2.0 ரோபோட்டுக்கு வடிவேலு மூட்டை பூச்சி காமெடி டப்பிங்.! மரண கலாய் வீடியோ.!
இந்நிலையில் 2.0 படத்தின் டிரெய்லை கலாய்க்கும் விதமாகவும் நகைச்சுவையாகவும் தற்போது வடிவேலுவின் மூட்டை பூச்சி காமெடி வாய்ஸ் இதில் இடம் பெற்றுள்ளது. இந்த படத்தின் காட்சிக்கும் மூட்டை பூச்சி கொல்லும்
நடிகர் ரஜினி காந்த், சங்கர் எமிஜாக்ஷன், அக்ஷயகுமார் ஆகியோர் நடிப்பில் ரூ.542 கோடி செலவில் தயாரிக்கப்பட்டுள்ள படம் 2.o. 4 ஆண்டாக இந்த படம் தயாரிக்கப்பட்டு வருகின்றது.
இந்த படத்தின் பாடல் வெளியீட்டு விழா துபாயில் நடந்தது. 2.o படத்தின் விஷூவல் எபெக்ட்ஸ் மற்றும் கிராப்பிக்ஸ் காட்சிகளும் தற்போது முடிந்துள்ளது.
அண்மையில் இந்த படத்தின் பாடல் டீசரும், அதன் பிறகு டிரெய்லரும் வெளியே வந்தன.
இந்நிலையில் 2.0 படத்தின் டிரெய்லை கலாய்க்கும் விதமாகவும் நகைச்சுவையாகவும் தற்போது வடிவேலுவின் மூட்டை பூச்சி காமெடி வாய்ஸ் இதில் இடம் பெற்றுள்ளது.
இந்த படத்தின் காட்சிக்கும் மூட்டை பூச்சி கொல்லும் இயந்திரத்தின் வடிவேலு வாய்ஸ்க்கும் கட்சிதமாக பொருந்தியுள்ளது. இதை ரசிகர்களும் இதை நகைச்சுவையாக சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

லைக்கா புரடெக்ஷன் நிறுவனம்:
2.0 படத்தை இலங்கையை சேர்ந்த லைக்கா புரொடெஷன் நிறுவனம் தயாரித்து உள்ளது. மேலும் இந்த படத்தின் வெளியீட்டு தேதி தற்போது, நவம்பர் மாதம் 29ம் தேதி வெளியாகும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தின் பஸ்ட் லுக் எனப்படும் டீசரும், டிரெய்லரும் வெளியாகியுள்ளது. இது ரஜினி ரசிகர்களை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

2.0 தொழில் நுட்பம்:
2.0 படம் முழுக்க முழுக்க 3டியில் எடுக்கப்பட்டுள்ளது. இந்தியாவில் முழுவதுமாக 3டியில் எடுக்கப்பட்ட படம் இதுவாகும். பெரும்பாலும் ஹாலிவுட் படங்களில் கூட 2டியில் திரைப்படம் எடுக்கப்பட்டு பிறகு 3டியில் மாற்றம் செய்யப்படும். மேலும், இந்த படம் அவதார் படத்திற்கு இணையாக காட்சிகள் உருவாக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகின்றது.

3டி கேமரா:
2.0 படத்திற்கு தற்போது நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய வகையில், உருவாக்கப்பட்டுள்ள 3டி கேமராவை வைத்தே இந்த படத்தின் காட்சிகளை நிரவ்ஷா ஒளிப்பதிவு செய்துள்ளார். இந்த படத்தின் காட்சிகள் பெரும்பாலும் 3டி கலக்க போகின்றது என்று தற்போது வெளியாகியுள்ள டீசரில் தெரியவந்துள்ளது.

படத்தின் டீசர் வெளியீடு:
விநாயகர் சதுர்த்தியை யொட்டி இந்த படத்தின் டீசர் தற்போது 3டியில் வெளியிப்பட்டுள்ளது. டீசர் 1.29 நிமிடம் ஓடக் கூடிய வகையில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த படத்தின் காட்சில் பிரமிப்பூட்டும் வகையில் எடுக்கப்பட்டுள்ளது. மேலும் இதில் இந்த படத்தின் திடீரென செல்போன்கள் அனைத்தும் மாயமாகும் வகையில் காட்சிகள் இருக்கின்றன. மேலும் ஹாலிவுட்டையே மிஞ்சும் அளவுக்கு இந்த படம் உருவாகியுள்ளது.
கடந்த வாரம் டிரெய்லரும் வெளியாகி இருகின்றது.
சந்திரபதி திரைப்படம் :
சத்திரபடி திரைப்படத்தில், நடிகர் வடிவேலு மூட்டை பூச்சி கொல்லும் நவீன இயந்திரம் என்று சொல்லி உரலை விற்பனை செய்வார். இதன் விலை ரூ.100 என்றும் கூறியிருப்பார். இந்த காட்சியில் மூட்டை பூச்சியை பிடித்து உரலில் போட்டு நங்கு நக்கடி நங்கு நக்கடி என்று வடிவேலு கொல்ல வேண்டும் என்று சிங்கடுத்துவிடம் செல்லூர் . இந்த காமெடியை பார்த்து அனைவருக்கும் சிரிப்பு வரும்.
2.0 மூட்டை பூச்சி காமெடி மரண கலாய்:
2.0 ரோபோட் டிரெய்லரும் வடிவேலு மூட்டை பூச்சி காமெடியை இணைத்துள்ளனர். எடிட்டிங் தொழில் நுட்பத்தின் உதவியுடன் நடிகர் ரஜினி காட்சிக்கு ஏற்ப வடிவேலு மூட்டை பூச்சி காமெடியும் இதில் இணைந்துள்ளது. இது மேலும் காமெடியை தூக்கலாக்கியுள்ளது. இது வாட்ஸ் ஆப் டேடஸ் மற்றும் பேஸ்புக், வீடியோக்களில் வைரல் ஆகி வருகின்றது.


Click it and Unblock the Notifications