டுவிட்டர் வெளியிடும் புதிய வசதியின் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா?

By Siva
|

சமூக வலைத்தளங்களை பொறுத்தவரையில் ஃபேஸ்புக், அல்லது ஸ்னாப்சேட் அளவுக்கு டுவிட்டர் புகழ் பெறவில்லை என்றாலும் டுவிட்டருக்கு என்று தனித்தன்மை உண்டு என்பதை யாராலும் மறுக்க முடியாது. உலகில் நடைபெறும் பிரேக்கிங் செய்திகள் உடனுக்குடன் அப்டேட் ஆவது டுவிட்டரில்தான்.

டுவிட்டர் வெளியிடும் புதிய வசதியின் சிறப்பு அம்சம் என்ன தெரியுமா?

மேலும் முக்கிய விவிஐபிக்கள் குறித்த செய்திகள் உடனுக்குடன் பதிவு செய்யப்படுவதும் டுவிட்டரில் மட்டுமே. எனவே நீங்கள் ஒரு டுவிட்டர் பயனாளியாக இருந்தால் காலரை தூக்கி வைத்து கொண்டு சில நல்ல செய்திகளையும் படியுங்கள்

டுவிட்டரில் காணப்படும் ஒரு புதிய வசதி என்னவெனில் டுவிட்டர் பயனாளிகளின் முக்கிய டுவீட்டுக்களை மொத்தமாக ஸ்க்ரீன்ஷாட் முறையில் வெளியிட அனுமதிக்கவுள்ளது.

தி நெக்ஸ்ட்வெப் என்ற சமூகவலைத்தள இயக்குனர் மாட் நவீரா என்பவர் இந்த ஸ்க்ரீன் ஷாட் டுவிட்டர்களை பதிவு செய்து தொடங்கி வைத்துள்ளார். இதன் மூலம் பல டுவீட்டுக்களை ஒரே நேரத்தில் மொத்தமாக பதிவு செய்ய முடியும்

மாட் நவீராவின் ஸ்க்ரீன்ஷாட் டுவீட்டுக்கள் வெளிவந்துள்ளதில் இருந்தே இந்த புதிய வசதி தொடங்கப்பட்டுள்ளதாகவே கருதப்படுகிறது. சில நேரங்களில் நாம் சொல்ல நினைத்ததை 140 கேரக்டர்களுக்குள் சொல்ல முடியாத நிலை ஏற்படும்போது இந்த புதிய வசதி ஒரு வரப்பிரசாதமாக டுவிட்டர் பயனாளிகளுக்கு கிடைத்துள்ளது.

2017 செப்டம்பர் 22 : நான்கு கேமராக்களுடன் ஹவாய் மாய்மங் 6 அறிமுகம்.!2017 செப்டம்பர் 22 : நான்கு கேமராக்களுடன் ஹவாய் மாய்மங் 6 அறிமுகம்.!

மேலும் முன்பெல்லாம் தொடர் டுவீட்டுக்கள் போட்டால் நேரம் வித்தியாசம் காரணமாக அவை தொடர்ச்சியாக பதிவாக முடியாத நிலை ஏற்படும். அதற்குள் இடையிலும் சில டுவீட்டுக்கள் பதிவாகி தொடரை இழக்க வேண்டிய நிலை வரும். ஆனால் இந்த புதிய வசதியில் நாம் சொல்ல நினைத்ததை முழுமையாக, தொடர்ச்சியாக கூறிவிடலாம்

இந்த டுவிட்டர்ஸ்டார்ம் என்ற புதிய வசதி அனைத்து டுவிட்டர் பயனாளிகளுக்கும் கிடைக்காது என்று டெக்ரன்ஸ் பப்ளிகேசன் அறிவித்துள்ளது. இப்போதைக்கு சோதனை முயற்சியாக ஒருசிலருக்கு மட்டுமே கிடைத்துள்ள இந்த புதிய வசதி அனைத்து டுவிட்டர் பயனாளிகளுக்கும் கிடைக்கும் நாள் குறித்த சரியான தகவல் இதுவரை இல்லை

ஆனால் மிக விரைவில் இதுகுறித்த அறிவிப்பு வெளிவரும் என்று அனைவரும் காத்திருக்கின்றனர்.

Best Mobiles in India

Read more about:
English summary
The feature will enable Twitter users to compose multiple threaded Tweets at one time and publish them all at once.

சிறந்த தொலைபேசி

உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
X