ரயில் பெட்டியில் இந்த மஞ்சள் நிற சாய்வு கோடுகள் ஏன் இருக்கிறது? இதற்கு அர்த்தம் தெரியுமா?

|

இந்தியாவில் உள்ள அதிகளவு மக்கள் பெரும்பாலும் பேருந்துகளுக்கு அடுத்தப்படியாக ரயில் பயணங்களை தான் தேர்வு செய்கின்றனர். குறிப்பாக இப்போதெல்லாம் ரயில் பயன்பாடு அதிகரித்துவிட்டது என்று தான் கூறவேண்டும்.

தனியார் ரயில்

தனியார் ரயில்

இந்நிலையில் இந்தியாவின் முதல் தனியார் ரயில் போக்குவரத்துக்குச் சேவையை IRCTC தற்பொழுது அறிமுகம் செய்துள்ளது. விமானத்தில் உள்ளது போன்று அனைத்து சேவைகளும் இந்த தனியார் ரயிலில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதலாக நம்ப முடியாதபல சேவைகளையும் அறிமுகம் செய்துள்ளது.

மஞ்சள் நிற கோடுகள்

மஞ்சள் நிற கோடுகள்

இந்தியாவில் 1853-ம் ஆண்டு தான் ரயில்வே சேவை துவங்கப்பட்டது, பின்பு இந்த ரயில் சேவை 1951-ம் ஆண்டு தேசிய மயமாக்கப்பட்டது. இன்று முதல் பல்வேறு மாற்றங்களைச் சந்தித்து வருகிறது. அப்படி ஒருநாள் வந்த இந்த மாற்றம் தான் மஞ்சள் நிற கோடுகள்.

தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை

தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை

பொதுவாக ரயிலில் பயணித்திருப்பவர்களுக்குக் கூட ரயிலில் உள்ள சின்ன சின்ன விஷயங்கள், அல்லது குறியீடுகளுக்காகஅர்த்தம் தெரியாமல் இருக்கும். அப்படியான ஒருவிஷயம்தான் ரயில் பெட்டிகளில் கடைசியில் ஜன்னலுக்கு மேல் உள்ள
உள்ள மஞ்சள் நிற கோடுகள்,இந்த கோடுகள் எதைக் குறிக்கிறது என்பது பலருக்குத் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லைஎனக் கூறலாம்.

மூன்று ரியர் கேமராக்களுடன் ரூ.11,999-விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஏ20எஸ்.!மூன்று ரியர் கேமராக்களுடன் ரூ.11,999-விலையில் விற்பனைக்கு வரும் கேலக்ஸி ஏ20எஸ்.!

விரைவுவண்டி சூப்பர் பாஸ்ட் ரயில்கள்

விரைவுவண்டி சூப்பர் பாஸ்ட் ரயில்கள்

இந்தியாவில் விரைவுவண்டி சூப்பர் பாஸ்ட் ரயில்கள் எல்லாம் நீல நிறத்தில் ரயில் பெட்டிகளை கொண்டிருக்கும்.பெரும்பாலான பெட்டிகள் முன்பதிவு பெட்டிகளாக இருக்கும். ஒரு சில பெட்டிகள் மட்டுமே முன்பதிவில்லா பெட்டிகளாக
இருக்கும்.

ஜியோ பைபர் இணைப்பில் இலவசம்: மீண்டும் தெறிக்கவிட்ட அம்பானி.!ஜியோ பைபர் இணைப்பில் இலவசம்: மீண்டும் தெறிக்கவிட்ட அம்பானி.!

 முன்பதிவு உள்ள  பெட்டிகளில் இந்த கோடுகள் இருக்காது

முன்பதிவு உள்ள பெட்டிகளில் இந்த கோடுகள் இருக்காது

இந்த நீலநிற பெட்டியில் உள்ள நான்குமுனைகளில் உள்ள கடைசி ஜன்னலுக்கு மேல் மஞ்சள் நிற சாய்வு கோடுகள்இருக்கும். இந்த கோடுகள் இருந்தால் அந்த பெட்டிகள் முன் பதிவு இல்லாத பெட்டிகள் என அர்த்தம், முன்பதிவு உள்ள
பெட்டிகளில் இந்த கோடுகள் இருக்காது. எனவே ரயில்வே நிலையத்தில் பயணிகள் முன்பதிவில்லாத பெட்டியைஎளிதாக கண்டு பிடிக்க இது இவ்வாறு கொடுக்கப்பட்டுள்ளது.

Best Mobiles in India

English summary
What does yellow and white line indicates in the train coaches and More Details: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X