Home
Social media

வைரல் செய்தி: ரூ 25.96 லட்சம் ஓட்டல் பில் 102 நாட்களுக்கு பிறகு எஸ்கேப்பான தொழிலதிபர்!

ஐதராபாத் பகுதியில் உள்ள பஞ்சாரா ஹில்ஸ் என்ற சுற்றுலா தளத்தில் அமைந்திருக்கும் தாஜ் பஞ்சாரா என்ற நட்சத்திர ஓட்டலில் சங்கர் நாராயணன் என்ற தொழிலதிபர் சுமார் 102 நாட்கள் தங்கி பில் கட்டாமல் எஸ்கேப் ஆகியுள்ளார். இவர் தங்கியதற்கு பில் தொகை எவ்வளவு தெரியுமா? சரியாகச் சொன்னால் ரூ 25.96 லட்சம்.

102 நாட்கள் ஓட்டலில் தங்க முடியுமா?

102 நாட்கள் ஓட்டலில் தங்க முடியுமா?

102 நாட்கள் உல்லாசமாக நட்சத்திர ஓட்டலில் தங்கிவிட்டு, வாடகை பில்லை கொடுக்காமல் ஓட்டல் நிர்வாகத்திற்கு டேக்கா கொடுத்திருக்கிறார் சங்கர் நாராயணன். முதலில் 102 நாட்கள் அப்படி ஒரு ஓட்டலில் தங்க முடியுமா என்ற கேள்வி உங்களுக்கு எழுந்திருக்கும்.

முன் பணம்

முன் பணம்

நட்சத்திர ஓட்டல்களில் இது சாத்தியமே, ஆனால் அதற்கு ஏற்றார் போல் முதலிலேயே குறிப்பிட்ட அட்வான்ஸ் தொகையை வாடிக்கையாளர் ஓட்டல் நிர்வாகத்திற்குக் கொடுக்க வேண்டும். 102 நாட்கள் சங்கர் நாராயணன் தங்குவதற்கு முன்பே அட்வான்ஸ் தொகையாக ரூ13.62 லட்சத்தை முன் பணமாக வழங்கியிருக்கிறார்.

உல்லாசமாக நட்சத்திர ஓட்டலில் ஸ்டே

உல்லாசமாக நட்சத்திர ஓட்டலில் ஸ்டே

அட்வான்ஸ் தொகை போக மீதம் உள்ள பணத்தைக் கிளம்பும் போது சொட்டில் செய்வதாக ஓட்டலில் சொல்லியதால், யாரும் அவரை கேள்வி கேட்கவில்லை. அவரும் உல்லாசமாகத் தொடர்ந்து அந்த நட்சத்திர ஓட்டலிலேயே தங்கி இருந்திருக்கிறார்.

போன் சுவிட்ச் ஆப்

போன் சுவிட்ச் ஆப்

அவர் செலுத்திய அட்வான்ஸ் தொகைக்கான 102 நாள் முடிவடைந்தவுடன், சங்கர் நாராயணன் யாருக்கும் தெரியாமல் ஓட்டல் அறையை காலி செய்துவிட்டு எஸ்கேப் ஆகித் தலைமறைவாகிவிட்டார். ஓட்டல் நிர்வாகத்தினர் அவரது செல்போன் எண்ணிற்குத் தொடர்பு கொள்ள முயன்ற பொது, போன் சுவிட்ச் ஆப்பிலிருந்துள்ளது.

சமூக வலைத்தளத்தில் வைரல்

சமூக வலைத்தளத்தில் வைரல்

மிச்சம் உள்ள தொகையான 12 லட்சத்தை சங்கர் நாராயணன் தராமல், ஓட்டல் நிர்வாகத்திடமும் எந்த ஒரு தகவலும் தெரிவிக்காமல் தலைமறைவாகியுள்ளார். இதனைத் தொடர்ந்து ஓட்டல் நிர்வாகம் தொடுத்த போலீசாரிடம் புகாரின் பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை நடந்து வருகிறது. தற்பொழுது இந்த செய்தி சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகிவருகிறது.

Best Mobiles in India

English summary
Viral News Bussinessman Escaped From Taj Banjara After 102 Days Without Paying 12 Lakhs Bill Amount : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X