Home
Social media

ஆண்ட்ராய்டு டிவி வசதியை முடித்து கொள்கிறது டுவிட்டர்.!

டுவிட்டரில் உள்ள முழு வசதியை அதன் பயனாளி ஒருவர் பெற வேண்டும் என்றால் அதற்கு ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் செயலியை டவுன்லோடு செய்து கொள்ளவும்

By Siva Lingam

முன்னணி சமூக வலைத்தளங்களில் ஒன்றான டுவிட்டர் அவ்வப்போது புதிய அப்டேட்டுக்களை செய்து அதன் பயனாளர்களுக்கு புதுப்புது அனுபவங்களை கொடுத்து வருகிறது என்பது அனைவரும் அறிந்ததே. கடந்த சில நாட்களுக்கு முன்னர் டுவிட்டர் நிறுவனம் ஒரு பயனாளிக்கும் இன்னொரு பயனாளிக்கும் அனுப்பப்படும் ரகசிய மெசேஜ்களை அனுப்பும் வசதியை முடித்து கொண்ட நிலையில் தற்போது இதன் அதிகாரபூர்வ செயலிகளில் ஒன்றான ஆண்ட்ராய்டு டிவி, ரோகு மற்றும் எக்ஸ்பாக்ஸ் ஆகியவற்றின் சேவைகளையும் நிறுத்த டுவிட்டர் முடிவு செய்துள்ளது. மிக குறைந்த பயனாளிகள் மட்டுமே பயன்படுத்தி வந்த இந்த வசதியை நிறுத்த போவதாக மேக் செயலி கூறியதை அடுத்து டுவிட்டரும் இந்த முடிவை எடுத்துள்ளது.

ஆண்ட்ராய்டு டிவி வசதி இனி டுவிட்டரில் இல்லை.!

டுவிட்டரில் உள்ள முழு வசதியை அதன் பயனாளி ஒருவர் பெற வேண்டும் என்றால் அதற்கு ஆண்ட்ராய்டு அல்லது ஐஒஎஸ் செயலியை டவுன்லோடு செய்து கொள்ளவும் என்றும் அல்லது டெக்ஸ்டாப் இணையதளத்தை பயன்படுத்தலாம் என்றும் டுவிட்டர் மேலும் அறிவித்துள்ளது. டுவிட்டரில் இந்த முடிவுக்கு மிகக்குறைந்த டுவிட்டர் பயனாளிகளிடம் இருந்தே அதிருப்தி வெளியாகி இருப்பதாகவும், இதனால் பெரும்பாலான டுவிட்டர் பயனாளிகளுக்கு எந்தவித பாதிப்பும் இல்லை என்றும் தகவல்கள் வெளிவந்துள்ளது.

இந்த வசதி அறிமுகம் ஆனதில் இருந்து டுவிட்டருக்கு பெரிய பெருமை எதுவும் கிடைக்காததால் தற்போது இந்த வசதி நிறுத்தப்பட்டதால் எந்த பிரச்சனையும் இல்லை. டுவிட்டர் டிவி செயலியால் பார்க்கப்பட்டு வந்த வீடியோக்கள் இனி அதில் இருக்காது. டுவிட்டர் பயனாளிகளுக்கு இனிமேல் தங்களுடைய சொந்த டைம்லைனில் இந்த வசதி இருக்காது என்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த ஆண்டு டுவிட்டர் ஆப்பிள் நிறுவனம், ஃபையர் டிவி மற்றும் எக்ஸ் பாக்ஸ் ஒன் செயலிகளை அறிமுகம் செய்தது. ஆனாலும் இந்த அறிவிப்பை கடந்த 2016ஆம் ஆண்டே செய்துவிட்டது என்பதும் தெரிந்ததே. கடந்த ஒருவருடமாக இந்த ரோகு செயலி டுவிட்டருக்கு செயல்பட்டு வந்த நிலையில் தற்போது அது நீக்கப்பட்டுவிட்டது.

ஆண்ட்ராய்டு டிவி வசதி இனி டுவிட்டரில் இல்லை.!

மேலும் டுவிட்டர் நிறுவனம் சர்வர் பக்கத்தில் இருந்து செய்யப்பட்டுள்ள புதிய அப்டேட் காரணமாக மூன்றாவது பார்ட்டியின் ஏபிஐ வசதிகள் நிறுத்தப்பட்டுள்ளது. இதனால் தேவையில்லாத செயலிகளான டுவிட்டரிஃபிக், டாலோன்ஸ் மற்றும் டுவிட்பாட் போன்றவற்றை டுவிட்டர் பயனாளிகள் இனி தவிர்க்க முடியும்

எனவே இனிமேல் ஏபிபிஐ செயல்பாடுகளின் நோட்டிபிகேஷன் செயல்படாது. அதேபோல் இனிமேல் டுவிட்டர் பயனாளிகளின் டைம்லைன் தானாக ரிப்ரெஷ் ஆகாது என்பதும் ஒரு நன்மையான செய்தி. இந்த வசதி வரும் ஜூன் முதல் அமல்படுத்தப்படும் என்று செய்திகள் வெளிவந்தாலும் நிச்சயம் மூன்று மாதங்களுக்குள் கிடைத்துவிடும் என்றே கூறப்படுகிறது.

Best Mobiles in India

English summary
Twitter will discontinue its official apps for Android TV, Roku and Xbox ; Read more about this in Tamil GizBot
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+
X