ஜேசிபி வைத்து ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்த கொள்ளையர்கள் வீடியோ!

|

ஏடிஎம் திருட்டு சம்பவங்கள் பல இடங்களில், பல நாடுகளில், பல விதங்களில் நடைபெற்று வருகிறது. ஏடிஎம் இயந்திரங்களில் ஸ்கிம்மர் பொருத்தி நூதன முறையில் பணத்தைத் திருடும் புத்திசாலி கும்பலுக்கு நடுவில், முரட்டுத்தனமாக ஜேசிபி வைத்து ஏடிஎம் இயந்திரத்தை துண்டுக்கட்டாக அபேஸ் செய்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

முரட்டுத்தனமான முகமூடி கொள்ளையர்கள்

முரட்டுத்தனமான முகமூடி கொள்ளையர்கள்

அயர்லாந்தில் உள்ள ஒரு எரிவாயு நிலையத்திலிருந்த ஏடிஎம் இயந்திரத்தை ஒரு முகமூடி கொள்ளையர் குழு, ஜே.சி.பி.யைப் பயன்படுத்தித் திருடியுள்ளனர். பொதுவாக அயர்லாந்தில் உள்ள ஏடிஎம் இயந்திரங்கள் வெளிப்படையாகப் பணம் எடுக்கும்படி பொது இடங்களில் வைக்கப்பட்டுள்ளது.

சிசிடிவி கேமரா பதிவு

சிசிடிவி கேமரா பதிவு

அப்படி வைக்கப்பட்டிருக்கும் ஒரு ஏடிஎம் இயந்திரத்தைத் தான் இந்த முகமூடி கொள்ளையர்கள் நடுச்சாமத்தில் திருடியுள்ளனர். ஏடிஎம் இயந்திரத்தை சுவரில் இருந்து பெயர்த்து எடுத்து, துண்டுக்கட்டாக தூக்கி கொள்ளையர்களின் காரில் வைத்து அபேஸ் செய்துள்ள கட்சி அங்குள்ள சிசிடிவி கேமராவில் பதிவாகியுள்ளது.

வியூ 100-இன்ச் சூப்பர் டிவி இந்தியாவில் அறிமுகம்: பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை கேட்க வேண்டாம்.வியூ 100-இன்ச் சூப்பர் டிவி இந்தியாவில் அறிமுகம்: பலவீனமான இதயம் உள்ளவர்கள் விலையை கேட்க வேண்டாம்.

மீண்டும் வைரல் ஆகிவரும் வீடியோ

மீண்டும் வைரல் ஆகிவரும் வீடியோ

இந்த சம்பவம் கடந்த ஏப்ரல் மாதம் அயர்லாந்தில் நடைபெற்றுள்ளது. ஆனால் தற்பொழுது மீண்டும் இந்த வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் அதிகம் பகிரப்பட்டு வைரல் ஆகிவருகிறது. இதில் ஆச்சரியம் என்னவென்றால் இவர்கள் பயன்படுத்திய ஜேசிபி-ஐ அருகிலிருந்த கட்டுமான பனி இடத்தில் இருந்து இவர்கள் திருடி வந்துள்ளனர் என்பது தான்.

மோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்!மோடியின் துப்புரவு பணி ஒரு ஷூட்டிங்கா? வெளிச்சத்திற்கு வந்த உண்மை இதுதான்!

நெட்டிசன்ஸ்களின் கமெண்ட்

வீடியோவில் திருடர்களின் முயற்சி பார்த்த நெட்டிசன்ஸ்கள் அவர்களின் துணிச்சலைக் கண்டு வியந்துள்ளதாகவும், ஏடிஎம் எந்திரத்தை காரில் வைக்கும்பொழுது கார் தரைமட்டம் ஆகியிருந்தால் எப்படி இருக்குமென்றும் பல வினோதமான கமெண்ட்களை பதிவிட்டு வருகின்றனர்.

Best Mobiles in India

English summary
Video of robbers robbing ATM machine with JCB : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X