டுவிட்டரை தெறிக்கவிடும் தளபதி ரசிகர்கள்: சைலண்டாக தல ரசிகர்கள் பார்த்த வேலை!

|

நடிகர் விஜய் இன்று தனது 48-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் சமூகவலைதளங்களில் ஸ்டேட்டஸ்கள் வைத்தும் வாழ்த்துகளை பதிவிட்டும் தங்களது அன்பை வெளிப்படுத்தி வருகின்றனர். அதன்படி விஜய் ரசிகர்கள் டுவிட்டரை தெறிக்கவிட்டு வருகின்றனர்.

டுவிட்டரின் மூலம் வாழ்த்து

டுவிட்டரின் மூலம் வாழ்த்து

பிரபலங்களின் பிறந்தநாளின் போது அவருக்கான வாழ்த்து குறித்த ஹேஷ்டேக் டுவிட்டரில் டிரெண்டாவது வழக்கம். அதன்படி தற்போது நடிகர் விஜய் நடித்த 66-வது பட டைட்டில் மற்றும் அவருக்கான வாழ்த்து குறித்த ஹேஷ்டேக் பெருமளவு டிரெண்டாகி வருகிறது. திரையுலக பிரபலங்கள் முதல் உலகம் முழுவதும் உள்ள விஜய் ரசிகர்கள் வரை அனைவரும் அவருக்கு டுவிட்டரின் மூலம் வாழ்த்து தெரிவித்து ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

டுவிட்டரை ஆக்கிரமித்து வரும் ஹேஷ்டேக்

ரசிகர்களால் தளபதி என்று செல்லமாக அழைக்கப்படும் நடிகர் விஜய்யின் பிறந்தநாள் இன்று அவரது ரசிகர்களால் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. விஜய்யின் பிறந்தநாளை முன்னிட்டு நேற்று அவரின் 66-வது படத்தின் டைட்டில் மற்றும் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை படக்குழு வெளியிட்டது. தெலுங்கு பட இயக்குனர் வம்சி படிபல்லி இயக்கத்தில் நடிகர் விஜய் தனது 66வது படத்தில் நடித்து வருகிறது. இந்த படத்துக்கு வாரிசு என பெயரிடப்பட்டுள்ளது. தற்போது டுவிட்டரை ஆக்கிரமித்த ஹேஷ்டேக்கும் இந்த டைட்டில் தான்.

திரையுலக பிரபலங்கள் வாழ்த்து

டுவிட்டரில் #வாரிசு, #varisu என்ற வார்த்தை டாப் லெவல் டிரெண்டிங்கில் இருக்கிறது. தொடர்ந்து #HBDDearThalapthyVijay
Happy Birthday Anna #HappyBirthdayVijay
#HBDVijay
#thebossreturns போன்ற வார்த்தைகளும் டுவிட்டரை ஆக்கிரமித்து வருகிறது. டுவிட்டரில் நடிகர் விஜய்க்கு திரையுலக பிரபலங்களும் தங்களது வாழ்த்துகளை இந்த ஹேஷ்டேக் கீழ் பதிவிட்டு வருகின்றனர். மறுபுறம் அஜித் ரசிகர்கள் டுவிட்டரில் #என்றும்_தலஅஜித் என்ற ஹேஷ்டேக்கை டிரெண்டாக்கி வருகின்றனர்.

ஹேஷ்டேக் எப்படி டிரெண்டாகிறது?

ஹேஷ்டேக் எப்படி டிரெண்டாகிறது?

டுவிட்டரில் ஹேஷ்டேக் என்பது கூகுளின் டூடுள் போல் நிறுவனங்களால் உருவாக்கப்படுவதலில்லை. பயனர்களின் மூலமாக தான் டுவிட்டரில் ஹேஷ்டேக் பிரபலமாக்கப்படும். குறிப்பிட்ட மணிநேரங்களில் 500-க்கும் அதிகமான டுவிட்கள் ஒரே ஹேஷ்டேக்களின் கீழ் வரும்பட்சத்தில் டுவிட்டர் அதில் கவனம் செலுத்த தொடங்கும். இந்த எண்ணிக்கையானது டுவிட்களை மட்டும் குறிப்பது இல்லை எத்தனை தனி கணக்குகளின் கீழ் இந்த டுவிட்கள் வருகிறது என்பதையும் டுவிட்டர் கருத்தில் கொள்ளும்.

டிரெண்டாகும் தளபதி66 டைட்டில்

டிரெண்டாகும் தளபதி66 டைட்டில்

டிரெண்டிங்காகும் ஹேஷ்டேக்குகளின் கீழ் எத்தனை டுவிட்கள் பதிவிடப்பட்டுள்ளது என்பதையும் டுவிட்டர் நிறுவனம் காண்பிக்கும். அதன்படி #Varisu என்ற ஹேஷ்டேக்களின் கீழ் 1.07 மில்லியன் டுவிட்கள் பதிவிடப்பட்டுள்ளது. #வாரிசு என்ற ஹேஷ்டேக்கள் கீழ் 11.3k டுவிட்கள் பதிவிடப்பட்டிருக்கிறது. தொடர்ந்து தளபதி66 திரைப்படத்தின் தெலுங்கு டைட்டிலான #Vaarasudu என்ற ஹேஷ்டேக்குள் கீழ் 90.3k டுவிட்கள் பெறப்பட்டிருக்கிறது.

விமர்சனங்களை புறந்தள்ளி அடைந்த வளர்ச்சி

விமர்சனங்களை புறந்தள்ளி அடைந்த வளர்ச்சி

இளைய தளபதியாக ஆரம்பத்த திரையுலக பயணித்தில் நடிகர் விஜய் சந்தித்த விமர்சனங்கள் ஏராளம். தனது தந்தையின் மூலமாக திரையுலகில் Entry Pass எளிதாக கிடைத்தாலும் அவரின் வெற்றி என்பது அத்தனை எளிதாக அவருக்கு கிடைக்கவில்லை. "இதெல்லாம் ஒரு முகமா" என்று முதல் படத்தில் விமர்சனம் பெற்ற நடிகர் விஜய் அப்போது சற்று கண் கலங்கினாலும் தனது விடாமுயற்சியை விதையாக விதைத்தார். விமர்சனங்களை புறந்தள்ளி அன்று அவர் விதைத்த விதை தற்போது ஆலமரமாக வளர்ந்து இருக்கிறது என்றால் அது மிகையல்ல. சமூகவலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்.

பிறந்தநாள் வாழ்த்து குறித்த ஹேஷ்டேக்

நடிகர் விஜய்க்கான பிறந்தநாள் வாழத்து குறித்த ஹேஷ்டேக்களை பார்க்கையில், #HBDThalapathyVijay என்ற ஹேஷ்டேக் கீழ் 245k டுவிட்கள் பதிவிடப்பட்டுள்ளன. தொடர்ந்து #HBDDearThalapthyVijay, Happy Birthday Anna, Happy Birthday Thalaivaa போன்ற வார்த்தைகளும் பல்வேறு டுவிட்களுடன் டிரெண்டாகி வருகிறது.

அஜித் ரசிகர்கள் டுவிட்

அஜித் ரசிகர்கள் டுவிட்

இதெல்லாம் ஒருபுறம் இருக்க நடிகர் அஜித் ரசிகர்கள் #SpontaneousThalaAJITH, #என்றும்_தலஅஜித் போன்ற ஹேஷ்டேக்களை டிரெண்டாக்கி வருகின்றனர். #SpontaneousThalaAJITH என்ற ஹேஷ்டேக்கின் கீழ் 12K டுவீட்கள் பெறப்பட்டுள்ளன.

வழக்கமான நிகழ்வுகள்

வழக்கமான நிகழ்வுகள்

மாஸ்டர் பட இசை வெளியீட்டு விழாவில் நடிகர் விஜய் கோர்ட்ஷூட் அணிந்து வந்தார். இதை பலரும் ஆச்சரியமாக பார்த்தனர். அப்போது மேடையில் பேசிய விஜய், ஒவ்வொரு விழாவிலும் சுமாராக உடையணிந்து செல்கிறீர்கள் என காஸ்ட்டியூமர் இந்த கோர்ட் கொடுத்தாங்க. சரி, நம்மளும் நண்பர் அஜித் மாதிரி கோர்ட் போட்டு போவோம் என வந்தேன். நன்றாக இருக்கிறதா? என குறிப்பிட்டார். பல இடத்தில் தாங்கள் நண்பர்கள் என நடிகர்கள் குறிப்பிட்டாலும், ரசிகர்கள் ஒருவரின் பிறந்தநாளின் போது மற்றொருவரை டிரெண்டாக்குவதை வழக்கமாக வைத்து தங்கள் விஸ்வாசத்தை காட்டி வருகின்றனர்.

Image Source: Social Media

Best Mobiles in India

English summary
Varisu: Happy Birthday Vijay Hashtag Is Trending On Twitter

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X