Home
Social media

Online அட்ராசிட்டி.. ஸ்மார்ட் வாட்ச் ஆர்டர் செய்தவருக்கு மாட்டு சாணம் டெலிவரி- அடுத்த நடந்த டுவிஸ்ட்!

தலைப்பை படித்துவிட்டு ஆச்சரியப்பட வேண்டாம். இதுபோன்ற பல டெலிவரி அட்ராசிட்டிகள் கடந்த சமீப காலமாகவே அரங்கேறி வருகிறது. ஆனால் இங்கு மாட்டு சாணம் என்பது மட்டும் தான் சற்று ஆர்வத்தை தூண்டுகிறது. மாட்டு சாணம் எப்படி டெலிவரி செய்யப்பட்டது என்று ஆச்சரியப்பட வேண்டாம். மாட்டு சாணங்களை ஆன்லைன் போர்ட்டல்களே அதிகாரப்பூர்வமாக விற்பனை செய்கிறது என்பது கவனிக்கத்தக்க ஒன்று.

மாட்டு சாணம் விலை

மாட்டு சாணம் விலை

பிரபல ஆன்லைன் போர்ட்டல்கள் மாட்டு சாணங்களை வறட்டிகளாக விற்பனை செய்கின்றன.

சுத்தமான 100% தேசி மாட்டு சாணம் கேக், பெரிய கையால் செய்யப்பட்டது, முழு ஆர்கானிக் தயாரிப்பு என இவைகளை விளம்பரங்கள் செய்கின்றன.

ஒரு காலத்தில் சுவற்றில் வறட்டிகளாக தட்டி வைத்து பார்த்திருப்போம் இன்று ஆன்லைன் போர்ட்டலில் விற்பனைகளுக்கு பார்க்கிறோம். அது சரி, தொழில்நுட்ப முன்னேற்றம் தானே அனைத்தும்.

இதன் விலை எவ்வளவு தெரியுமா?. சுமார் 7 இன்ச் அளவு கொண்ட சுத்தமான மாட்டு சாண 5 வறட்டிகளின் விலை ரூ.250 ஆகும். இதற்கு 44 சதவீதம் தள்ளுபடி வழங்கப்பட்டு ரூ.139 என கிடைக்கிறது.

ஸ்மார்ட்வாட்ச்சிற்கு பதில் மாட்டு சாணம்

ஸ்மார்ட்வாட்ச்சிற்கு பதில் மாட்டு சாணம்

சரி, இந்த கதைக்கு வருவோம். உபி சேர்ந்த ஒரு பெண் ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை பிரபல ஆன்லைன் போர்ட்டலில் ஆர்டர் செய்துள்ளார். அந்த பெண்ணுக்கு மாட்டு சாணம் டெலிவரி செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அரங்கேறியது உத்திரபிரதேச மாநிலத்தில்.

ரூ.1304க்கு ஆர்டர் செய்யப்பட்ட ஸ்மார்ட் வாட்ச்

ரூ.1304க்கு ஆர்டர் செய்யப்பட்ட ஸ்மார்ட் வாட்ச்

உத்திரபிரதேச மாநிலம் கௌசாம்பி, கசெண்டா கிராமத்தை சேர்ந்தவர் நீலம் யாதவ், இவர் ஆன்லைன் ஆப்ஸில் பண்டிகை கால தள்ளுபடியை முன்னிட்டு ஸ்மார்ட் வாட்ச் ஒன்றை ஆர்டர் செய்துள்ளார்.

நீலம் இந்த வாட்ச்சை தனது அண்ணனுக்கு அன்பளிப்பாக வழங்க விரும்பி இருக்கிறார். நீலம் ஆன்லைன் போர்ட்டலில் ஸ்மார்ட் வாட்ச்சை Cash on Delivery என்ற விருப்பத்தில் ஆர்டர் செய்துள்ளார். இந்த ஸ்மார்ட் வாட்ச் விலை ரூ.1304 ஆகும்.

நான்கு சிறிய மாட்டு சாண வறட்டிகள்

நான்கு சிறிய மாட்டு சாண வறட்டிகள்

நவ்பாரத் டைம்ஸ் இல் இதுகுறித்து வெளியான அறிக்கையில், நீலம் ஆர்டர் செய்த ஸ்மார்ட் வாட்ச் சுமார் 9 நாட்களுக்கு பிறகு டெலிவரி செய்யப்பட்டுள்ளது. ஸ்மார்ட் வாட்ச்சிற்கான தொகையும் செலுத்தப்பட்டுள்ளது.

பார்சலை பிரித்து பார்த்த நீலம் சகோதரர் ரவேந்திரா அதிர்ச்சி அடைந்துள்ளார். காரணம் அந்த பார்சலுக்குள் ஸ்மார்ட் வாட்ச்சிற்கு பதிலாக நான்கு சிறிய மாட்டு சாண வறட்டிகள் இருந்திருக்கிறது.

அடுத்த நடந்த டுவிஸ்ட்..

அடுத்த நடந்த டுவிஸ்ட்..

நீலம் குடும்பத்தினர் இதை கண்டு அதிர்ச்சி அடைந்தனர். அடுத்த நடந்த டுவிஸ்ட் என்னவென்றால், தொடர்ந்து ரவேந்திரா அந்த டெலிவரி எக்சிக்யூட்டிவை அழைத்து நேரில் வர வைத்துள்ளார். பின் இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தொடர்ந்து ரவேந்திரா பார்சலை காண்பித்து பணத்தை திரும்பக் கேட்டுள்ளார். அந்த டெலிவரி நபரும் பணத்தை திரும்பக் கொடுத்துவிட்டு பார்சலை மீண்டும் பெற்றுக் கொண்டு திரும்பியதாக கூறப்படுகிறது.

தீர்வு தான் என்ன?

தீர்வு தான் என்ன?

தொடர் கதை என்று கூறுகிறீர்களே, இதற்கு தீர்வு தான் என்ன என்றால், தீர்வுகள் இருக்கிறது. ஆன்லைனில் பொருட்களை ஆர்டர் செய்யும்பட்சத்தில் அது டெலிவரி செய்த பிறகு அந்த பொருள் பிடிக்கவில்லை என்றாலோ வேலை செய்யவில்லை என்றாலோ ரிட்டர்ன் செய்து கொள்ளலாம். டெலிவரி எக்ஸ்சிக்யூட்டிவ் வீட்டுக்கே வந்து ரிட்டர்ன் பொருட்களை வாங்கிச் செல்வார். செலுத்திய பணம் மீண்டும் வரவு வைக்கப்படும்.

தரம் அறிந்து வாங்கலாம்

தரம் அறிந்து வாங்கலாம்

எதுக்கு இந்த தொந்தரவு. நேரில் சென்று பொருட்கள் வாங்கும்பட்சத்தில் செக் செய்து பொருளின் தரத்தை அறிந்துவிடலாமே என்று தோன்றலாம். ஆன்லைனில் வாங்கும் பொருட்களுக்கும் இதற்கான வழிகள் இருக்கிறது.

ஓபன் பாக்ஸ் சிஸ்டம்

ஓபன் பாக்ஸ் சிஸ்டம்

இந்தியாவில் முன்னணி ஆன்லைன் விற்பனை தளமாக Flipkart மற்றும் Amazon இருக்கிறது. பெரும்பாலும் பொருட்களை இந்த இரண்டு தளங்களில் தான் ஆர்டர் செய்கிறோம். இந்த இரண்டு தளங்களிலும் பொருட்களை தரத்தை கண்டறிந்து வாங்கலாம்.

அமேசான் மற்றும் பிளிப்கார்ட் ஆகிய இரண்டுமே "ஓபன் பாக்ஸ்" சிஸ்டம் கொள்கைகளைக் கொண்டிருக்கிறது. இது நிறைய வாடிக்கையாளர்கள் தெரிந்திருப்பது இல்லை.

ஓபன் பாக்ஸ் சிஸ்டம் என்பது டெலிவரி செய்யும் நேரத்திலேயே பொருட்கள் சரியாக உள்ளதா என்பதையும் அதன் செயல்பாடுகளையும் செக் செய்து கொள்ள வழிவகை செய்கிறது.

File Images

More from GizBot

Best Mobiles in India

English summary
UP Woman Shocks: Cow Dung Delivered Instead of Smart Watch
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X