ஐயப்பனை தரிசனம் செய்த பெண்கள்: பேஸ்புக்கில் கிளித்த இளைஞர்.!

இந்நிலையில் இன்று அதிகாலை இரண்டு பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் தரிசனம் செய்ததால், நடை அடைக்கப்பட்டுள்ளது. பரிகார பூஜையும் துவங்கியுள்ளது. தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக

|

புறவாசல் வழியாக சாமி ஐயப்பனை இரண்டு பெண்கள் இன்று அதிகாலையில் சுவாமி தரிசனம் செய்தனர். இதற்கு ஐயப்ப பக்தர்கள் உள்ளிட்ட பலரும் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் ஐப்பனை தரிசனம் செய்ய விதிமுறைகள் இருக்கின்றன. உச்ச நீதிமன்ற உத்தரவை காட்டி பெண்கள் பலரும் சாமி தரிசனம் செய்ய முயன்றனர்.
பக்தர்களின் கடும் எதிர்ப்பால் பலரும் திரும்பினர்.

ஐயப்பனை தரிசனம் செய்த பெண்கள்: பேஸ்புக்கில் கிளித்த இளைஞர்.!

இந்நிலையில் இன்று அதிகாலை இரண்டு பெண்கள் சபரிமலையில் சாமி தரிசனம் செய்தனர். பெண்கள் தரிசனம் செய்ததால், நடை அடைக்கப்பட்டுள்ளது. பரிகார பூஜையும் துவங்கியுள்ளது.

தமிழகத்தை சேர்ந்த இளைஞர் ஒருவர் பேஸ்புக்கில் தனது கண்டனத்தை பதிவு செய்து இருக்கின்றார்.

 உச்ச நீதிமன்ற உத்தரவு:

உச்ச நீதிமன்ற உத்தரவு:

சாமி ஐயப்பனை அனைத்து வயது பெண்களும் தரிசனம் செய்யலாம் என்று கடந்த சில மாதங்களுக்கு முன் உச்ச நீதிமன்றம் அறிவித்தது. இதைத்தொடர்ந்து, பெண்ணிய வாதிகள் உட்பட பலரும் கேரளாவுக்கு வந்தனர் பக்தர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வெளியேற்றினர்.

கவிதா, ரெஹனா பாத்திமா:

கவிதா, ரெஹனா பாத்திமா:

ஹைதராபாத்தை சேர்ந்த கவிதா, கேரளாவைச் சேர்ந்த ரெஹனா பாத்திமா ஆகியோர் சபரிமலை வரை சென்று சாமி தரிசனம் செய்ய முயன்றனர். ஐயப்ப பக்தர்களின் கூட்டம் அதிகமாகவும் இருந்ததால், எதிர்ப்பு அதிகமாக இருந்தால் பொது மக்கள் கலைந்து சென்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது

சுவாமி தரிசனம்:

மாநிலம் மலாபுரத்தை சேர்ந்த கனகதுர்கா, கோழிக்கோடை சேர்ந்த பிந்து, ஆகிய 40 வயது பெண்கள் இருவரும் சபரிமலைக்கு இன்று அதிகாலையில் சன்னிதானத்திற்கு இருமுடி கட்டி சென்றனர். இருப்பினும் 2 பேரும் 18 படிகள் ஏறாமல் அதிகாலை 3.45 மணிக்கு சாமி தரிசனம் செய்தனர்.

குறுக்கு வழியில் தரிசனம்:

குறுக்கு வழியில் தரிசனம்:

18 ம் படிக்கு செல்லாமல் அதனுடைய பக்கவாட்டில் இருக்கக்கூடிய படிக்கட்டு வழியாக சன்னிதானம் சென்றனர். பெரும்பாலும் இருமுடி காட்டாமல் சபரிலை வரும் பக்தர்கள் இந்த வழியை பின்பற்றுவது சமீப காலமாக நடந்து வருகிறது. அந்த வழியாக இந்த 2 பேரும் ஐயப்பனை தரிசனம் செய்தனர். இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.

பதற்றம்:

பதற்றம்:

பரிகார குற்றம் என ஆணை பிறப்பிக்கப்படும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதனால் சபரிமலை சன்னிதானம் நிலக்கல் போன்ற பகுதிகளில் ஒரு பதட்டமான சூழல் நிலவி வருகிறது.

 மாறுவேடத்தில் சாமி தரிசனம்:

மாறுவேடத்தில் சாமி தரிசனம்:

தரிசனம் செய்த இரண்டு பெண்களும் கடந்த மாதம் 18ம் தேதி சபரிமலைக்கு தரிசனம் மேற்கொள்ள சென்றனர் ஆனால் போராட்டங்கள் நடைபெற்றதால் தரிசனம் செய்யாமல் திரும்பினார்.இந்த நிலையில் நேற்று இரவு நிலக்கல்.வழியாக பம்பை வந்த இருவரும் முகங்கள் தெரியாதவாறு துணியை வைத்து கட்டிக்கொண்டு அதிகாலை தரிசனம் செய்தனர். இவர்களுக்கு போலீசார் பாதுகாப்பு கொடுத்ததாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.

நடை அடைக்கப்பட்டுள்ளது:

நடை அடைக்கப்பட்டுள்ளது:

பெண்கள் இருவர் தரிசனம் செய்த நிலையில் சபரிமலை மேல்சாந்தி மற்றும் தந்திரி ஆலோசனையில் ஈடுப்பட்டனர். ஆலோசனைக்கு பிறகு சுத்திகலச பூஜைக்காக சபரிமலை கோவில் நடை அடைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பேஸ்புக்கில் கொதித்த இளைஞர்:

இறை நம்பிக்கையை சிதைத்துள்ளனர். பின் வாசல் வழியாக சென்று சாமி தரிசனம் செய்தது பெருமையாக கொள்ள வேண்டாம். ஒட்டு மொத்த மக்களின் நம்பிக்கையை தூக்கி புதைத்துள்ளீர்கள். உங்களை ஐயப்பன் மனித்தாலும், உங்களின் மனசாட்சி மனிக்காது என்று பாஸ்கரன் நா என்ற இளைஞர் கருத்து கூறியுள்ளார்.

இரண்டு பெண்களின் கருத்து:

இரண்டு பெண்களின் கருத்து:

சாமி தரிசனம் செய்த இரண்டு பெண்கள் நாங்கள் யார் மனதையும் புண்படுத்தவில்லை. அனைவரும் எங்களை ஏற்பார்கள் என்று சாமி தரிசனம் செய்துள்ளனர். இந்நிலையில் இரண்டு பெண்களையும் கண்டித்து பேஸ்புக் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் கடும் எதிர்ப்பு கிளம்பியுள்ளது.

வீடுகளுக்கு பாதுகாப்பு:

வீடுகளுக்கு பாதுகாப்பு:

சுவாமி தரிசனம் செய்த பெண்களின் வீடுகளுக்கும் கடும் போலீஸ்பாதுகாப்பு கேரள அரசு சார்பில் அளிக்கப்பட்டுள்ளது. சபரிமலையில் ஐய்யப்பதர்களின் வருகையும் தற்போது அதிகரித்துள்ளது.

Best Mobiles in India

English summary
Two women below the age of 50 enter Sabarimala Temple : Read more about this in Tamil GizBot

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X