வி டூ ஹேஷ்டேக்கில் மனக் குமுறலை கொட்ட வருகிறார் வைர(ல்)முத்து ?

|

பாலியல் குற்றச்சாட்டால் தற்போது திரை உலகமே தள்ளாடி வருகின்றது. இதில் ஏராளமானோரும் சிக்கி வருகின்றனர். டுவிட்டரில் ஆரம்பிக்கப்பட்ட மீ டூ ஹேஷ்டேக்கில் உலகம் முழுவதும் ஏராளமான பெண்கள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் சீண்டல் அனுபவங்களை இதில் பதிவிட்டு வருகின்றனர்.

இந்தியாவிலும் மீ டூ ஹேஷ்டேக் பெரும் விஸ்பரூபம் எடுத்து இருந்தாலும், சினிமா திரை எனப்படும் ஆடை உடுத்தி இருந்தாலும், அந்த திரை மறைவில் இத்தனை ஆபாசங்களும் பாலியல் சீண்டல்களும் அரங்கேறி இருக்கின்றது என்பது தான் நிதர்சனம்.

வி டூ ஹேஷ்டேக்கில் மனக் குமுறலை கொட்ட வருகிறார் வைர(ல்)முத்து ?

இதை வெளிச்சம் போட்டு காட்ட வந்து இருப்பது #metoo என்னும் ஹேஷ்டேக் தான். ஒரே நாள் இரவில் ஓபமா ஆகலாம் என்று கூறப்படும் வாய்மொழி உண்மையாகி இருக்கின்றது. தற்போது சின்மயி கூறிய பாலியல் குற்றச்சாட்டால், சமூக வதைதளங்களிலும் சின்மயி, வைரமுத்து குறித்த விஷயம் தான் பரபரப்பாக பேசப்படுகின்றது.

இதில் ஓரே நாள் இரவில் ஓபாமா ஆன வைரமுத்து வைரல் முத்து எனவும் ஆகி இருக்கின்றார். இதற்கு எல்லாம் காரணம் நீலப்பறவை என்படும் டுவிட்டர் தான்.

 கவி உலகில் ஜாம்பவான்:

கவி உலகில் ஜாம்பவான்:

தற்போது திரை உலகிலும், கவி உலகிலும் ஜாம்பவானக திகழும் வைமுத்து, சென்னை பச்சையப்பன் கல்லூரியில் தமிழ் இலக்கியம் பயின்றார். பிறகு, 1980ம் ஆண்டு நிழல்கள் எனும் திரைப்படத்தில் "பொன்மாலைப் பொழுது" எனும் பாடலை முதன்முதலில் எழுதினார். 5800க்கும் மேற்பட்ட பாடல்களையும் இவர் எழுதியுள்ளார். 6 முறை பாடல் குடியரசு தலைவரிடம் இவர் பத்மஸ்ரீ விருதை பெற்றுள்ளார். மேலும், கருவாச்சி காவியம், மூன்றாம் உலகப்போர் உள்ளிட்ட பல்வேறு புத்தகங்களையும் இவர் எழுதியுள்ளார்.

பாடகி சின்மயி:

பாடகி சின்மயி:

பாடகி சின்மயி தமிழ் திரை உலகில் புகழ் பெற்ற பின்னணி பாடகியாக இருக்கின்றார். இவர் ஏஆர் ரகுமான் இசையமைப்பில் கன்னத்தில் முத்தமிட்டால் படத்தில் ஒரு தெய்வம் தந்த பூவே என்ற பாடலை முதல் திரைப்பாடலை பாடினார். தற்போது வரை ஏராளமான பாடல்களையும் பாடியுள்ளார். மேலும், ஆர்ஜேவாகவும், தனியார் டிவிகளில் நிகழ்ச்சி தொகுப்பாளராகவும் இருந்துள்ளார். இவரை பாடகியாக வைரமுத்துவே ஏர்ஆர் ரகுமானிடம் அறிமுகம் செய்து வைத்ததாகவும் கூறப்படுகின்றது.

 #metooஹேஷ்டேக்:

#metooஹேஷ்டேக்:

தற்போது உலகம் முழுக்கவும் உள்ள பெண்கள் தங்களுக்கு நேர்ந்த கொடுமைகளை டுவிட்டரில் #metoo ஹேஷ்டேக்கில் தான் தெரிவித்து வருகின்றனர். இதுவெளிநாடுகளில் உருவாக்கப்பட்டதாகவும் இருந்தாலும், முன்பு காலத்தில் நடந்த மனத்திற்கு கஷ்டமான விசியங்களும், அந்த சூழ்நிலையில் சொல்ல முடியாத பாலியல் சீண்டல் விசியங்களையும் சொல்லும் விதமாகவும் இந்த #metoo வில் சொல்லி வருகின்றனர். இதனால் ஏராளமான ஆண்களும் தற்போது மானம் போவதால், இதனால் எரிச்சல் அடைந்துள்ளனர்.

சின்மயி விவகாரம்:

சின்மயி விவகாரம்:

வைரமுத்துவுடன் எழுதிய பல்வேறு பாடல்களையும் சின்மயி பாடியுள்ளார். மேலும் பல்வேறு நிகழ்ச்சிகளிலும் அவர் வைரமுத்து எழுதிய பாடல்களை சின்மயி பாடியுள்ளார். மேலும் சின்மயி திருமண விழாவில் வைரமுத்து- பொன்மணி ஆகியோரிடமும் காலில் விழுந்து ஆசீர்வாதம் பெற்றார் சின்மயி. இந்நிலையில், மீ டூ என்ற ஹேஷ்டேக்கில் தன்னை பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்தார் என்று டுவிட்டரில் புகாரை முன் வைத்தார். இந்த விஷயம் திரை உலகில் மட்டும் அல்லாமல் அரசியலிலும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பாலியல் குற்றச்சாட்டு :

பாலியல் குற்றச்சாட்டு :

கடந்த 2005 அல்லது 2006ம் ஆண்டு சுவிட்சர்லாந்து கச்சேரிக்கா சென்றிந்தோம். அப்போது தன்னை கட்டிப்பிடித்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் தெரிவித்து இருந்தார். மேலும் ரைவமுத்துவால் பல பெண்கள் பாலியல் துன்புறுத்தல்களுக்கும் ஆளாக்கப்பட்டுள்ளதாகவும் குற்றச்சாம் சாட்டினர். மேலும் பெரியமனுசனாக சமுதாயத்தில் இருக்கும் இவர் பெண்களிடம் செல்போன்னை பெற்று அதன் மூலம் பாலியல் துன்புறுத்தல் செய்துவதாகவும் கடுமையான குற்றச்சாட்டுகளை அடுக்கி வைத்தார் பாடகில் சின்மியி.

வைரமுத்து மறுப்பு:

வைரமுத்து மறுப்பு:

சுவிட்சர்லாந்து சென்று இருந்த போதும் இதுபோன்ற எந்த தவறும் நடக்கவே இல்லை என்று நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் மறுப்பு தெரிவித்து இருந்தார். மேலும் கவிஞர் வைரமுத்துவும் அறியப்பட்டர்களின் மீது அவதூறு பரப்பும் வழக்கம் உலகம் முழுக்கவும் இருந்து வருகின்றது என்று தெரிவித்து மறுப்பும் தெரிவித்து இருந்தார். இந்நிலையில் வைரமுத்து பாலியல் சீண்டல்களில் நடந்தது உண்மை தான் என்று பேஸ்புகில் லைவில் வந்து தெரிவித்தார். இந்த விஷயம் விஸ்பரூபம் எடுத்து நிற்க இந்தியா முழுவதும் இல்லாமல் உலக முழுக்கவும் பெரும் பரபரப்பாகவும் பேசப்பட்டது.

சட்ட ஆலோசனைகளுடன் வைரமுத்து:

சட்ட ஆலோசனைகளுடன் வைரமுத்து:

கடந்த ஒரு வார காலமாக அறிவில் சிறந்த சான்றோர்களுடனும், சட்ட நிபுணர்களுடன் கலந்து பேசியுள்ளேன். நீதிக்கு தலை வணங்குகின்றேன் என்று பேசியிருந்தார். அசைக்க முடியாத ஆதாரங்களையும் திரட்டி வைத்துள்ளேன் என்றும் அவர் கூறியிந்தார். இதுவும் நித்தியானந்தா போல சட்டரீதியாக எந்த தவறும் செய்யவில்லை என்று வைரமுத்துவை கிண்டல் செய்யும் விதமாக சமூக ஊடகங்களில் மீம்ஸ் போட்டு வெளியிட்டு இருந்தார். மேலும், கவிதை பாணியில் நிந்திக்க அவகாசம் கொடுத்து ஒரு வாரம் கழித்து சிந்திக்க வேண்டிய அவசியம் என்ன? சந்தக்கவிஞர்மீது சந்தேகமே அதிகரிக்கிறது என்று தமிழக பா.ஜ.க. தலைவா் தமிழிசை சௌந்தரராஜன் கருத்து தொிவித்து இருந்தார்.

இதற்கு சீமான் வைரமுத்துக்கு ஆரவாக பேசியிருந்தார். இதற்கு இந்த பின்னணியில் பாஜக வெல்லாம் ஒன்றும் இல்லை என்று சீமானுக்கு நடிகர் சித்தார்த்தும் பதிலடி கொடுத்து இருந்தார். மேலும் சரத்குமார் சின்மயின் தைரியத்தை பாராட்டி இருந்தார்.

வைரமுத்து வைரல் முத்து:

வைரமுத்து வைரல் முத்து:

மீடியாக்கள், டுவிட்டர், பேஸ்புக், இன்ஸ்டா கிராம் உள்ளிட்ட சமூக வலை ஊடங்களிலும் வைரமுத்து மீது சுமத்தப்பட்ட குற்றச்சாட்டு காட்டுத் தீ போல பரவியது. மேலும் இந்த விசியத்தில் வைரமுத்து வைரல் முத்துவாக உருமாறியுள்ளார். இதில் இளம் பெண்ணாக இருக்கும் போது, வைரமுத்து தன்னை பாலியல் தொல்லை கொடுத்தாகவும் இதை சந்தியா மேனன் என்றவர் டுவிட்டரில் ரீடுவிட் செய்து இருந்தார். மேலும், ஐஸ்வர்யா என்ற பெண்ணும் தனது தோழிக்கு போன் போட்டு செக்ஸ் கவிதை கூறியுள்ளார். அதில், உன் இடுப்போ உடுக்கை, மார்போ படுக்கை என்று எல்லாம் ஆபசாமாக வர்ணித்துள்ளார் தெரிவித்து அதிர்ச்சியை ஏற்படுத்தியுளார்.

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் வைரமுத்து:

தொடர்ந்து புறக்கணிக்கப்படும் வைரமுத்து:

இந்நிலையில் ஆண்டாள் விவகாரத்தில் சர்ச்சைக்குரிய கருத்தும், இந்து மதத்தை இழிபடுத்துவதாலையுமே வைரமுத்து ஒரு சிலரால் தொடர்ச்சியாக தாக்கப்படுவதாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. தற்போது, திரை உலகில் சிலர் மீதும் பாலியல் குற்றச்சாட்டு வைக்கப்படுகின்றது. அப்போது நிலைமையில் இதை எல்லாம் வெளியே சொல்ல முடியாது. அப்போது இதற்கான சூழ்நிலை அமையவில்லை. சொன்னால் எதிர்காலத்திற்கு ஆபத்து என்று எல்லாம் சொல்ல முடியாமல் போனது என்றும் ஒரு சில பெண்கள் தெரிவித்து இருந்தனர்.

மீடூவுக்கு போட்டியாக வி டூ மென்:

மீடூவுக்கு போட்டியாக வி டூ மென்:

நடிகர் ராதாரவி உள்ளிட்ட சில நடிகர்கள் மீதும் மீடூவில் பாலியல் குற்றச்சாட்டு எழுந்தது. இதை வைத்து ஒரு சில பெண்கள் விளம்பரம் தேடிக்கொள்ளவும், சுய லாபத்திற்காகவும், பணம் கறக்கும் வேலையில் ஈடுபடுகின்றனர் என்று குற்றச்சாட்டும் எழுந்துள்ளது. ஒரு சிலர் மீதும் திட்டமிட்டும் தனி புகழ் அடைய வேண்டும் என்றும் பாலியல் குற்றச்சாட்டுகள் எழுந்து வருகின்றது. இதனால் மீடூவுக்கு போட்டியாக இதில் பாதிக்கப்படும் ஆண்மகன்கள் வி டூ மென் மனக்குறுறல்களை கொட்டி வருகின்றனர்.

விடூ மென்னில்  வைரமுத்து மனக்குறல்கள்:

விடூ மென்னில் வைரமுத்து மனக்குறல்கள்:

வி டூ ஹேஷ்டேக்கில் தனக்கு ஏற்பட்ட நிலை குறித்தும், இதில் பாலியல் குற்றச்சாட்டில் தனக்கு ஏற்பட்ட அவமானம், இழப்பு குறித்தும், உண்மையான நிகழ்வுகளையும் இதில் முழுமனதுடன் இதில் பகிர்ந்து கொள்வார் என்றும் நெட்டிசன்கள் கூறிவருகின்றனர். இது பொய்யான குற்றச்சாட்டு தான, இதில் எந்த அளவுக்கு உண்மை இருக்கின்றது. அப்படி ஒன்று நடந்தா என்றும் வி டூ மென் ஹேஷ்டேக்கை பின்பற்றுவோர் எதிர்பார்த்து இருக்கின்றனர்.

Most Read Articles
Best Mobiles in India

English summary
Vairamuthu Turmoils about #We Too : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Gizbot sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Gizbot website. However, you can change your cookie settings at any time. Learn more