கடையில் வைர கற்கள் நூதன மாயம்- போலீசாருக்கே தண்ணி காட்டிய அப்பாடேக்கர் திருடன்.!

பாகிஸ்தானில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான வைர கற்கள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர்.

|

உலகளவில் விதவிதமான கொள்ளைகளும், திருட்டு சம்பவங்களும் தினமும் நடந்து வருகின்றன. அதில் ஒரு சில சுவாரஸ்சியமான சம்பவங்கள் அரங்கேரும். அதிலும் கடைக்காரருக்கே தெரியாமல் வைகற்களை திருடி சென்ற சம்பவமும், அதில் ஈடுபட்ட திருடனை கண்டுபிடிக்க போலீசாரும் கண் விழிகளை பிதுங்க வைத்த சம்பவமும் தற்போது அரங்கியுள்ளது. (திருட்டு குறித்த வீடியோவும் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.)

 போலீசாருக்கே தண்ணி காட்டிய அப்பாடேக்கர்  திருடன்

இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட திருடனை கண்டுபிடிக்க எடுத்த முயற்சிகள் கடுமையானதாக இருந்துள்ளது. பல்வேறு வழிகளிலும் கோணங்களிலும் யார் இந்த குற்றச்சம்பவத்தில் ஈடுபட்டது என்று கண்டுபிடிக்க போலீசார் எடுத்த முயற்சிகள் அனைத்தும் தோல்வியில் முடிந்தாலும், இறுதியில், விளக்கு எண்ணை ஊற்றி விடிவிடிய சிசிடிவி கேமரா காட்சிகளை வைத்து கண்டுடித்துள்ளனர்.

இப்படி இருந்தும் போலீசாரால் திருடனை கண்டுபிடித்தும் அவன் கைது செய்ய முடியவில்லை என போலீசார் மனக்குமுறல் இருக்கின்றதே ஐயையைய்யோ ஐயையைய்யோ இந்த அப்பாடேக்கரா நம்மளைய இவ்வளவு பாடு படுத்தினான் என்று கலங்கி போய்யுள்ளனர்.

பிரபல ரைவ நகைக்கடை:

பிரபல ரைவ நகைக்கடை:

பாகிஸ்தானில் உள்ள பிரபல நகைக்கடை ஒன்று உள்ளது. இங்கு ஏராளமான வைர கற்கள் விற்பனைக்கு குவித்து வைத்துள்ளனர். மேலும் வாடிக்கையாளர்களுக்கும் தினசரி வந்து செல்கின்றனர். மேலும் வாடிக்கையாளர்களுக்காக விற்பனைக்கு தனியாக ஸ்டோர் ரூம் ஒன்றில் ஏராளமான வைர கற்கள் குவித்து வைக்கப்பட்டுள்ளன.

 எடையில் மாற்றம்:

எடையில் மாற்றம்:

தினசரி ஸ்டோர் ரூமில் வைக்கப்படும் வைரக்கறங்களின் எடை குறைந்து கொண்டே இருந்தது. இதுகுறித்து கடையின் வேலையாட்கள் இதுகுறித்து உரிமையாளருக்கு தெரிவித்தனர். கடையில் வேலை செய்யும் மற்ற வேலையாட்களிடம் விசாரணை நடத்தப்பட்டது. இதில் எந்த முன்னேற்றம் ஏற்படவில்லை.

 மீண்டும் எடை குறைந்தது:

மீண்டும் எடை குறைந்தது:

இந்த விசாரணைக்கு பிறகு கடையில் இருந்த வைரகற்களின் எடையில் திரும்பவும் குறைந்து இருந்தது. இதனால் அதிர்ந்து போன கடை உரிமையாளர் யாரோ எனது கடையில் நூதன முறையில் திருடி வருவதாக உணர்ந்தார். மேலும் கடையில் இருந்த சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்தார். அதிலும் பலன் இல்லை. இதற்கு மறுநாளும் வைரக்கற்களின் எடை குறைந்ததால் கடை உரிமையாளர் கடுப்பாகினார்.

போலீசாரிடம் முறையிட்டார்:

போலீசாரிடம் முறையிட்டார்:

தனது கடையில் யாரோ நூதன முறையில் வைர கற்களை தினசரி திருடி வருவதாக போலீசாரிடம் கடை உரிமையாளர் புகார் அளித்தார். அப்படியோ என்னனே என்று போலீசாரும் நன்றாக கடையில் விசாரைணை நடத்துனீர்களா என்று கேட்டு விட்டு, வழக்கை விசாரிக்க சென்றனர். இந்த வழக்கு போலீசாருக்கு பெரிதாக முதலில் தெரியவில்லை.

போலீசார் விசாரணை:

போலீசார் விசாரணை:

போலீசார் விசாரணை நடத்திய அன்றும் கடையில் இருந்த வைகற்கள் மாயமாகியது. இதையறிந்த போலீசார் உடனடியாக கிடுக்குபிடி விசாரணையை மேற்கொண்டனர். அதில், கடை வேலையாட்கள், முதலாளி, வாடிக்கையாளர்கள் என பல கட்ட விசாரணை வளையத்திலும் முயற்சிகள் பலிக்கவில்லை.

மீண்டும் திருட்டு :

மீண்டும் திருட்டு :

இந்த அளவுக்கு போலீசார் கிடுக்குபிடி விசாரணை நடத்திய போதும் யாரோ நூதனமாக வைரகற்களை திருடிச் சென்றனர். இந்த விசியமும் போலீசாருக்கு தெரியவந்தது. யாரோ தொழில் நுட்பத்தை பயன்படுத்தி நூதனமாக இடுபடுகின்றனர் என்று போலீசார் நினைத்தனர். இதைத்தொடர்ந்து முழு கட்டுப்பாட்டில் வைர நகைக்கடையை கொண்டுவந்தனர்.

துள்ளியமாக கண்காணிப்பிலும் தண்ணி காட்டிய திருடன்:

துள்ளியமாக கண்காணிப்பிலும் தண்ணி காட்டிய திருடன்:

பாகிஸ்தானில் உள்ள இந்த வைர நகைகடையை போலீசார் துள்ளிமாக கண்காணிப்பில் ஈடுபட்டனர். அப்போதும் வைர நகைகற்கள் மாயமாகினர். இதனால் கடுப்பாகி திருடன் கையில் கிடைத்தால், அவனை சும்மா விடுவதில்லை என்ற மனநிலைக்கு போலீசார் தள்ளப்பட்டன. மேலும் கடையில் உள்ள சிசிடிவி காட்சிகளையும் ஆராய்ந்தனர். அதிலும் எந்த பலனும் இல்லை.

சவால் நிறைந்த திருட்டு:

சவால் நிறைந்த திருட்டு:

இந்த சம்பவம் மற்ற திருட்டுகளை போல் இல்லாமல் முற்றிலும் மாறுபட்டதாக இருந்தது. போலீசாரை ஒரு கட்டத்தில் எரிச்சல் அடைய செய்தாலும், திருடனை பிடித்தே ஆக வேண்டும். இது போலீஸ்கே சவால் விடும் திருட்டாக உள்ளது என்று போலீசார் நினைத்தனர்.

சிசிடிவி காட்சி ஆய்வு:

பிறகு மீண்டும் சிசிடிவி காட்சிகளை முழுமையாக போலீசார் ஆய்வு செய்தனர். அப்போது தான் தெரிந்தது. தங்களை சுமார் ஒரு மாதமாக படாத பாடுபடுத்திய திருடன் எறும்பு என்று. இதனால் போலீசார் அதிர்ந்து போயினர். கடையில் உள்ள ஒரு இடத்தில் தனது இருப்பிடத்தை அமைத்து இருந்தது. அதில் சுமார் 1200 வைர கற்களை வைத்து இருந்ததை போலீசார் கண்டுபிடித்தனர்.

வைரகற்கள் மீட்பு:

வைரகற்கள் மீட்பு:

இதைத்தொடர்ந்து போலீசார் எறும்பு கூட்டிற்கு சென்று அங்கியிருந்த வைர கற்கைள மீட்டனர். பிறகு வழக்குபதிவு ஏதும் செய்ய முடியவில்லை என்று ஆதங்கத்தோடும். இந்த வழக்கு வினோதமாக இருந்ததாகவும், ஒரு வழியாக இந்த சம்பவத்தை வெற்றிகரமாக கண்டுபிடித்துவிட்டாதாகவும் நிம்மதி பெரு மூச்சுவிட்டனர்.

Best Mobiles in India

English summary
Video Tiny ant walks off with diamond at jewellery shop : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X