வைரல் வீடியோ: கொரியர் பரிசலில் வந்த பாம்பு! என்ன செய்தார்கள் தெரியுமா?
ஒடிசாவில் தனியார் நிறுவனம் ஒன்றில் வேலை பார்த்து வரும் நபரின் வீட்டுக்கு வந்த கொரியர் பரிசலில் பாம்பு இருந்துள்ளது. பார்சலை பிரித்ததும் பார்சல் பெட்டியிலிருந்து நாகம் தலையைத் தூக்கி படம் எடுத்து ஆடியுள்ளது. சமூக வலைத்தளத்தில் பார்சலில் வந்த பாம்பின் வீடியோ வைரல் ஆகியுள்ளது.

வீட்டிற்கு வந்த பார்சல் பாக்ஸ்
ஒடிசாவில் இயங்கிவரும் ஒரு தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார் முத்து குமரன் என்பவர், இவர் ஆந்திர மாநிலத்தில் உள்ள குண்டூர் பகுதியைச் சேர்ந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. வழக்கமாக இவரது பணி தொடர்பாக இவருக்கு கொரியரில் பார்சல்கள் வருவது வழக்கம்.

பார்சலில் ஷாக் ஐட்டம் டெலிவரி
இரண்டு தினங்களுக்கு முன்பும் அதேபோல் இவருக்கு பார்சல் ஒன்று வந்துள்ளது. பனி தொடர்பான பார்சல் என நினைத்து அவரும் அந்த பார்சலை வாங்கி திறந்துள்ளார். பார்சலை திறந்த போது முத்துக் குமரனுக்கு இருதயமே சில வினாடிகள் நின்று துடிக்கத் தொடங்கிவிட்டது.
படம் எடுத்து ஆடிய நாகம்
முத்துக் குமரன் திறந்த பார்சல் பெட்டியில் இருந்து சுமார் 3 முதல் 4 அடி நீளம் உடைய நாகப்பாம்பு படம் எடுத்து ஆடியுள்ளது. அதிர்ந்துபோன முத்துக்குமரன் உடனே தீயணைப்புத் துறையினருக்குத் தெரிவித்திருக்கிறார். தீயணைப்புத் துறையினர் பாம்பைப் பிடித்து வனத்துறையினரிடம் ஒப்படைத்துள்ளனர்.

பார்சல் எங்கிருந்து வந்தது?
வனத்துறையினர் பாம்பைப் பத்திரமாக வனப்பகுதிக்குள் விட்டுவிட்டனர். பார்சலில் இருந்த பாம்பை பிடித்தபோது எடுக்கப்பட்ட வீடியோ தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது. பார்சல் எங்கிருந்து வந்தது? யார் அனுப்பியது என்று விசாரணையை காவல்துறையினர் துவங்கியுள்ளனர்.


Click it and Unblock the Notifications