வைரல் வீடியோ: 'சிவப்பு ரோஜாவில் ப்ளூ பிட் வைப்பர்' பாம்பின் அற்புத காட்சி!

|

டிவிட்டர் பல விசித்திரமான விலங்கு வீடியோக்களால் நிரம்பியுள்ளது. இந்த வீடியோக்களில் சில மீண்டும் மீண்டும் பாப் அப் செய்யப்பட்டு தலைப்புச் செய்திகளை உருவாக்குகின்றன. அப்படி இந்த முறை 'ரெட் ரோஸ் வித் ப்ளூ பிட் வைப்பர்' என்ற வீடியோ தற்பொழுது வைரல் ஆகியுள்ளது.

சிவப்பு ரோஜாவில் கொடிய விஷம் அழகானது

சிவப்பு ரோஜாவில் கொடிய விஷம் அழகானது

பெரிய சிவப்பு ரோஜாவில் கொடிய விஷம் கொண்ட ப்ளூ நிற வைப்பார் பாம்பு ரோஜா பூவை பின்னிக்கிடப்பது போன்ற வீடியோ வைரலாகி இணையத்தை வியப்பில் ஆழ்த்தியுள்ளது. பார்த்ததும் ஏதோ கையால் செதுக்கப்பட்ட சிற்பம் போல அவ்வளவு அழகாக கட்சி அளிக்கிறது அந்த பாம்பின் தோற்றம். நிச்சயம் இந்த வீடியோவை பார்த்தால் உங்களுக்கே அதன் அற்புதம் புரியும்.

நம்பமுடியாத அழகான ப்ளூ பிட் வைப்பர்

நம்பமுடியாத அழகான ப்ளூ பிட் வைப்பர்

இந்த அற்புதமான வீடியோ கிளிப்பை டிவிட்டர் பக்கத்தில் லைஃப் ஆன் எர்த் பகிர்ந்துள்ளது. "நம்பமுடியாத அழகான ப்ளூ பிட் வைப்பர்" என்ற தலைப்பில் அவர்கள் இந்த வியக்கத்தக்க அதிர்ச்சியூட்டும் கிளிப்பை ட்வீட் செய்துள்ளனர். வெறும் 12 விநாடிகள் கொண்ட இந்த வீடியோவில் ஒரு பெரிய நீல நிற பிட் வைப்பர் பாம்பு, ஒரு பெரிய ஆழகான சிவப்பு ரோஜாவில் சுருண்டு கிடக்கிறது.

போனில் இருந்த 400 ஆபாச படங்கள்.. மனைவி கொடுத்த புகார்! கைது செய்யப்பட்ட வங்கி காசாளர்!

இயற்கையின் அற்புதக் காட்சி

வீடியோவில், ஒரு நபர் ரோஜாவின் தண்டுடன் தனியாக எடுத்து அவர் கையில் பிடித்து பல்வேறு கோணங்களில் இருந்து பாம்பைப் படம் பிடித்திருக்கிறார். சிவப்பான ரோஜாவில் ப்ளூ நிறத்தில் இருக்கும் பாம்பு உண்மையில் இயற்கையின் அற்புதத்தை நமக்கு தெளிவாக காண்பிக்கிறது.

ப்ளூ பிட் வைப்பர்

ப்ளூ பிட் வைப்பர்

ப்ளூ பிட் வைப்பர் பாம்பு மிகவும் ஆக்ரோஷமான வேட்டையாடும் மற்றும் ஒரு விஷ பாம்பு என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால், வீடியோவை பார்க்கும் பொழுது நமக்கு அச்சம் என்பது எதுவுமே வரவில்லை. அடடா என்ன ஒரு அழகான காட்சி இது என்று தான் பிரமிக்கவைக்கிறது. இந்த வீடியோவை இதுவரை 120.6k க்கும் மேற்பட்டவர்கள் பார்த்து 94.4k பயனர்கள் லைக் செய்துள்ளனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Video of a blue pit viper curled over red rose goes viral : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X