வைரமுத்து பல பெண்களிடம் தவறாக நடந்துள்ளார்- அதிரவிட்ட சின்மயின் பேஸ்புக் லைவ்.! மீண்டும் ஒரு பெண்
பல பாடகிகளையும் அவ்வாறு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மேலும் ஒரு பெண் டுவிட்டரில் வைமுத்து பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.
தற்போது தமிழ் திரை உலகில் மட்டும் அல்லாமல், மற்ற திரை உலகமும் திரும்பி பார்க்கும் விசியம் கவிஞர் வைமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு தான்.
மீடு என்ற ஹேஷ்டேக் பயன்படுத்தி சமூக வலைதளங்களில் பெண்கள் தங்களின் மீதான பாலியல் சீண்டல்கள் மற்றும் பாலியல் வன்புணர்வுகள் குறித்து அதில் தையரியமாக கருத்து தெரிவித்து வருகின்றனர்.

கடந்த சில நாட்களுக்கு முன் கவிஞர் வைரமுத்து தன்னை கட்டிபிடித்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாக மீடு ஹேஷ்டேக்கில் தெரிவித்தது உண்மை தான் என்று பாடகி சின்மயி தற்போது அவரின் பேஸ்புக் வலைதளத்தில் மீண்டும் தைரியமாக தெரிவித்துள்ளார்.
மேலும் அவர் பல பாடகிகளையும் அவ்வாறு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இந்த செய்தி தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வருகின்றது. இந்நிலையில் மேலும் ஒரு பெண் டுவிட்டரில் வைமுத்து பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார்.

பாடகி சின்மயி:
MeToo என்ற ஹேஷ்டேக்கை பயன்படுத்தி உலகம் முழுவதும் உள்ள பெண்கள் தங்களின் மீதான பாலியல் வன்புணர்வுகள் குறித்து, டுவிட்டரில் பதிவிட்டு வருகின்றனர். மேலும், இதில் பாடகி சின்மயி வைரமுத்து, மீது அடுக்கடுக்காக பாலியல் குற்றச்சாட்டுகளை குறித்து பதிவிட்டு இருந்தார். இந்த செய்தி பெரிய பூதாகரமாக வெடித்தது.

சுவிட்சர்லாந்து கச்சேரி:
கடந்த 2005ம் ஆண்டு அல்லது 2006ம் ஆண்டு என்று நாங்கள் சுவிட்சர்லாந்து கச்சேரிக்கா சென்றிந்தோம். அப்போதும், தன்னை கட்டிபிடித்து பாலியல் துன்புறுத்தல் செய்ததாகவும் தெரிவித்து இருந்தார். இதற்கு வைரமுத்து இதற்கு மறுப்பு தெரிவித்தார். அதன் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பாளர் சுரேஷ் கிருஷ்ணாவும் இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை என்று தெரிவித்து இருந்தார். மேலும் வைமுத்து இதற்கு டுவிட்டரிலும் மறுப்பு தெரிவித்தார்.

விஸ்பரூபம் எடுத்தது:
என்னை போன்று பல பெண்களையும் கவிஞர் வைமுத்து அலுவலகம் மற்றும் பல்வேறு இடங்களிலும் பாலியல் சீண்டல்கள் செய்துள்ளார். பெண்களை கட்டிபிடித்து தடவினார் என்றும் தெரிவித்து இருந்தார். கவிஞர் வைரமுத்து மீது சில பெண்கள் பாலியல் குற்றச்சாட்டுக்களை முன்வைத்தனர். இதனால் இந்த விசியம் திரை உலகில் விஸ்பரூபம் எடுத்தது.

நடிகர் சித்தார், சம்மந்தா, ஸ்ரீரெட்டி:
வைரமுத்து குறித்து பாலியல் குற்றச்சாட்டுகளை வெளிப்படையாக முன் வைத்த சின்மயிக்கு ஆதரவாக நடிகர் சித்தார், சமந்தா, ஸ்ரீரெட்டி உள்ளிட்டோரும் ஆதரவாக கருத்து தெரிவித்தனர். குற்றம் செய்தவர்கள் மீது விசாரணை நடத்த வேண்டும் என்றும் அவர்கள் வலியுறுத்தினர்.
தமிழிசை, கனிமொழி கருத்து:
வைமுத்து மீதான பாலியல் குற்றசாட்டுகளை விசாரிக்க வேண்டும் என்று தமிழக பாஜக தலைவர் டாக்டர் தமிழிசையும் தெரிவித்தார். மேலும், மீடு ஹேஷ்டேக்கில் பாலியல் குற்றச்சாட்டுகளை தெரிவிக்கும் பெண்களை ஊக்குவிக்க வேண்டும். இந்த பாலியல் குற்றச்சாட்டுகள் குறித்து விசாரணை நடத்த வேண்டும் என்று திமுகவை சேர்ந்த எம்பி கனிமொழி டுவிட்டரில் தெரிவித்துள்ளார். பல்வேறு தரப்பினரும் விசாரணை உத்தரவிட வேண்டும் என்று தெரிவித்துள்ளனர்.
சின்மயின் பேஸ்புக் லைவ்:
அதில் நடிகை சின்மயி தனது நடந்தது உண்மை தான். இதை விளம்பரத்துக்காக செய்யவில்லை. வைரமுத்து பல பெண்களையும் கட்டி பிடித்து, தடவியுள்ளார். அவரது அலுவலகத்தில் இந்த சம்பவம் நடந்துள்ளது. அவரால் பல பாடகில் பாலியல் குற்றச்சாட்டுக்காக பாதிக்கப்பட்டுள்ளனர் என்று உறுதியாக தெரிவித்துள்ளார். என்னை போல பல பெண்களும் தற்போது குறித்து வாய்திறந்து வருகின்றனர் தெரிவித்துள்ளார்.
வைரமுத்து மீது மேலும் ஒரு பெண் புகார்:
இந்த சம்பவம் அடங்குவதற்குள் மேலும் ஒரு பெண் வைரமுத்து மீது பாலியல் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளார். இந்த தகவல்களை பெண் நிருபர் சந்தியா மேனன் என்பர் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
அதில் கூறியிருப்பதாது:
எனக்கு 18 வயது இருக்கும்போது பாடலாசிரியர் வைரமுத்து தன்னிடம் தவறாக நடந்து கொண்டார். கோடம்பாக்கத்தில் உள்ள வைரமுத்துவின் வீடு மற்றும் அலுவலகத்தில் வைத்து, அவருடன் பணியாற்றிக் கொண்டிருந்த போது, திடீரென தன்னை வைரமுத்து கட்டிப்பிடித்து முத்தமிட்டார். அதைத்தொடர்ந்து, நான் அங்கிருந்து தப்பி ஓடி விட்டேன். இந்த சம்பவத்திற்கு பிறகு அவர் இருக்கும் அறையில் தனியாக இருக்கவே எனக்கு நடுக்கமாக இருக்கும். பணியின் காரணமாக அப்படி ஒரே அறையில் இருக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், எப்போதுமே நிறைய பேர் இருக்கும்போது மட்டுமே செல்வேன்.
கல்லூரி மாணவியிடம் சில்மிஷம்:
வைரமுத்து பாலியல் ரீதியாக பெண்களை சீண்டுபவர் என்பது சினிமா உலகில் அனைவருக்கும் தெரிந்த விஷயம் தான். ஆனால், அவருக்கு இருக்கும் அரசியல் தொடர்புகளை வைத்து பாதிக்கப்பட்ட பெண்களை அடக்கி விடுவதால், யாருமே அவரை எதிர்ப்பதில்லை. இது எனக்கு நடந்தது. அது தான் உண்மை. எனது பெயரை வெளியில் கூற நான் விரும்பவில்லை"
இவ்வாறு பாதிக்கப்பட்ட பெண் கூறியதாக பத்திரிக்கையாளர் சந்தியா மேனன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார். மேலும், சந்தியா மேனனின் இந்த பதிவை பாடகி சின்மயி ஸ்ரீபிரதா உள்ளிட்ட பிரபலங்கள் ட்விட்டரில் ரீட்வீட் செய்து வருகின்றனர்.
இந்நிலையில் கல்லூரில் படிக்கும் மாணவி ஒருவர் வைரமுத்துவால் பாலியல் சீண்டலுக்கு உள்ளானதாக தெரிவித்துள்ளார். அது தொடர்பான ட்வீட்டை சந்தியா மேனன் தனது ட்விட்டரில் பகிர்ந்துள்ளார்.
வைரமுத்து கேட்டுக் கொண்டதால் சொல்லவில்லை:
"வைரமுத்து இடமிருந்து ஒருநாள் எனக்கு அழைப்பு வந்தது. நானும் சென்றேன். என் தாத்தாவின் வயது இருக்கும் அவர், என்னை பாலியல் ரீதியாக அணுகினார். சுதாரித்துக்கொண்ட நான் உடனே அந்த அறையை விட்டு வெளியேறிவிட்டேன்.
சில நாட்கள் கழித்து என்னை மீண்டும் தொடர்பு கொண்ட வைரமுத்து, தன் மனைவியிடம் இந்த விவகாரம் பற்றி சொல்ல வேண்டாம் என்று வேண்டினார். நானும் சொல்லவில்லை. என் போன்ற பாதிக்கப்பட்ட பெண்கள் முன்வந்து புகார் அளிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் இதை கூறுகிறேன். என் பெயரை தவிர்த்து விட்டு செய்தியாக வெளியிடுங்கள்" என்று அந்த பதிவில் பாதிக்கப்பட்ட பெண் தெரிவித்துள்ளார்.
நடிகர் சித்தார்த் ஆதரவாக பதிவு:
நடிகர் சித்தார் டுவிட்டரில் பல பெண்களும் கவிஞர் வைரமுத்து எதிராக பேசுகின்றார்கள். யாரையும் நியாப்படுத்தாமல் அவர்கள் கேட்கப்பட வேண்டும். இதுகுறித்து முதற்கட்டமாக விசாரணை நடத்த வேண்டும் என்று பதிவிட்டுள்ளார்.
ஸ்ரீரெட்டி:
சமீப காலமாக தெலுங்கு மற்றும் தமிழ் திரைப்பட நடிகர்களின் மீதும் பாலியல் குற்றச்சாட்டுகளையும் கூறி பல்வேறு போராட்டங்களை நடத்தியவர் நடிகை ஸ்ரீரெட்டி. தற்போது சின்மயின் குற்றச்சாட்டு தனது பேஸ்புக் தளத்தில் ஆதரவாக பதிவிட்டுள்ளார். இது தொடர்பாக பதிவிட்டுள்ள ஸ்ரீரெட்டி, எல்லா பெண்களுக்குள்ளும் ஒரு துர்க்கையின் தைரியம் இருக்கிறது என்று தெரிவித்து ஆதவாக பதிவிட்டுள்ளார். மேலும் வெளிப்படையாக கூறியத்திற்கு பாராட்டுக்களையும் ஸ்ரீரெட்டி தெரிவித்துள்ளார்.
வைரமுத்து மறுப்பு:
முதல் முறையாக, வைரமுத்து இக்குற்றச்சாட்டுகள் குறித்து இன்று பதிலளித்துள்ளார். இருப்பினும் தனது பதிவில் அவர் சின்மயியோ அல்லது வேறு யாருடைய பெயரையோ குறிப்பிட்டு சொல்லவில்லை. ஆனால், குற்றச்சாட்டுகள், விமர்சனங்களுக்கான பதிலை ட்விட்டரில் மறுப்பு தெரிவித்துள்ளார்.
வைரமுத்துவால் இரண்டு பெண்கள் பாதிப்பு:
வைரமுத்து ஒரு பொய்யர் என்றும் தனது டுவிட்டரில் சின்மயி தெரிவித்துள்ளார். இது போன்ற பல பெண்கள் வைரமுத்து பற்றி பேச முன்வருவார்கள். வைரமுத்துவின் அரசியல் பின்னணி, அதிகார பலம் போன்றவற்றை கருத்தில் கொண்டு இதனை வெளியில் சொல்லாமல் இருக்கிறார்கள். ஏனென்றால், பலரும் வைரமுத்துவின் பாலியல் தொல்லைக்கு உள்ளாகியிருக்கிறார்கள். அவரது அலுவலகத்திலேயே இரண்டு பெண்களுக்கு முத்தம் கொடுக்க முயற்சித்துள்ளார் என்று குறிப்பிட்டுள்ளார்.

தற்போது டிரெண்டிங் ஆகியுள்ளது:
தற்போது வைரமுத்து மீது அடுக்கடுக்காக புகார் கூறிவரும் பாடகி சின்மயி டுவிட்டர் பதிவுகளும் அவருக்கு ஆதரவாக பதிவிட்டு வரும் வருவோர்களின் டுவிட்டர் பதிவுகளும் சமூக வலைதளங்களில் டிரெண்டிங் ஆகியுள்ளது.

மற்றொரு நடிகை:
மணிரத்னம் இயக்கிய ‘காற்று வெளியிடை' படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை அதிதி ராவ் ஹைதரி. இந்தப் படத்தில் இவர் கார்த்திக்கு ஜோடியாக நடித்திருப்பார். தற்போது இவர் தமிழைத்தவிர தெலுங்கு, இந்தி ஆகிய மொழிப் படங்களில் நடித்த வருகிறார். இவர் தனக்கு பாலிவுட் சினிமாவில் பாலியல் தொல்லை நடந்ததாக கூறி ஏற்கனவே பரபரப்பை ஏற்படுத்தியிருந்தார்.

3 படங்கள் பறிபோனது:
இந்த பட்டியலில் தற்போது நடிகை அதிதி ராவ் ஹைதரியும் இணைந்துள்ளார். சினிமாவில் அட்ஜஸ்ட் செய்ய மறுப்பு தெரிவித்ததால், தனக்கு 3 படங்களின் வாய்ப்பு கைவிட்டுப் போனதாக அவர் கூறியுள்ளார்.
படுக்கைக்காக செல்லும் காட்சி:
இது குறித்து அவர் கூறுகையில், தமிழ் சினிமாவில் வாரிசு நடிகர்கள், நடிகைகளைத் தவிர வெளியில் இருந்து வரும் நடிகைகள் பட வாய்ப்புக்காக படுக்கைக்காக செல்லும் கொடுமை அதிகம் நடக்கிறது. கொள்கையுடன் செயல்படுவது தான் எனது நோக்கம். ஆனால், அது முடியாத காரியம் ஒன்றும் இல்லை. அதற்கு நான் தான் உதாரணம்.

கவுரவம் தான் முக்கியம்:
எனக்கு கண்ணியம், கவுரவம் தான் முக்கியம். பொதுவாக சினிமாவில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்று கூறிவிட முடியாது. எந்த துறையாக இருந்தாலும், சரி அதில், சிலர் கண்ணியத்துடன் நடந்து கொள்வார்கள், சிலர் வித்தியாசமாக நடந்து கொள்வார்கள்.
எனக்கு கிடைத்த மிகப்பெரிய பரிசு:
எனக்கு நம்பர் ஒன் நடிகையாக வேண்டும் என்ற எண்ணம் எனக்கு கிடையாது. ஆனால், பெரிய பெரிய இயக்குனர்கள் உடன் இணைந்து நடிப்பதே எனக்கு கிடைத்த பெரிய பரிசாக நான் கருதுகிறேன். அது தான் எனக்கு கிடைத்த வெற்றி என்று அவர் கூறியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications