காற்றில் பறந்து - பறந்து விளையாடிய 76 வயது பாட்டி! வைரல் ஆகும் வீடியோ!

|

தலையில் நரை முடியைப் பார்த்ததும் அய்யயோ நமக்கு வயதாகிவிட்டதா என்று பலரும் கவலை கொள்வார்கள். இன்னும் சிலர் 40 வயதைத் தொட்டவுடன் வயதாகிவிட்டது என்று தங்களைத் தானே சோர்வடையச் செய்துவிடுவார்கள். இப்படி வயதாகிவிட்டது என்று நினைத்துச் சோர்வாக இருக்கும் பெரியவர்களுக்கு நம்பிக்கை அளிக்கும் விதமாக 76 வயதான குழந்தை ஒன்று தற்பொழுது சமூக வலைத்தளத்தின் வைரல் ஆகியுள்ளது.

எது 76 வயதுக் குழந்தையா? தம்பி அது பாடிப்பா!

எது 76 வயதுக் குழந்தையா? தம்பி அது பாடிப்பா!

எது 76 வயதுக் குழந்தையா? தம்பி அது பாடிப்பா என்று நீங்கள் மனதில் சொல்வது கேட்கிறது. இவற்றின் தோற்றம் வேண்டுமானால் தலையில் நரை விழுந்து, தோலில் சுருக்கங்களுடன் இருக்கலாம். ஆனால், இவரின் செயலும், இவரின் சேட்டைகளும் அப்படியானது இல்லை. இவர் மனதளவில் முற்றிலுமாக குழந்தை தான் என்பது உங்கள் அனைவருக்கும் இந்த வீடியோ பதிவைப் பார்த்தால் புரிந்துவிடும்.

ஊஞ்சலில் விளையாடிய பாட்டி

ஊஞ்சலில் விளையாடிய பாட்டி

ஆந்திராவில் உள்ள அனந்தபூர் மாவட்டத்தைச் சேர்ந்த பிராமணபள்ளியைச் சேர்ந்த ஜெயா என்ற சேர்ந்த 76 வயதானவர், தனது வீட்டின் முற்றத்தில் இருக்கும் மரத்தில் கட்டப்பட்டுள்ள ஊஞ்சலில் விளையாடும் காட்சி தற்பொழுது இணையத்தில் வைரல் ஆகியுள்ளது.

சும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்!சும்மா பறந்து பறந்து விரட்டும்: வெட்டுக்கிளியை விரட்ட அட்டகாச திட்டம்!

மனிதர்களின் வயது வெறும் எண் தான்

குழந்தைகள் கூட இப்படி ஊஞ்சல் ஆடியிருக்க முடியாது என்று கருத்துப்படி இவர் விளையாடி இருக்கிறார். இல்லை, இல்லை பறந்து-பறந்து காற்றில் ஆடியிருக்கிறார்.மனிதர்களின் வயது வெறும் எண் தான் என்கிறார் ஜெயா. ஜெயா ஊஞ்சல் ஆடும் வீடியோ நெட்டிசன்ஸ்களின் இதயங்களை வென்றுள்ளது.

WhatsApp பயனர்களே உஷார்! வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க!WhatsApp பயனர்களே உஷார்! வாட்ஸ்அப்பில் பரவும் புதிய மோசடி - இதை மட்டும் செய்யாதீங்க!

புதிய நம்பிக்கை

புதிய நம்பிக்கை

குறிப்பாக வயதானவர்களுக்கு புதிய நம்பிக்கை மற்றும் உற்சாகத்தை இவரின் வீடியோ உருவாக்கியுள்ளது. இந்த வயதிலும் தனது வாழக்கையை சிறந்த முறையில் சந்தோஷமாக வாழ்ந்துகொண்டிருக்கும் இவர் ஒரு எடுத்துக்காட்டு. வயது வெறும் எண் தான், டவுட்டா இருந்தால் ஒரு முறை ஊஞ்சல் ஆடி பார்க்கலாம்.

Best Mobiles in India

English summary
Video Went Viral: This 76 Year Old Grandma Proves Age Is Just A Number : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X