Home
Social media

வைரல்: சாலையில் எச்சில் துப்பியவருக்கு அதிகாரிகள் கொடுத்த வினோத தண்டனை!

குஜராத் மாநிலத்தில் உள்ள சூரத் நகராட்சி, சாலையில் அசுத்தம் செய்பவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது, பலருக்கும் கடுமையான அபராதங்களை விதித்து வருகிறது. சாலையை அசுத்தம் செய்த ஒரு நபருக்கு அதிகாரிகள் கொடுத்துள்ள வினோத தண்டனை, தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

சாலையில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள்

சாலையில் பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள்

சாலையில் அசுத்தம் செய்பவர்கள் மீதி நடவடிக்கை எடுப்பதற்காக, சூரத்தில் உள்ள பல இடங்களில் சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளது. இதன் உதவியுடன் சாலையில் சிறுநீர் கழிப்பவர்கள், எச்சில் துப்புபவர்கள் மற்றும் குப்பை போடுபவர்கள் மீதி அந்நகராட்சி நடவடிக்கை எடுத்துவருகிறது.

வண்டியில் சென்ற ஒருவரை வளைத்துப் பிடித்த அதிகாரிகள்

வண்டியில் சென்ற ஒருவரை வளைத்துப் பிடித்த அதிகாரிகள்

அப்படி சமீபத்தில் சாலையில் எச்சில் துப்பியதற்காக அதிகாரிகள் வண்டியில் சென்ற ஒருவரை வளைத்துப் பிடித்து வினோதமான தண்டனையைச் சாலையிலேயே வழங்கியுள்ளனர். அதிகாரிகளின் முன் தண்டனையைச் செய்த இளைஞரின் 'அந்த' வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

வினோத தண்டனை வழங்கிய அதிகாரிகள்

சில மாதங்களுக்கு முன்பு சாலையை அசுத்தம் செய்த ஒருவருக்குச் சாலையைச் சுத்திகரிக்கும் தண்டனை வழங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. அதனைத் தொடர்ந்து தற்பொழுது சாலையில் எச்சில் துப்பிய நபரை அதிகாரிகள் வளைத்துப்பிடித்து, அபராதம் விதித்து வினோத தண்டனை வழங்கியுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மக்களிடம் நல்ல வரவேற்பு

மக்களிடம் நல்ல வரவேற்பு

ஆனால் இவரிடம் அபராதம் செலுத்தப் பணமில்லை என்று தெரிவித்த காரணத்தினால், அதிகாரிகள் இவரைச் சாலையில் தோப்புக்கரணம் போட வைத்துள்ளனர். சாலையில் இனிமேல் எச்சில் துப்பமாட்டேன் என்று கூறியபடியே அவரை அதிகாரிகள் தோப்புக்கரணம் போட வைத்து வீடியோ பதிவும் செய்து சமூக வலைத்தளத்தில் அதை பதிவிட்டுள்ளனர். இந்த தண்டனைக்கு மக்களிடம் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Best Mobiles in India

English summary
Video Went Viral Commissioner SMC Made Surat Guy To Do Squats For Spitting On The Road : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X