ஆ..ஆ..ஆ... என இணையத்தில் வைரல் ஆனா பாஸ்தா.. மீம் பிரியர்களுக்கு நல்ல தீனி தான் போல..

|

இன்றைய காலகட்டத்தில் இணையத்தில் பதிவிடும் பதிவுகளில் எந்த ஒரு பதிவு திடீரென வைரல் ஆகும் என்று யாருக்கும் தெரியாது. எப்போது வேண்டுமானாலும் என்ன வேண்டுமானாலும் நடக்கும் என்பதற்கு ஏற்றார் போல், இணையத்தில் பதிவிடும் பதிவுகளும் காரணம் இல்லாமல் சில நேரங்களில் வைரல் ஆகிவிடுகிறது. அப்படி சமீபத்தில் வைரல் ஆகிய ஒரு பதிவு தான் இந்த வேக வைத்த பாஸ்தா.

பாஸ்தா எல்லாம் வைரல் பதிவா?

பாஸ்தா எல்லாம் வைரல் பதிவா?

பாஸ்தா எல்லாம் வைரல் பதிவா? என்று நினைக்கலாம். அப்படி தான் நங்கள் கூட நினைத்தோம். ஆனால், இந்த பாஸ்தா படத்தை வைத்து உருவாக்கப்பட்ட சில மீம்களை பார்த்ததும் சிரிப்பு தான் வந்தது. உண்மையை சொல்ல போனால், சிறிது நேர சிரிப்புக்கு கிடைத்த நல்ல தீனி தான். நீங்களே பாருங்கள் விஷயம் புரியும்.

சோஷியல் மீடியாவில் வைரல் ஆகிவரும் பாஸ்தா

சோஷியல் மீடியாவில் வைரல் ஆகிவரும் பாஸ்தா

சோஷியல் மீடியாவில் புதிதாக வளம் வந்துகொண்டிருக்கும் இந்த பாஸ்தா புகைப்படம், புதிய மீம் டெம்பிளேட் ஆகா மாறியுள்ளது. பல சந்தர்ப்பத்திற்கு ஏற்றார் போல் இந்த பாஸ்தா படங்கள் ஒத்துப் போகிறது. இதனால், இப்போது இந்த பாஸ்தா புகைப்படத்தைப் பயனர்கள் தங்கள் விருப்பத்திற்கு ஏற்றார் போல் பல வினோதமான மற்றும் நகைச்சுவையான பதிவுகளுடன் பதிவிட்டு வருகின்றனர்.

சும்மா இருந்த சங்க ஊதி கெடுத்தான் 'வாட்ஸ்அப்'.. கடுப்பான பயனர்கள் கொடுத்த பதிலடி.. Signal-ஐ மொய்க்கும் உலகம்..

@bayabikomigim என்ற டிவிட்டர் பயனர் செய்த வேலை

@bayabikomigim என்ற டிவிட்டர் பயனர் செய்த வேலை

@bayabikomigim என்ற டிவிட்டர் பயனர் தான் இந்த பாஸ்தா படத்தை முதலில் வலைத்தளத்தில் பதிவிட்டிருக்கிறார். இவர் சமீபத்தில் வேகவைத்த பாஸ்தா பார்ப்பதற்கு ஒரு நபரின் முகம் போலக் காட்சியளித்ததைத் தொடர்ந்து அவர் அதை வலைத்தளத்திற்கு எடுத்து சென்றுள்ளார். இவர் பதிவிட்ட பதிவில் ஒரு தனி பாஸ்தாவும், அதுபோல 3 பாஸ்தாக்களும் ஆ... என வாயைப் பிளந்து இருப்பது போல் காட்சியளிக்கிறது.

மீம் கிரியேட்டர்களுக்கு தீனிப் போட்டும் பாஸ்தா

மீம் கிரியேட்டர்களுக்கு தீனிப் போட்டும் பாஸ்தா

உண்ணும் உணவில் இப்படி ஒரு வினோதமான தோற்றத்தைப் பார்த்து அந்த நபர் வலைத்தளத்தில் பதிவிட்ட இந்த பதிவு இப்போது மீம் கிரியேட்டர்களுக்கு தீனிப் போட்டுக்கொண்டிருக்கிறது. உங்களுக்கும் எதாவது நகைச்சுவையான அல்லது வினோதமான ஐடியா இருந்தால் இந்த பாஸ்தாவை வைத்து நீங்கள் ஒரு மீமை போடுங்கள், அதுவும் வைரல் ஆகிறதா என்று பார்க்கலாம்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Viral pics of screaming pasta sparks a meme fest on Twitter : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X