கொடூரமான முறையில் யானையைத் தாக்கிய கொடூரர்கள் : நெஞ்சை பதபதைக்கும் வைரல் வீடியோ.!
கர்ணன் என்ற திரிசூர் யானையை அதன் உரிமையாளர் மற்றும் அதன் பாகனும் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். யானையை கண்முடிதனமாக தாக்கிய வீடியோ ஆதாரம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.
கர்ணன் என்ற திரிசூர் யானையை அதன் உரிமையாளர் மற்றும் அதன் பாகனும் கண்மூடித்தனமாகத் தாக்கியுள்ளனர். யானையை கண்முடிதனமாக தாக்கிய வீடியோ ஆதாரம் சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகிவருகிறது.

திருச்சூரைச் சேர்ந்த கோவில் யானையான கர்ணனை கொடூரமான முறையில் அடித்துத் துன்புறுத்தியுள்ளனர். இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் மிக வேகமாக வைரல் ஆகியது. இதனைப் பார்த்த சமூக ஆர்வலர்கள் கர்ணன் இருக்கும் இடத்தை தேடிப்பிடித்து யானை மீட்டுள்ளனர்.
மீட்கப்பட்ட யானை தற்பொழுது பாதுகாப்பாகப் பாலக்காடு பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து மருத்துவ பரிசோதனை மற்றும் பல சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. யானையின் உரிமையாளர் மற்றும் பாகன் மீது வழக்கும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
சமூக வலைத்தளத்தில் அதிகம் பகிரப்பட்டதனால், உரிய நேரத்தில் ஏசியன் யானைகள் சங்கத்தின் மூலம் காப்பாற்றப்பட்டுள்ளது.

மளிகை சாமான் கணக்கெழுத உங்களுக்கு பாஸ்போர்ட் தான் கிடைச்சுதாம்மா?
ஒரு தனி நபரின் முக்கிய அடையாள ஆவணமாக உலகம் முழுதும் ஏற்றுக்கொள்ளப்படுவது பாஸ்போர்ட் தான். அப்படிப்பட்ட முக்கியமான அடையாள ஆவணத்தைக் கேரளாவைச் சேர்ந்து ஒரு குடும்ப பெண் வேறு விதமாகப் பயன்படுத்தியுள்ளார். அவர் பாஸ்போர்ட்டை பயன்படுத்தி உள்ள விதம், தற்பொழுது வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது

சில பழக்கங்களை யாராலும் மாற்றம் செய்ய முடியாது
இந்தியர்களுக்கே உரிய சில பழக்கங்களை யாராலும் மாற்றம் செய்ய முடியாது என்பதே உண்மை. உதாரணத்திற்கு பாலிதீன் பைகளை மக்காத குப்பையுடன் தூரப் போடாமல், அவற்றைச் சேமித்து வைப்பதற்கென்று ஒரு பெரிய பாலிதீன் பைகளை நம் வீட்டில் தயார் செய்து வைத்திருப்பார்கள்.

மொபைல் எண்களை சீட்டில் எழுதும் பழக்கம்
அதேபோல் கிபிட் ரேப்பர்களை கிழியாமல் பிரித்தெடுத்து வேறொரு கிப்ட்டிற்கு அலங்காரப்படுத்தி கொடுத்துவிடும் பழக்கமும் இந்தியாவில் உள்ளது. அதேபோல் முக்கியமாய் இன்னும் சிலர் மொபைல் எண்களை இன்று வரை துண்டு சீட்டில் எழுதிப் பாதுகாத்து வருவதும் உண்டு.

போன்புக்காக மாறிய பாஸ்போர்ட் புக்
கேரளாவைச் சேர்ந்த தாயார், அவர் கணவரின் பழைய பாஸ்போர்ட் புக்கில் தன் உறவினர் மற்றும் நண்பர்களின் மொபைல் எண்களை எழுதியுள்ளார். அதுமட்டுமின்றி கூடுதல் சுவாரசியமாக மாத மளிகை சாமான் கணக்குகளையும் பாஸ்ப்போர்ட்டின் பின்பக்கம் எழுதி, கணக்கிட்டும் வைத்துள்ளார்.
வைரல் ஆகிவரும் வீடியோ
தனது தாயார் செய்த வேடிக்கையான இந்த செயலை அவரின் மகன் வீடியோ பதிவு செய்து வாட்ஸ் ஆப்பில் தனது நண்பர்களுக்கு அனுப்பியுள்ளார். தற்பொழுது அந்த வீடியோ வாட்ஸ் ஆப், பேஸ்புக், டிவிட்டர் போன்ற சமூக வலைத்தளங்களில் வைரல் ஆகி வருகிறது.

பாஸ்ப்போர்ட்டில் எழுதுவதோ கிறுக்குவதோ குற்றம்
பாஸ்ப்போர்ட்டில் உரிய அதிகாரிகள் மட்டுமே எழுதுவதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சாமானியர்கள் பாஸ்ப்போர்ட்டில் எழுதுவதோ கிறுக்குவதோ குற்றம் என்பது குறிப்பிடத்தக்கது. பழைய பாஸ்ப்போர்ட்டாக இருந்தாலும் இதுபோன்ற செயல்களில் மக்கள் தெரியாமல் கூட ஈடுபடவேண்டாம் என்று கேட்டுக்கொள்கிறோம்.


Click it and Unblock the Notifications