வைரல் வீடியோ: தலப்போல வருமா! நடுவானில் கோளாறான விமானத்தை பத்திரமாக லேண்டிங் செய்த அஜித்!

|

நடிகர் அஜித் தமிழக திரையுலகில் முன்னணி நட்சத்திரமாக வலம் வருகிறார். இவருக்கு நடிப்பு மட்டுமின்றி பல துறைகளில் ஆர்வம் உள்ளது. குறிப்பாக ரேஸிங் மற்றும் குட்டி விமானங்களை உருவாக்கி அதை பறக்கவிட்டு விளையாடுவது இவருக்கு மிகவும் பிடித்த ஒன்றாகும். அண்மையில் நடிகர் அஜித் கட்டுப்பாடு மீறி சென்ற ஒரு குட்டி விமானத்தைச் சிறப்பாகத் தரையிறக்கியுள்ளார். இந்த வீடியோ தற்பொழுது வைரல் ஆகியுள்ளது.

 தல அஜித்

கடந்த காலத்திலிருந்தே, ரிமோட் மூலம் இயங்கும் ஏரோ மாடலிங் விமானங்களை உருவாக்குவதைப் பொழுதுபோக்காகச் செய்து வருகிறார். அண்மையில், அண்ணா பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த தக்‌ஷா என்ற மாணவர்கள் குழுவுடன் இணைந்து, அந்தக் குழுவின் ஆலோசகராகவும் இருக்கிறார் தல அஜித். மாணவர்களுக்கு ஏரோ மாடலிங் கற்றுக்கொடுத்து வருகிறார். ஆளில்லா விமானங்களை உருவாக்க மாணவர்களுக்கு உதவியாக இருக்கிறார்.

கொரோனா ஊரடங்கு

கொரோனா ஊரடங்கு காலத்தில், தக்‌ஷா குழுவினரின் ட்ரோன்கள் மூலம் வான் வழியாகக் கிருமி நாசினிகள் பல இடங்களில் தெளிக்கப்பட்டது. அஜித் தலைமையிலான தக்‌ஷா குழு உருவாக்கிய ட்ரோன்கள் இந்திய அளவில் பல்வேறு போட்டிகளில் முதல் இடம் பெற்று சாதனை படைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. தக்‌ஷா குழுவினரின் முயற்சியைப் பாராட்டி கர்நாடக மாநில துணை முதல்வர் அஸ்வத் நாராயண் தனது வாழ்த்துக்களை அஜித்துடன் பகிர்ந்துகொண்டார்.

வீடியோவில், அஜித் இயக்கும் ஆளில்லா விமானம்

இந்நிலையில், நடிகர் அஜித், சமீபத்தில் நடுவானில் கோளாறான ஆளில்லாத விமானத்தை திறமையாகத் தரையிறக்கிய வீடியோ காட்சி தற்பொழுது சமூக வலைத்தளங்களில் வைரலாகியுள்ளது. இந்த வீடியோவில், அஜித் இயக்கும் ஆளில்லா விமானம் புறப்பட்டு வானில் வலம் வருகிறது. சில நேரத்திற்குப் பின் தரையிறக்க முயற்சிக்கும் பொழுது விமானத்தின் லேண்டிங் கியரில் எதோ கோளாறு ஏற்பட்டுவிடுகிறது.

இதனால் விமானத்தின் லேண்டிங் எப்பொழுதும் போல பாதுகாப்பானதாக இருக்காது என்பது குழுவினர் அனைவருக்கும் தெரிந்துவிட்டது. ஆனால், இதைப் பற்றி எதுவும் கவலைப்படாமல் அஜித் நிலைமையைச் சாமர்த்தியமாகக் கையாண்டு, அந்த விமானத்தைப் பத்திரமாகத் தரையிறக்கச் செய்துள்ளார். லேண்டிங் கியரின் வலதுபுற கியர் வேலை செய்யவில்லை, இருப்பினும் இடது மற்றும் முன் கியர்களை பயன்படுத்தி லாவகமாக விமானத்தைத் தரையிறக்கிவிட்டார்.

தலப்போல வருமா

நடிகர் அஜித் எந்தவித பதட்டமும் இல்லாமல் நடுவானில் கோளாறான விமானத்தை மிக எளிதாக தரையிறக்கிவிட்டார். இதை கண்ட உடன் இருப்பவர்கள் அஜித்தைப் பாராட்டிக் கைதட்டு வாழ்த்துகின்றனர். தலப்போல வருமா! என்று இந்த வீடியோவை அஜித்தின் ரசிகர்கள் ஏராளமானோர் சமூக வலைத்தளத்தில் ஷேர் செய்து வருகின்றனர். தற்பொழுது இந்த வீடியோ வலைத்தளத்தில் வேகமாக வைரலாகி வருகிறது.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Video Of Thala Ajith Doing Safe Landing Of An Unmanned Aircraft Goes Viral On Internet : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X