Home
Social media

வைரல்: 80 மைல் வேகத்தில் இவர் செய்த காரியத்திற்கு ரியாக்ஷன் கொடுக்காத காதலி!

ரோலர் கோஸ்டரில் செல்வதென்றால் அனைவருக்கும் இருதயமே நடுங்கிவிடும். மணிக்கு சுமார் 80 மைல் வேகத்தில் ரோலர்கோஸ்டர் வேகமாக அங்கும் இங்கும் அந்தரத்தில் தலைகீழாக என நம்மை உலுப்பி எடுத்துவிடும். அப்படியான அசுரர் வேகத்தில் சென்று கொண்டிருக்கும்பொழுது அந்தரத்தில் இருந்து பறந்துவந்த மொபைல்போனை பிடித்த ரோலர் கோஸ்டர் ரைடர் தற்போது வலைத்தளத்தில் வைரலாகி உள்ளார்.

சமூக வலைத்தளத்தில் வைரல்

சமூக வலைத்தளத்தில் வைரல்

மெரெடித் பிரோஸ்ட் என்ற டிவிட்டர் பயனர், தனது டிவிட்டர் பக்கத்தில் இந்த ரோலர்கோஸ்டர் வீடியோவை பதிவிட்டுள்ளார். இந்த வீடியோவில் உள்ள நபர் யார் என்ற விபரம் இன்னும் சரியாகத் தெரியவில்லை, இருப்பினும் இந்த வீடியோ சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகியுள்ளது.

தவற விட்ட ஸ்மார்ட்போன்

தவற விட்ட ஸ்மார்ட்போன்

80 மைல் வேகத்தில் ரோலர்கோஸ்டர் பயணித்துக் கொண்டிருக்கும் போது, பயணி ஒருவர் தன்னுடைய மொபைல் போனை கீழே தவற விட்டார். மொபைல் போனை தவற விட்டு போது ரோலர்கோஸ்டர் மேல் தளத்தில் இருந்துள்ளது.

ஸ்மார்ட்போனின் கதி அதோகதி

ஸ்மார்ட்போனின் கதி அதோகதி

கீழே தவறி விழுந்து போனின் நிலை என்ன என்பதை அந்த பயணி எட்டிப் பார்ப்பதற்குள், ரோலர்கோஸ்டர் மிக வேகமாகக் கீழ்த் தளத்திற்கு வந்து விட்டது. தவற விட்டா ஸ்மார்ட்போனின் கதி அதோகதி என்று நினைத்த உரிமையாளருக்கு இன்னொரு அதிர்ச்சி காத்திருந்தது.

80 மைல் வேகத்தில் சூப்பர் கேட்ச்

80 மைல் வேகத்தில் சூப்பர் கேட்ச்

மணிக்கு 80 மைல் வேகத்தில் ரோலர்கோஸ்டர் சென்று கொண்டிருக்கும் பொழுது, மேல் தளத்தில் தவறவிட்ட திறன்பேசியை, முன் சீட்டில் அமர்ந்திருந்த நபர் அசாதாரணமாக பிடித்து உற்சாகமாக சத்தமிடும் காட்சி முன்னால் இருந்த கேமராவில் பதிவாகி உள்ளது.

காதலி ரியாக்ஷன்

அந்த நபர் போனை பிடித்ததும், அவர் பின்னால் இருப்பவர்கள் தங்கள் பாராட்டைக் கைகொடுத்து வாழ்த்தியுள்ளனர். இருப்பினும் அவர் அருகிலிருந்த அவரது காதலி, பெரிதாக எதுவும் ரியாக்ஷன் கட்டிக்கொள்ளவில்லை என்று நெட்டிசன்ஸ்கள் கூட கேலி செய்து உள்ளனர்.

1.6 மில்லியன் வியூஸ்

1.6 மில்லியன் வியூஸ்

சமூக வலைத்தளத்தில் தற்பொழுது இந்த வீடியோ வேகமாக வைரலாகி வருகிறது. இதுவரை சுமார் 1.6 மில்லியன் பயனர்களைப் பார்வையிட்டுள்ளனர். 10 ஆயிரத்திற்கும் அதிகமானோர் ரீட்வீட் செய்துள்ளனர் மற்றும் 31,000திற்கும் அதிகமானோர் லைக் செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Best Mobiles in India

English summary
Video Went Viral Man On 80mph Rollercoaster Catches Phone Dropped By Another Guest : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X