வைரல் வீடியோ: செந்நிற நிலவருகே சென்ற சிறிய ரக விமானம்!
கடந்த சில வரமாக நிலவு பற்றிய செய்திகள் வலைதளத்தை நிரப்பி வருகிறது. குறிப்பாக சந்திரயான் 2 திட்டம் துவங்கிய நேரத்திலிருந்து நிலவு தொடர்பான செய்திகள் அதிகளவில் பகிரப்பட்டு வருகிறது. அதேபோல் தற்பொழுது நிலவு பற்றிய ஒரு வீடியோ பதிவு சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது.

நிலவு பயணம்
விக்ரம் லேண்டர், நிலவின் தென்துருவத்தில் தரை இறங்குவதற்கு சில நிமிடங்களுக்கு முன்பு, தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டுச் சரியான இடத்தில் தரை இறக்கப்பட முடியாமல் போனது. பிறகு தொலைந்து போன லேண்டர் கண்டு பிடிக்கப்பட்டு அதனுடன் மீண்டு தொடர்பை ஏற்படுத்து இஸ்ரோ கடினமாகப் போராடி வருகிறது.

மக்கள் பாராட்டு
நிலவில் இஸ்ரோவின் விக்ரம் லேண்டர் தரை இறங்கி நிலவு ஆராய்ச்சியைத் துவங்கும் என்று அனைவரும் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். ஆனால் அனைவரின் எதிர்பார்ப்பும் சோகத்தில் முடிவடைந்தது. இருப்பினும் இஸ்ரோவின் முயற்சியை மக்கள் பாராட்டி வருகின்றனர்.
பௌர்ணமி நிலவை அழகாக்கிய விமானம்
நிலவு பற்றிய இந்த சோகமான செய்திக்கு பின்னால், தற்பொழுது நிலவு பற்றிய ஒரு அழகான செய்தி சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. சீனாவில் உள்ள ஒரு தனியார் தொலைக்காட்சி நிறுவனம், ஒரு சிறிய விமானம், முழு பௌர்ணமி நிலவைக் கடந்துசெல்லும் அற்புத காட்சியைப் பதிவு செய்துள்ளது.

வைரல் வீடியோ
பௌர்ணமி நிலவு என்றாலே அழகு தானே, அப்படியான செந்நிற நிலவிற்கு முன்னாள் அழகிற்கே அழகு சேர்ப்பது போல் சிறிய விமானம் கடந்து சென்றுள்ளது அனைவரையும் கவர்ந்துள்ளது. சரியான நேரத்தில் பதிவு செய்யப்பட்ட இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது.


Click it and Unblock the Notifications