வாட்ஸ்ஆப், பேஸ்புக் பயன்படுத்த கட்டணம்: ஓ மை காட்.!

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வரி மிகவும் சிறிய தொகை என்பதால் மக்களுக்கு சிரமம் இருக்காது என செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார்.

|

உலகம் முழுவதும் பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற பல்வேறு வலைதளங்களை மக்கள் அதிகமாக பயன்படுத்துகின்றனர், இந்நிலையில் உகாண்டா வருமாணத்தை அதிகரிக்கவும் பின்பு போலி செய்திகளை ஒழிக்கவும் வாட்ஸ்ஆப், பேஸ்புக், டுவிட்டர் போன்ற பல்வேறு சமூக வலைதளங்களை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு வரி விதிக்க அந்நாட்டு அரசு திட்டமிட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

வாட்ஸ்ஆப், பேஸ்புக் பயன்படுத்த கட்டணம்: ஓ மை காட்.!

குறிப்பாக இந்த சட்டம் விரைவில் அமல்படுத்தப்படும் என உகாண்டா அரசு சார்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது, மேலும் பேஸ்புக் மற்றும் வாட்ஸ்ஆப் போன்ற செயலிகளை பயன்படுத்தும் வாடிக்கையாளர்களுக்கு தினமுமம் 200 ஷில்லிங் வரி செலுத்த வேண்டும் என்று செய்தி குறிப்பில் தகவல் வெளிவந்துள்ளது.

யோவெரி முஸ்வேனி

யோவெரி முஸ்வேனி

மேலும் உகாண்டா நாட்டின் குடியரசு தலைவர் யோவெரி முஸ்வேனி தெரிவித்தது என்னவென்றால் பேஸ்புக், வாட்ஸ்ஆப் போன்ற
சமூகவலைதளங்கள் மூலம் போலி செய்திகள் மற்றும் தேவையில்லாத கருத்துகள் போன்றவற்றை ஊக்குவிக்கப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

டுவிட்டர்

டுவிட்டர்

அதன்பின்பு இந்த புதிய சட்டம் பாராளுமன்றத்தில் ஒப்பதல் வழங்கப்பட்டதும், சட்ட குறிப்பில் கையொப்பமிடுவதாக குடியரசு தலைவர்
யோவெரி முஸ்வேனி தெரிவித்துள்ளார். மேலும் இந்த தகவலை தனது அதிகாரப்பூர்வ டுவிட்டர் பக்கத்தில் தெரிவித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

ஜூலை:

ஜூலை:

ஜூலை மாதம் முதல் வாரத்தில் இந்த புதிய சட்டம் அமலுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் உகான்டா மக்கள் அதிகளவு
வலைதளங்களை பயன்படுத்தும் போது நாட்டின் வருவாய்க்கு இந்த மசோதா முக்கிய பங்களிக்கும் என பாராளுமன்ற செய்தி தொடர்பாளர் க்ரிஸ் ஒபோர் தகவல் தெரிவித்துள்ளார்.

சிறிய தொகை:

சிறிய தொகை:

இப்போது அறிவிக்கப்பட்டுள்ள வரி மிகவும் சிறிய தொகை என்பதால் மக்களுக்கு சிரமம் இருக்காது என செய்தி தொடர்பாளர் தகவல் தெரிவித்துள்ளார். பின்பு இது மறுவிநியோக வரி என்பதால் நிதி திட்டங்களுக்கான தொகையை
மட்டுமே அரசு எதிர்பார்க்கிறது.

Best Mobiles in India

English summary
Uganda imposes WhatsApp and Facebook tax 'to stop gossip: Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X