வைரல்: தகனம் செய்தபின் மீண்டும் உயிருடன் வந்து ஷாக் கொடுத்த நபர்!
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த ஒரு குடும்பத்தினர் தங்கள் வீட்டில் உள்ள நபருக்கு ஈமை காரியங்கள் செய்து உடலை தகனம் செய்துள்ளனர். தகனம் செய்யப்பட்ட நபர் மீண்டும் உயிருடன் வந்த சம்பவம் அப்பகுதி மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. தற்பொழுது இந்த செய்தி வைரல் ஆகிவருகிறது.

காணாமல் போன குமார்
பீகார் மாநிலத்தைச் சேர்ந்த சஞ்சீவ் குமார் (49), என்ற மன நோயால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த ஆகஸ்ட் மாதம் 26ம் தேதி அவர் வீட்டிலிருந்து காணாமல் போய்விட்டார். வீட்டில் உள்ளவர்கள் இவரைப் பத்திரமாகப் பார்த்து வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

போலீசில் புகார்
காணாமல் போன சஞ்சீவ் குமாரை பல இடங்களில் தேடியும், அவரை கண்டு பிடிக்கமுடியவில்லை. இதனால் கவலைகொண்ட குடும்பத்தினர் சஞ்சீவ் குமார் காணாமல் போனதை போலீசில் தெரிவித்துள்ளனர். காவல்துறையினரும் இவரை தேடி வந்துள்ளனர்.

ஆற்றில் கிடைத்த ஆண் பிணம்
காவல்துறையினருக்கு கிடைத்த தகவலின்படி, அந்த பகுதியில் உள்ள ஆற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று கிடைப்பதாகத் தகவல் வந்துள்ளது. ஆன் பிணத்தின் அடையாளங்கள் சஞ்சீவ் குமார் போன்று இருப்பதனால் குடும்பத்தினருக்கு தகவல் கொடுக்கப்பட்டது.

ஈமை காரியங்கள் செய்து உடல் தகனம்
குமார் குடும்பத்தினர் பிணத்தைப் அடையலாம் பார்த்து, அது குமார் தான் என்று உறுதி செய்தனர். இதையடுத்து குடும்பத்தினரும் ஊர்மக்களும் ஒன்றுகூடி குமாரின் உடலிற்கு ஈமை காரியங்கள் செய்து உடலைத் தகனம் செய்து முடித்தனர்.

மீண்டும் வீட்டிற்கு வந்த குமார்
இரண்டு தினங்களில் இறந்ததாகக் கூறப்பட்ட குமார் மீண்டும் வீட்டிற்கு வந்தார். அவரை பார்த்ததும் ஊர்மக்கள் மற்றும் குடும்பத்தினர் அத்தனை பேரும் ஆச்சிரியமடைந்தனர். பின்னர் தான் தெரியவந்துள்ளது அவர்கள் தகனம் செய்தது வேறு நபரின் உடல் என்று. தற்பொழுது இந்த செய்தி வைரல் ஆகிவருகிறது.


Click it and Unblock the Notifications