கேள்விபட்டிருப்பிங்க., பார்த்திருக்கிங்களா?- ஆறு போல் ஓடும் நெருப்பு குழம்பு- எரிமலை வெடிப்பு வீடியோ!

|

ஐஸ்லாந்தில் கடந்த சில வாரங்களில் மட்டும் 40 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிறிய நில நடுக்கும் ஏற்பட்டு எரிமலை வெடித்து தீக் குழம்பு ஆறுபோல் ஓடும் வீடியோ சமூகவலைதளத்தில் பதிவேற்றப்பட்டுள்ளது.

40 ஆயிரம் முறை நிலநடுக்கம்

ஐஸ்லாந்து தலைநகரான ரெய்ஜாவிக் பகுதியில் நில நடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. கடந்த சில வாரங்களில் மட்டும் சுமார் 40 ஆயிரம் முறை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து பொலிஸ் மற்றும் கடலோர காவல்படை அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்துள்ளனர். மேலும் பொதுமக்கள் அப்பகுதியில் இருந்து விலகி இருக்க அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.

வெடித்து சிதறிய எரிமலை

வெடித்து சிதறிய எரிமலை

ஐஸ்லாந்து தலைநகர் ரெய்காவில் நகரில் இருந்து 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எரிமலை வெடித்து சிதறியது. தரையில் சிவப்பு நிறத்தில் எரிமலை ஓடைகள் போல் ஓடும் இரவு நேர வீடியோ காட்சி பார்ப்பவர்களை பதைபதைக்க வைக்கிறது என்றே கூறலாம்.

ஐஸ்லாந்து ஆனது தீ மற்றும் பனியின் நிலம் என்ற அழைக்கப்படுகிறது. அந்த பகுதி ஐரோப்பாவின் மிகப்பெரிய எரிமலை பகுதியாக இருக்கிறது. சமீப காலத்தின் பூமியில் பாய்ந்த எரிமலை குழம்பின் மூன்றின் ஒரு பகுதி இதுவாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. ஆர்க்டிக் பகுதியின் எல்லையாக வட அட்லாண்டிக் தீவு இருக்கிறது.

ரேக்யூவீக் உள்ள இந்த எரிமலையானது சுமார் 800 ஆண்டுகளுக்கு பிறகு வெடித்து சிதறியது. மேலும் இதேபோல் கடந்த 2010 ஆம் ஆண்டு ஐரோப்பாவில் உள்ள எரிமலை வெடித்தபோது அந்த பகுதியில் உள்ள விமான போக்குவரத்தில் சிக்கல் ஏற்பட்டது.

ஆறுகளாய் ஒடும் நெருப்புக் குழம்பு

ஆறுகளாய் ஒடும் நெருப்புக் குழம்பு

ஐஸ்லாந்தில் இந்த முறை நான்கே வாரங்களில் சுமார் 40,000 முறை சிறிய அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது. எரிமலை வெடித்து நெருப்பு குழம்பு ஓடைகளை போல் ஓடியது. சிவப்பு நிறத்தில் வானம் தகித்துக் கொண்டு இருப்பதாகவும் இரவு நேரத்தில் தீக்குழம்பு ஆறுகளை போல் ஓடும் வீடியோ காட்சியும் இணையத்தில் வைரலாகி வருகிறது.

5000 அடி உயரத்தில் புகை

இதேபோல் கடந்த சில மாதங்களுக்கு முன் இந்தோனேசியாவில் உள்ள மவுண்ட் சினாபங்க் பகுதியில் எரிமலை வெடித்து சிதறியது. இதில் வானில் சுமார் 5000 அடி உயரத்தில் புகை வெளியேறியது. எரிமலை வெடிப்பு காரணமாக சுமார் 30,000-த்துக்கும் மேற்பட்ட மக்கள் இந்த பகுதியில் இருந்து வெளியேற்றப்பட்டனர்.

Source: Icelandic Meteorological Office - IMO

Best Mobiles in India

English summary
Volcano Eruption at Reykjanes Peninsula in IceLand: Video Viral in Social Media

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X