வைரல் வீடியோ: விண்வெளியிலிருந்து வீடு திரும்பிய கிறிஸ்டினா கோச்சை வரவேற்ற நாய்!
328 நாட்கள் விண்வெளியிலிருந்த பின்னர், சமீபத்தில் பூமிக்குத் திரும்பிய நாசா விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச் பற்றிய செய்திகள் சென்ற வாரம் முழுதும் வைரல் ஆகிக்கொண்டிருந்தது. தற்பொழுது அவர் சம்மந்தபட்ட ஒரு வீடியோ பதிவு சமூக வலைத்தளங்களில் சூறாவளியாய் வைரல் ஆகிவருகிறது.

328 நாட்கள் கழித்து பூமி திரும்பிய கிறிஸ்டினா கோச்
விண்வெளியில் புதிய சாதனையைப் படைத்த விண்வெளி வீரர் கிறிஸ்டினா கோச் ,டெக்சாஸில் உள்ள தனது வீட்டை அடைந்தபோது தான் இந்த சம்பவம் நடந்தேறியுள்ளது. 328 நாட்களுக்கு முன்பு தனது செல்ல நாயை விட்டுப் பிரிந்த அவர் மீண்டும் அதை நேரில் சந்தித்துள்ளார். அப்பொழுது நடந்த நிகழ்வின் வீடியோ தான் இப்போ வைரல்.

டிவிட்டர் பக்கத்தில் வீடியோ
அவரின் செல்லப்பிராணி அவரை கண்டதும் மிகுந்த உற்சாகத்துடன் கத்தி, வால் ஆட்டி அவரை கொஞ்சி வரவேற்றுள்ளது. அதிர்ஷ்டவசமாக, இந்த தருணம் கிறிஸ்டினா கோச் வீட்டிலிருந்த சர்வைலென்ஸ் கேமராவில் படம்பிடிக்கப்பட்டுள்ளது. அதை எல்லோரிடமும் பகிர்ந்து கொள்ள கோச் தனது டிவிட்டர் பக்கத்தில் அந்த வீடியோவை பதிவிட்டுள்ளார்.

செல்லப்பிராணியுடன் கொஞ்சல்
இன்று நீங்கள் பார்ப்பது எனக்கு மனம் நெகிழ்ந்த மிகவும் அபிமானமான விஷயம் என்று தனது டிவிட்டர் பக்கத்தில் கோச், தனது செல்லப்பிராணி அவரை கொஞ்சும் வீடியோவை பதிவிட்டுள்ளார். வீடியோவில், கிறிஸ்டினா மற்றும் அவரது கணவர் வீட்டை நோக்கி வருவதை வீட்டின் உள் இருக்கும் நாய் கண்டு மிகவும் உற்சாகமடைவதை நம்மால் பார்க்க முடிகிறது.

முத்த மழை கொடுத்த நாய்
அவரின் செல்லப்பிராணி உற்சாகத்தின் அவசரத்தில் கதவைத் தட்டுகிறது. கிறிஸ்டினா இறுதியாக வீட்டின் உள் நுழைந்தவுடன், எண்ணற்ற மகிழ்ச்சியில் துள்ளி குதிப்பதை நிறுத்த முடியாமல் அங்கும் இங்கும் ஓடி ஆட்டம் போடுகிறது, மேலும் அவருக்கு முத்த மழை பொலிந்து அவரை வரவேர்த்துள்ளது.
நாசாவின் பதில் ரிப்ளை
எனது வருகைக்கு "யார் அதிக உற்சாகத்திலிருந்தார்கள் என்று உறுதியாகத் தெரியவில்லை. ஆனால் ஒரு வருடம் கழித்து என்னை என் செல்லப்பிராணி நினைவில் வைத்திருப்பதில் எனக்கு மகிழ்ச்சி!" என்று ட்வீட் செய்துள்ளார். இந்த ட்வீட்டிற்கு நாசாவும் பதில் அளித்துள்ளது. தற்பொழுது இந்த வைரல் பதிவைப் பலரும் பகிர்ந்து வருகின்றனர்.


Click it and Unblock the Notifications