களில் இருந்து வேறுபடும் அம்சம் எது என்று பேசினால் - வானத்தில் இருந்து தரையில் இருக்கும் இலக்கையும், வானத்தில் இருந்து வானத்தில் இருக்கும் இலக்கையும் தாக்கும் இதன் மல்டிபிள் டார்கெட் அம்சத்தை கூறலாம்.

3. ஆயுத இயந்திரம் (Weapon mechanism)

பாதுகாப்பு விமானத்தின் மிக முக்கியமான அம்சங்களில் ஒன்று - அது ஆயுதங்களை எவ்வாறு கொண்டு வருகிறது என்பது தான். அதை வெப்பன் மெக்கானிசம் என்பார்கள். இந்த விடயத்தில் நமது மிரேஜ் 2000 மிகப்பெரிய கில்லாடி ஆகும். இதனால் மொத்தம் 9 ஆயுதங்களை சுமந்து செல்ல முடியும். சிஸ்டம் பேலோடில் ஐந்து ஆயுதங்களையும் (ஏவுகணைகள்) மற்றும் அதன் இரண்டு இறக்கைகள் ஒவ்வொன்றிலும் சுமார் 2 ஆயுதங்களையும் கொண்டு செல்லும் திறனை கொண்டது. இதன் ஒற்றை-இருக்கை பதிப்பில் இரண்டு உயர் வகை துப்பாக்கிகள் ஆன 30எம்எம் துப்பாக்கிகள் இருக்கிறது.

4. எதிர் நடவடிக்கைகள்

சுய பாதுகாப்பு என்று வரும் போது, ட்ஸால்ட்டின் (Dassault) மிராஜ் 2000 போர் விமானம் ஆனது பல எதிர்ப்பு மெக்கானிசம்களை தன்னுள் கொண்டிருக்கிறது. அதில் ஐசிஎம்எஸ் எம்கே2 (ICMS mk2) பெறுதல் மற்றும் ஏவுகணை கட்டளை தரவு இணைப்புகளை கண்டறிவதற்கான ஒரு சமிக்ஞை செயலாக்க முறையும் உள்ளடக்கம்.

5. இலக்கு

இலக்குகள் மீது நிகழ்த்தப்படும் துல்லியத்தை பொறுத்தவரை மிரேஜ் 2000 போர் விமானம் ஆனது மிகவும் மேம்படுத்தப்பட்ட டிஜிட்டல் "ஆயுதம் விநியோகம் மற்றும் வழிசெலுத்தல் அமைப்பு" (WDNS) கொண்டு எதிரிகளின் கண்களில் விரலை விட்டு ஆட்டும். இதில் டிவி / சிடி சிஎல்டிபி லேசர் டிசைனேஷன் பாட் பொருத்தப்பட்டு உள்ளது. இது இரவு மற்றும் பகலில் என லேசர் வழிகாட்டுதலின் கீழ் ஆயுதங்களை செலுத்துவதற்கான திறனை இந்த போர் விமானத்திற்கு வழங்குகிறது. இந்த போர் விமானத்தின் ரேடார் ஆனது மொத்தம் 24 இலக்குகளை கண்டறியும் திறனை கொண்டது என்பதும், எட்டு மிக உயர்ந்த முன்னுரிமை அச்சுறுத்தல்களை ஸ்கேன் செய்யும் திறனை கொண்டுள்ளது என்பதும் குறிப்பிடத்தக்கது. இந்த தகவல்கள் அனைத்தும் ஏர்போர்ஸ்-டேகினாலஜி.காம் என்கிற வலைத்தளத்தில் இருந்து பெறப்பட்டுள்ளது.

முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

English summary
what wing commander abhinandan told his wife when he called while in pakistans custody : Read more about this in Tamil GizBot

இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more