Home
Social media

இந்தியாவிலேயே வால்பாறையில் தான் அதிக மழைபதிவு எவ்வளவு தெரியுமா? அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள்.!

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சில அணகைள் நிரம்பி ஆறுகளில் திறந்து விடுவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

By Rajivganth Gurusamy

இந்தியாவிலேயே அதிக மழை பதிவான இடம் தமிழகத்தில் தான். அதுவும் எங்கு என்று தெரியுமா? கோவை மாவட்டம் மேற்தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள வால்பாறையில் தான்.

இந்தியாவிலேயே வால்பாறையில் தான் அதிக மழைபதிவு -வீடியோ

இந்த அளவுக்கு மழை பதிவுவாகி உள்ளது. மேலும் மழை பெய்த வீடியோக்கள் வெளியாகி அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

தென்மேற்கு பருவமழை:

தென்மேற்கு பருவமழை கேரள மற்றும் கர்நாடக மாநிலங்களில் வெளுத்து வாங்கி வருகிறது. இந்நிலையில், கர்நாடகா மாநிலத்தின் வடக்கு பகுதியை தவிர்த்து மற்ற இடங்களில் கன மழை பெய்து வருகிறது.

கேரளாவில் கடந்த 8ம் தேதி முதல் அதிக மழை பெய்து வருகிறது. இதனால் கேரள மாநிலே தற்போது வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. இதுவரை 167 பேர் பலியாகி இருப்பதாக கேரள முதல்வர் பிரானாயி விஜயன் வெள்ளிக்கிழமை தெரிவித்தார். 2.5 லட்சம் மக்கள் நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளது.

இந்தியாவில் அதிகமான மழை பதிவு:

இந்தியாவில் அதிகமான மழை பதிவு:

தமிழகத்தின் மேற்கு தொடர்ச்சி மலையையொட்டி உள்ள மாவட்டங்களிலும் கனமழை பெய்து வருகிறது. சில அணகைள் நிரம்பி ஆறுகளில் திறந்து விடுவதால், வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
தமிழகத்தில் கோவை மாவடத்தில் உள்ள வால்பாறையில் நேற்று (வியாழக்கிழமை) தான் அதிக மழை பெய்துள்ளது. இங்கு தான் இந்தியாவிலேயே 289 மி.மீ மழை பதிவாகியுள்ளது. இதற்கு முந்தைய நாளான புதன் கிழமை 190 கி.மீ மழை பதிவாகி இருந்தது.

அதிக மழை பெய்தது:

தற்போது இந்தியாவில் வேறு எங்கும் இல்லாத அளவுக்கு வால்பாறையில் மட்டும் மழை பெய்து வருகிறது. மழை பெய்தால், வால்பாறையில் தாழ்வான பகுதிகளில் வீடுகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. அங்கு இருந்த மக்களும் மீட்கப்பட்டு பாதுகாப்பன இடங்களில் தங்க வைப்பட்டுள்ளனர். மேலும், காட்டாருகளில் வெள்ள பெருக்கு ஏற்பட்டதால், கூலாங்கல்லாறு உள்ளிட்ட ஆறுகளில் கடும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.

மண் சரிவு:

மண் சரிவு:

தொடர்ச்சியாக மழை பெய்து வருவதால், தேயிலை தோட்டங்கள் மற்றும் தண்ணீரில் மூழ்கி அழியும் நிலையில் உள்ளன. கடும் மழையால் பல்வேறு இடங்களில் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் வால்பாறை அருகே உள்ள அட்டக்கத்தி பகுதியில் வேளாங்கண்ணி (41) என்ற பெண் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டார். மேலும் 2 இரண்டு பேர் இறந்துள்ளதாக கூறப்படுகிறது.

அதிர்ச்சியூட்டும் வீடியோ:

தற்போது வால்பாறையில் பெய்து வரும் மழையும் வெள்ள பெருக்கும் அதிர்ச்சியூட்டும் வீடியோக்கள் வைரலாக பகிரப்படுகின்றது. அதில் வால்பாறை-அதிரப்பள்ளி சாலையும், வால்பாறை-பொள்ளாச்சி சாலையும், ஆழியார் அணையின் தண்ணீர் திறந்து விடப்பட்டு அதில் ஓடும் காட்சிகள் காண்போரை பதற வைக்கின்றது.

போக்குவரத்து பாதிப்பு:

போக்குவரத்து பாதிப்பு:

தற்போது பெய்து வரும் கன மழையால் பொள்ளாச்சி-வால்பாறை ரோட்டில் பல்வேறு இடங்களிலும் மண் சரிவும் ஏற்பட்டுள்ளது. இதனால் ஒரு சில இடங்களில் வாகங்களின் மீதும் மண் சரிந்து விழுந்தால், வாகனங்கள் சேதமடைந்தன. சாலையின் இருபுறங்களிலும் வெள்ள நீர் ஓடுவதால் வாகன ஓட்டிகள் அச்சமடைந்துள்ளனர். மரங்களும் சாலையில் விழுந்துள்ளதால், போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. சாலையில் விழுந்துள்ள மரங்களும் அப்புறப்படுத்தப்படும் பணிகளும் நடந்து வருகின்றது. கடந்த ஜூன் மாதமே முழுகொள்ளவை எட்டிய சோலையார் அணை தற்போது திறக்கப்படதால், பரம்பிக்குளம் அணைக்கு அதிகபடியான தண்ணீர் செல்கின்றது.

தொடர்ச்சியாக ஆழியார் அணைக்கும் அதிகபடியாக தண்ணீர் வந்து கொண்டிருப்பதால், பாதுகாப்பு கருதி தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. இந்நிலையில் மழை பெய்த போது எடுக்கப்பட்ட வீடியோக்கள் வாட்ஸ் ஆப், பேஸ்புக் போன்ற சமூக வலைதளங்களில் அதிகமாக பகிரப்படுகின்றது.

Best Mobiles in India

English summary
Valparai records highest rainfall in India on Thursday 1 person washed away in floods : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X