புளுவேலை போல பலி வாங்க துடிக்கும் மோமோ சவால்: இந்தியாவுக்குமா ஆபத்து?

  புளுவேல் என்ற கேம் விளையாட்டு முதலில் ரஷ்யாவில் இருந்து துவங்கியது. இந்த கேம்மை விளையாடிய சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை 50வது கட்டளை (டாஸ்கை) நிறைவேற்றி தற்கொலை செய்ய வைக்கும்.

  புளுவேல் கேம் விளையாட்டால் உலகம் முழுக்குள்ள சிறுவர்கள் முதல் இளைஞர்கள் வரை ஏராளமானோர் இறந்தனர். புளுவேல் கேமை நிறைவு பெறும் போது அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல கட்டளையிடும்.

  அதையும் நிறைவேற்றி 50 வது கட்டத்திற்கு சென்றால், அந்த கேம் தற்கொலை செய்யும் அளவுக்கு மனநிலையை உருவாக்கும். தற்போது புளுவேலை கேம்மை போலவே மோமோ என்ற சாவல் விடும் விளையாட்டும் தற்போது உலகம் முழுக்க பரவலாகி வருகிறது.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  மோமோ அப்படினா என்ன?

  கடந்த 2016ல் ஜப்பான் டோக்கியோ நகரில் வெண்ணிலா கேலரியில் நடந்த கண்காட்சியில், ஒரு பொம்மை உருவம் வைக்கப்பட்டது. இந்த முகம் பேய் பிசாசு போன்று சித்தரிக்கும் வகையில் அவலட்சணம் கொண்டது.
  வெள்ளை தோலுடன் வீங்கிய கண்களுடன் கொடூரமாக சிரிக்கும் வகையில் உள்ள உருவத்திற்கு பெயர் தான் மோமோ. இவள் நம் மனநிலையை பாதிக்கும் தன்மை கொண்டவள்.

  சாவல் விடும் மோமோ:

  நம்மளுடைய ஸ்மார்ட் போனில் திடீரென மோமோ தோன்றும் இந்த மோமோ தைரியலம் இருந்தால் என்னுடன் விளையாடுங்கள் என்று சவால் விடலாம். சவாலை ஏற்றால் மன நலனை பாதிக்கும் வகையில், விசியங்கள் கூட நடக்கலாம்.

  மோமோ சவால் துவங்கிய இடம்:

  மோமோ என்பது முதலில் பேஸ்புக் பக்கத்தில் இருந்து தான் துவங்கியுள்ளது. ஒரு குழுவை சேர்ந்த சிலர் முன் தெரியாத ஒரு எண்ணில் இருந்து அழைப்பு விடுக்க முடியுமா என்று ஒருவருக்கொருவர் சாவல் விட்டு கொண்டனர் என்று மெக்சிகோ யுஐடிஐ காவல்துறை தெரிவித்தனைர்.

  செய்திகளை அனுப்பும் மோமோ:

  நீங்கள் செய்திகளை மோமோவுக்கு அனுப்பினால் அவளும் பதிலுக்கு செய்திகளை அனுப்புவாள். மேலும் அவள் உங்களின் ரகசியம் மற்றும் அனைத்து செய்திகளையும் தெரிந்து கொள்வாள். மேலும் மன நிலையை பாதிக்கும் வகையில் அச்சுறுத்தும் படங்களை மோமோ அனுப்புவால் என்று மெக்சிகோ காவல் துறை கூறியுள்ளது.

  மோமோ சவால் வரும்:

  மோமோ சவால் ஆனது பேஸ்புக், வாட்ஸ் ஆப், மெஸ்சேஞ்சர், டிவிட்டர் உள்ளிட்ட பல்வேறு சமூக வலைதளங்களிலும் மோமோ சவால்கள் வருவதாக ஏராளமானோர் தெரிவித்து வருகின்றனர். நீங்கள் மோமோவுக்கு செய்தி அனுப்பினாலும் பதிக்கு அவள் செய்திகளை அனுப்பி வருகிறார் மேலும் சவாலுக்கு தயாரா என மோமோ அழைப்பு விடுத்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

  அந்தரங் தகவல்கள் கேட்கும் மோமோ:

  மோமோடு ஆப்பில் இதற்கென்று தனி குரூப்பை உருவாக்கியுள்ளால், அதன் மூலம் மற்றவர்களின் அந்தரங்க வாழ்கைமுறையும் அதுகுறித்து தனிப்பட்ட முறையில் கேட்டு அறிந்து கொள்கிறாள் என்று தெரிவிக்கின்றனர். இதுபோன்ற பல்வேறு தகவல்களையும் பரப்பி வருகின்றனர். ஜப்பான் நாட்டில் +81 குறியீட்டு எண்கள், கொலம்பியா நாட்டில் +52 மெக்சிகோ நாட்டில் +52 என்ற குறியீட்டு எண்களுடன் அவர் தொடர்பு கொள்கிறாள் என்று கூறுகின்றனர்.

  மோவோவால் ஏற்படும் ஆபத்துகள்:

  மோமோவுடன் விளையாடுவதால், உங்களின் தனிப்பட்ட தகவல்களை திருடப்படும் அபாயம். வன்முறை மற்றும் தற்கொலை செய்ய தூண்டும். பணம் பறிப்பும் செய்யும். தன அழுத்தம், பதட்டம் மற்றும் இன்சோம்னியா என்று தூக்கமின்மை நோயை உள்ளிட்ட உடல் ரீதியாகவும் பாதிக்க கூடும்.

  நேபாளம் வரை பரவிய மோமோ சவால்:

  மோமோ சவால் ஆனது தற்போது அமெரிக்காவில் இருந்து பிரான்ஸ் வரையும், அர்ஜென்டினாவில் இருந்து நேபாளம் வரை உலகம் முழுக்க பரவி வருகிறது. இதுகுறித்து பெஸ்னில் சமூக ஊடகத்தில் இது டிரெண்டிங் ஆகி வருகிறது. இந்த போன்ற ஆபத்தான விளையாட்டுகளை பொது மக்கள் தவிர்க்க வேண்டும் என்று பிரான்ஸ் மெக்சிகோ நாட்டு போலீசார் எச்சரித்துள்ளனர். மேலும் இதுகுறித்து போலீசார் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

  டிரெண்டிங் ஹேஸ்டேக்:

  மெக்சிகோ பாணியில் ஸ்பெயின் நாட்டு போலீசாரும் #IgnoreNonsense என்ற ஹேஸ்டேக்கை பயன்படுத்தி விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர். மேலும், முட்டாள் தனமான விளையாட்டை புறக்கணிங்கள் என்று #PasaDeChorradas என்று இந்த ஹேஸ்டேக்கில் விழிப்புணர்வையும் ஏற்படுத்தி வருகின்றனர்.

  மோமோ என்பது புரளி:

  மோமோ என்ற உருவத்தை மட்டும் வைத்துக் கொண்டு அமெரிக்கா, பிரான்ஸ், மெக்சிக்கோ போன்ற பல்வேறு நாடுகளிலும் ஒருசிலர் வேண்டும் என்றே புரளியை பரப்பு வருகின்றனர். யாரோ ஒரு சிலர் இதுபோன்ற செயல்களில் ஈடுபட்டு அடுத்தவர்களின் நலனை கெடுக்கின்றனர். இது ஸ்டாகிராமில் முதலில் ஒரு பெண் வைத்துள்ளார். பிறகு ஒருசிலர் அந்த மோமோ உருவத்தை எடுத்துக் கொண்டனர்.

  அஜெர்டினாவில் ஒரு சிறுமி பலி:

  மோமோ சவால் விளையாட்டால் பாதிக்கப்பட்ட 12 வயது சிறுமி அஜெர்டினாவில் தற்கொலை செய்து கொண்டாள். இந்த விளையாட்டில் ஈடுபட்ட சிறுமியின் முழுவிவரம் குறித்தும் அஜெர்டினா போலீசார் வழக்குபதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

  இந்தியாவுக்கு ஆபத்து:

  இந்தியாவில் புளுவேல் விளையாட்டால் டெல்லி, கேரளா, தமிழ்நாடு, புதுச்சேரி, மும்பை உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களிலும் இளைஞர்கள், சிறுவர்கள் உள்ளிட்ட அந்த விளையாட்டிற்கு அமையாகி தற்கொலை செய்து கொண்டனர். தற்போது, இந்தியாவுக்கும் மோமோ சவால் விளையாட்டு ஏதாவது பாதிப்பை ஏற்படுத்தும் முன் நம் பெற்றோர்களும், இந்திய அரசும் கண் விழித்து அதை தடுக்கும் நடவடிக்கையில் ஈடுபட வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

  முகநூலில் எங்கள் செய்திகளை உடனுக்குடன் படிக்க க்ளிக் செய்யவும்.!

  English summary
  What is Momo Parents warned over sick WhatsApp suicide game that could be next Blue Whale: Read more about this in Tamil GizBot
  X

  இந்த நாள் முழுவதற்குமான செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள் - Tamil Gizbot

  We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more