வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ! அப்படி என்ன செய்தார் இவர்?

|

உலகம் ஒரு நாடக மேடை என்று முன்னோர்கள் ஒன்றும் சும்மா சொல்லவில்லை, இதில் நாம் அனைவரும் நடிகர்கள் தான் என்ற வாக்கியத்தையும் யாரும் மறந்திருக்க முடியாது.

வைரலான இளம் பெண்ணின் சப்வே செல்ஃபி வீடியோ! அப்படி என்ன செய்தார் இவர்?

சப்வே ட்ரெயினை தனது மேடையாக நினைத்து செல்ஃபி எடுத்த இளம் பெண்ணைப் பற்றித் தான் டிவிட்டர் முழுக்க பேச்சு. யார் இந்த இளம் பெண்? அப்படி என்ன செய்தார் என்று கேட்கிறீர்களா? வாங்க சொல்கிறோம்.

அனைவருக்கும் மத்தில் நின்று அழகாக போஸ் கொடுத்த பெண்

அனைவருக்கும் மத்தில் நின்று அழகாக போஸ் கொடுத்த பெண்

சப்வே ரயிலில் பயணம் செய்த பென் யஹர் என்ற நபர், ரயிலில் ஒரு இளம் பெண் அனைவருக்கும் மத்தில் நின்று கொண்டு, அவரின் கை-பையைச் சீட்டில் வைத்து அதன் மேல் அவரின் மொபைல் போனை வைத்து அழகாக போஸ் கொடுத்து செல்ஃபி கிளிக் செய்ததை வீடியோ பதிவு செய்திருக்கிறார்.

மொபைலில் வீடியோ பதிவு

மொபைலில் வீடியோ பதிவு

இந்த இளம் பெண் சும்மா ஒன்றும் போஸ் கொடுக்கவில்லை, எந்த ஆங்கிளில் அவர் அழகா இருக்கிறார் என்பதைக் கணித்து மகாராணி போல் தொடர்ந்து விதவிதமாக போஸ் கொடுத்து புகைப்படங்களை கிளிக் செய்துள்ளார். இந்த முழு நிகழ்வையும் பென் யஹ்ர் தனது மொபைலில் பதிவு செய்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

<strong>தினசரி வரம்பு இல்லாமல் அன்லிமிடெட் ஜியோ டேட்டா யூஸ் பண்ணலாம்! ஜியோ வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்கள்!</strong>தினசரி வரம்பு இல்லாமல் அன்லிமிடெட் ஜியோ டேட்டா யூஸ் பண்ணலாம்! ஜியோ வரம்பற்ற ப்ரீபெய்ட் திட்டங்கள்!

8.4 மில்லியன் நபர்கள் பார்த்த வீடியோ

பென் யஹ்ர் பதிவிட்ட அந்த வீடியோ பதிவை இதுவரை சுமார் 8.4 மில்லியன் நபர்கள் பார்த்துள்ளனர், சுமார் 2.2 லட்சம் நபர்கள் அதை லைக் செய்துள்ளனர் மற்றும் இந்த பதிவு சுமார் 35,000 முறை ரீ-ட்வீட் செய்யப்பட்டுள்ளது. இந்த இளம் பெண்ணை தற்பொழுது அனைவரும் குயீன்(Queen) என்றும் சப்வே பே (Subway Bae) என்றும் போற்றி வருகின்றனர்.

கமெண்டில் பாராட்டுக்கள் குவிந்துள்ளது

கமெண்டில் பாராட்டுக்கள் குவிந்துள்ளது

இந்த இளம் பெண்ணின் துணிச்சல் மற்றும் தன்னம்பிக்கையை அனைவரும் பாராட்டியுள்ளனர். சுற்றத்தில் உள்ள யாரையும் பற்றி கவலைப் படாமல் அவர் வாழ்க்கைக்கான அந்த நொடியை வாழ்ந்து காட்டியிருக்கிறார் என்று கமெண்டில் பாராட்டுக்கள் வந்து குவிந்த வண்ணம் உள்ளது.

<strong>இந்தி திணிப்பு சர்ச்சை.! வசமாக சிக்கியது கூகுள்.!</strong>இந்தி திணிப்பு சர்ச்சை.! வசமாக சிக்கியது கூகுள்.!

சப்வே குயீனின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

சப்வே குயீனின் உண்மையான பெயர் என்ன தெரியுமா?

டிவிட்டரில் இவருக்கென்று புதிய ரசிகர் பட்டாளமே உருவாகியுள்ளது. வீடியோவை பார்த்து ரசித்த ரசிகர் ஒருவர் இவரின் அசல் டிவிட்டர் அக்கௌன்ட் மற்றும் அவரின் பெயரைக் கண்டுபிடித்துள்ளார். சப்வே குயீனின் உண்மையான பெயர் ஜெசிகா ஜார்ஜ் ஆம். அதுமட்டுமின்றி சப்வே ரயிலில் அவர் எடுத்த அசல் புகைப்படத்தையும் தேடிக் கண்டுபிடித்து டிவிட்டரில் பதிவிட்டிருக்கிறார்.

82,000 முறைக்கும் மேல் ரீ-ட்வீட்

வீடியோவுடன் பதிவிடப்பட்ட ஜெசிகா ஜார்ஜின் புகைப்பட ட்வீட்டும் வைரல் ஆகியுள்ளது. இந்த ட்வீட்டை 3.6 லட்சம் நபர்கள் லைக் செய்துள்ளனர் மற்றும் இதை 82,000 முறைக்கும் மேல் ரீ-ட்வீட் செய்துள்ளனர். ரசிகர்களின் கமெண்ட்களை படித்துவிட்டு ஜெசிகா ஜார்ஜ் தனது நெஞ்சார்ந்த நன்றியை அனைவருக்கும் தெரிவித்திருக்கிறார்.

Best Mobiles in India

English summary
Viral News: Woman’s Selfie Photo Shoot On Subway Went Viral On Social Media : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X