Home
Social media

46 ஆண்டுகளுக்கு முன்பு துளைந்த பெண்ணின் மோதிரம் பேஸ்புக் மூலம் கிடைத்தது.. எப்படி தெரியுமா?

அமெரிக்காவில் வசிக்கும் ஒரு பெண் ஐந்து தசாப்தங்களுக்கு முன்னர் இழந்த அவரின் மோதிரத்தை பேஸ்புக் மூலமாக கண்டுபிடித்திருக்கிறார். சரியாகச் சொல்ல போனால் 46 ஆண்டுகளுக்குப் பின்னர் இந்த பெண்ணின் மோதிரம் திரும்பவும் அவர் கைகளில் வந்து சேர்ந்துள்ளது. இந்த மோதிரம் எப்படி கிடைத்தது என்று தெரியுமா? இது சற்று விநோதமான நிகழ்வுதான், இருந்தாலும் உண்மையில் நடந்துள்ளது.

46 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மோதிரம்

46 ஆண்டுகளுக்கு முன்பு காணாமல் போன மோதிரம்

மிச்சிகன் குடிமகனான மேரி கசால்-பியர்ட்ஸ்லீ 46 ஆண்டுகளுக்கு முன்பு தனது மோதிரத்தை தெரியாமல் தவறவிட்டுவிட்டார். அந்த நேரத்தில் அவர் உயர்நிலைப்பள்ளியில் இருந்தார் என்று கூறப்படுகிறது. தனக்கு பிடித்தமான நகையை மீண்டும் பார்க்கும் நம்பிக்கையை இழந்த பின்னர், இறுதியான முடிவாக அவர் தனது சமூக ஊடக பக்கமான பேஸ்புக் தளத்தில் ஒரு சமூக ஊடக இடுகையைச் சமீபத்தில் பதிவிட்டுள்ளார்.

பேஸ்புக் மெசஞ்சரில் வந்த 'அந்த' ஒரு மெசேஜ்

பேஸ்புக் மெசஞ்சரில் வந்த 'அந்த' ஒரு மெசேஜ்

மேரி கூறியதாவது, தனது பேஸ்புக் மெசஞ்சரில் ஒரு நாள் கிறிஸ் நோர்டி என்பவரிடமிருந்து ஒரு மெசேஜ்ஜைப் பெற்றதாகத் தெரிவித்துள்ளார். அந்த குறிப்பிட்ட மெசேஜ்ஜில் நோர்ட் எழுதியது, "உங்களுடைய ஒரு முக்கிய பொருள் என்னிடம் உள்ளது" என்று குறிப்பிடப்பட்டிருப்பதைக் கண்டிருக்கிறார். முதலில், இதை ஒரு ஸ்பேம் என்று கருதிய மேரி இறுதியாக அது அவரின் மோதிரத்தைப் பற்றியது என்பதை உணர்ந்த பின்னர் வியப்படைந்துள்ளார்.

இரண்டு தசாப்த தேடல் இறுதியில் முடிவிற்கு வந்தது

இரண்டு தசாப்த தேடல் இறுதியில் முடிவிற்கு வந்தது

இப்படி ஒரு நிகழ்வு உண்மையற்றதாகத் தோன்றினாலும், நோர்ட் 20 ஆண்டுகளுக்கு முன்பு அந்த மோதிரத்தைக் கண்டுபிடித்துள்ளார் என்று கூறப்படுகிறது. அதன் உரிமையாளரைத் தேடுவதும் தெரியவந்தது. இந்த நோக்கத்திற்காக, அவர் ஒரு பேஸ்புக் இடுகையை உருவாக்கினார். அதில், இப்படி தன்னிடம் ஒரு மோதிரம் உள்ளது என்றும், அது உங்களுடையதாக இருந்தால் தயவுசெய்து எங்களைத் தொடர்பு கொள்ளவும் குறிப்பிட்டிருக்கிறார். மேரி படித்த பவர்ஸ் கத்தோலிக்க உயர்நிலைப்பள்ளி உட்பட அவரது இடுகை பரவலாகப் பல பக்கங்களில் பகிரப்பட்டது.

எல்லோருக்கும் நன்றி

எல்லோருக்கும் நன்றி

அப்படி தான் நோர்டால் மோதிரத்தின் உரிமையாளரைக் கண்டுபிடிக்க முடிந்தது என்று கூறப்பட்டுள்ளது. அவரது இடுகையைப் பகிர்ந்ததிலிருந்து இணையத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கிடையில், நோர்டும் தனது மகிழ்ச்சியை வெளிப்படுத்த "எல்லோருக்கும் ஒரு நல்ல செய்தி, நான் அந்த உரிமையாளரைக் கண்டுபிடித்துவிட்டேன். அவர் மேரி மார்கரெட் கசல்.என்று கூறியுள்ளார். மேரியும் அதற்குப் பதிலளித்து நன்றி தெரிவித்திருக்கிறார்.

Best Mobiles in India

English summary
US Woman Finds Her Lost Ring After 46 Years Through Facebook : Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X